ருசியான ரோட்டோர கடை ஸ்டைலில் முட்டை தோசை ஒருமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்க!

- Advertisement -

ஒரு முறையாவது வீட்டில் ரோட்டோர கடையில் கிடைக்கும் ருசியில் முட்டை தோசை செய்ததுண்டா? செம ருசியாக இப்படி ஒரு முறை முட்டை தோசை செஞ்சு பாருங்க இதையா மிஸ் பன்னோம்ன்னு ஃபீல் பண்ணுவீங்க!

-விளம்பரம்-

ரோட்டோர கடைகளில் கொடுக்கும் முட்டை தோசையின் சுவை ரொம்பவே அட்டகாசமாக இருக்கும். அதிலும் வெண்ணெய் சேர்த்து செய்யப்படும் இந்த தோசை சாப்பிட்டால் வாயில் எச்சில் ஊறிவிடும். அந்த அளவிற்கு சுவை அட்டகாசமாக இருக்கக் கூடிய இந்த தோசையை எப்படி நம்ம வீட்டிலும் செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

இந்த முட்டை தோசையை விதவிதமாக நிறைய வகைகளில் செய்யலாம். அதில் மிக மிக எளிமையான முறையில், அதே சமயம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய வகையில், ஒரு முட்டை தோசை செய்முறை தான் இது. ஒரு சில ரோட்டு கடைகளில் இப்படிப்பட்ட முட்டை தோசை கிடைக்கும். இதை குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் விருப்பமாக சாப்பிடுவார்கள். தோசையோடு சேர்த்து முட்டை சாப்பிட்ட திருப்தியும் நமக்கு கிடைக்கும். வாங்க அந்த ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.

Print
5 from 1 vote

முட்டை தோசை | Egg Dosai Recipe In Tamil

இந்த முட்டை தோசையை விதவிதமாக நிறைய வகைகளில் செய்யலாம். அதில் மிக மிக எளிமையான முறையில், அதேசமயம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய வகையில், ஒரு முட்டை தோசை செய்முறை தான் இது.ஒரு சில ரோட்டு கடைகளில் இப்படிப்பட்ட முட்டை தோசை கிடைக்கும். இதை குழந்தைகளுக்குசெய்து கொடுத்தால் விருப்பமாக சாப்பிடுவார்கள். தோசையோடு சேர்த்து முட்டை சாப்பிட்டதிருப்தியும் நமக்கு கிடைக்கும். வாங்க அந்த ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast
Cuisine: tamil nadu
Keyword: Egg Dosa
Yield: 4
Calories: 240kcal

Equipment

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 கப் தோசை மாவு
  • 2 முட்டை
  •  மிளகு தூள் சிறிதளவு
  • 1 வெங்காயம்
  • வெண்ணெய் தேவைக்கேற்ப

செய்முறை

  • முதலில் வெங்காயத்தை எடுத்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • பின்பு பாத்திரத்தில் முட்டையை எடுத்து சிறிது உப்பு சேர்த்து நன்றாக அடித்து வைக்கவும்.
  • தோசை கல்லை அடுப்பில் வைத்து நன்கு சூடானதும் அதில் தோசை மாவை ஊற்றி, அதன் மேலே அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி, வெங்காயத்தை தூவவும். பின்பு வேகவைத்த தோசையை சுற்றி சிறிது வெண்ணெய் ஊற்றி இரண்டு புறமும் திருப்பி போடவும்.
  • இறுதியில் மிளகுத்தூள் தூவி பரிமாறினால் சுவையான முட்டை தோசை தயார். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ரொம்ப பிடிக்கும்..

Nutrition

Serving: 100g | Calories: 240kcal | Carbohydrates: 36g | Protein: 5.5g | Fat: 4.1g | Cholesterol: 25mg | Potassium: 104mg | Calcium: 16mg | Iron: 0.9mg