- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- starters
முட்டையில் பல ரெசிபிஸ் இருக்கு இருந்தாலும் இந்த முட்டையில் நம்ம சுக்கா செய்து சாப்பிட போறோம். மட்டன் சுக்கா, சிக்கன் சுக்கா சாப்டு இருப்போம். இப்ப நம்ம முட்டையில் சிக்க்கா செய்ய போறோம். எல்லா உணவுப் பொருள்களையும் எல்லாவிதமான உணவையும் செய்ய ஆரம்பிச்சாசி. அதாவது சைவ உணவுகளை கூட அசைவ உணவு சுவையில் செய்ய ஆரம்பிச்சுட்டோம்.
சைவத்துல அசைவ உணவோடு சுவையை கொண்டு வரதுக்கு நிறைய பொருள்களும் வந்திருச்சு. அதே மாதிரி இப்போ ஒரு சில உணவுகளில் மட்டும் செய்ய கூடிய உணவு வகைகளை எல்லாம் உணவு பொருளிலும் செய்ய துவங்கியாச்சி. எல்லாமே ரொம்ப ருசியாவும் சுவையாகவும் இருக்கிறதுனால விதவிதமா உணவுகளை புதுசு புதுசா செய்றப்போ அது எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும்.
இந்த சுவையான முட்டை எப்படி செய்வது என்று தெரிஞ்சிக்க இருக்கோம். பொதுவாக முட்டையில் ஆம்லெட், பொரியல் , குழம்பு ,வறுவல் இது மாதிரி செய்தா எல்லாருமே அதிகமா சாப்பிடுவாங்க. அதுலயும் இந்த மாதிரி சுக்கா எல்லாம் செய்து கொடுக்கும் போது ரொம்பவே பிடிக்கும்.
இந்த முட்டை சுக்கா எல்லா சாதத்துக்குமே ரொம்ப டேஸ்டா இருக்கும் சேர்த்து வைத்து சாப்பிடுவதற்கு. இந்த மாதிரி மட்டன் சுக்கா ஸ்டைல நீங்களும் முட்டை சுக்கா ட்ரை பண்ணி வீட்ல எல்லாரும் கொடுத்து பாருங்க எல்லாருக்கும் ரொம்பவே பிடிக்கும். சரி வாங்க இந்த சுவையான முட்டை சுக்கா எப்படி செய்வது தெரிஞ்சுக்கலாம் வாங்க.
இதையும் படியுங்கள் : ருசியான விருதுநகர் மட்டன் சுக்கா இப்படி செய்து பாருங்க! ஆஹா இதன் சுவையே தனி தான்!
Ingredients
Method
முட்டையை வேக வைத்து ஓட்டை உரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் மஞ்சள் கருவை உடையாமல் முட்டையை வெள்ளை கருவை தனியாக எடுத்து சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
பிறகு மிக்ஸி ஜாரில் பட்டை, சோம்பு, தனியா விதைகள், மிளகுகு சேர்த்து அரைக்க வேண்டும்.
பிறகு அதில் துருவிய தேங்காய், சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அடுப்பில் ஒரு வாணலியில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.பின் மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிவிடவும்.
பிறகு இதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து சிறிது நீரை ஊற்றி கிளறி விட வேண்டும். மசாலா நன்றாக சுண்டி வந்த பிறகு அதில் நறுக்கிய முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
இறுதியாக உடைக்காமல் எடுத்து வைத்த மஞ்சள் கருவை சேர்த்து உடைக்காமல் மசாலாவில் கலந்து விட்டு கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கினால் ருசியான சேலம் சுக்கா வறுவல் தயார்.






