- Advertisement -
வீட்டில் காய்கறி எதுவும் இல்லை என்றல் உடனே நமக்கு நமக்கு காய் கொடுப்பது முட்டை தான். முட்டை சமையல் என்றல் அனைவரும் வேண்டாம் என்று சொல்லலாம் சாப்பிட்டு விடுவார்கள். முட்டை ருசியில் மட்டும் சிறந்தது இல்லை, ஆரோக்கியமானதும் கூட. அப்படி பட்ட சமையல் தான் இந்த முட்டை பருப்பு தொக்கு. பொதுவா பருப்பையும் முட்டையையும் ஒண்ணா சேர்க்கவே மாட்டோம். இந்த டிஷ் வித்தியாசமானது.
-விளம்பரம்-
முட்டை – பருப்பு தொக்கு | Egg Dal Curry Recipe in Tamil
முட்டை ருசியில் மட்டும் சிறந்தது இல்லை, ஆரோக்கியமானதும் கூட. அப்படி பட்ட ருசீகர சமையல் தான் இந்த முட்டை பருப்பு தொக்கு. பொதுவா பருப்பையும் முட்டையையும் ஒண்ணா சேர்க்கவே மாட்டோம். இந்த டிஷ் வித்தியாசமானது.
Yield: 4
Calories: 251kcal
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கப் துவரம் பருப்பு
- 3 முட்டை
- 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
- 3 தக்காளி பொடியாக நறுக்கியது
- 3 காய்ந்த மிளகாய்
- 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
- 2 தேக்கரண்டி நெய்
- சிறிது மஞ்சள் தூள்
- சிறிது கடுகு
- சிறிது சீரகம்
- 1 கப் தேங்காய்த் துருவல்
- சிறிது கொத்துமல்லி பொடியாக நறுக்கியது
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- துவரம் பருப்பை ஒரு பாத்திரத்தில்வேக வைக்கவும். முக்கால்வாசி வெந்ததும் வெங்காயம், தக்காளி, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்க்கவும்.
- எல்லாம் நன்கு குழைந்து வெந்ததும், முட்டைகளை உடைத்து அதில் ஊற்றவும்.
- சிறிது நேரம் கொதித்ததும் நெய்யில் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், தாளித்துக்கொட்டி, தேங்காய்த் துருவல், கொத்தமல்லி சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும். சுவையானமுட்டை பருப்புத் தொக்குதயார்.
Nutrition
Serving: 100g | Calories: 251kcal | Carbohydrates: 43g | Protein: 21g | Fat: 65.5g | Cholesterol: 300mg
- Advertisement -