குழந்தைகளுக்கு பிடிச்ச மாதிரி டிஃபரண்டா இந்த எக் பிங்கர்ஸ் ஒரு தடவை செஞ்சு கொடுங்க!!!

- Advertisement -

இப்ப இருக்க எல்லா குழந்தைகளுக்குமே நல்லா மொறு மொறுன்னு காரசாரமா சாப்பிட்டா தான் ரொம்ப பிடிக்கும். சிக்கன் விங்க்ஸ், சிக்கன் நக்கட்ஸ், பீட்சா பர்கர் ,ரிங்ஸ், பிரெஞ்ச் ப்ரைஸ், ஷவர்மா அப்படின்னு இந்த மாதிரியான உணவுகள் தான் ரொம்ப பிடிக்குது. ஆனா ஆரோக்கியமான உணவுகள் நிறையவே இருக்கு அதெல்லாம் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்காது அதனால குழந்தைகளுக்கு என்ன ரொம்ப பிடிக்குமோ அதுதான் நம்ம கடைகளில் வாங்கி கொடுப்போம் ஆனால் இந்த மாதிரியான உணவுகளை கடைகள்ல வாங்கி கொடுக்காம நம்ம வீட்லயே செஞ்சு கொடுத்தோம் அப்படின்னா அது கொஞ்சமாவது ஆரோக்கியமானதா இருக்கும்.

-விளம்பரம்-

குழந்தைகளுக்கு பிடித்தது நம்ம வீட்லயே செஞ்சு கொடுத்தோம் அப்படின்னா குழந்தைங்க இன்னும் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. ஸ்கூலுக்கு போயிட்டு வர்ற குழந்தைகளுக்கு இந்த எக் ஃபிங்கர்ஸ் செஞ்சு கொடுத்தா போதும் ரெண்டு நிமிஷத்துல ஃபுல்லா காலி பண்ணிட்டு அதுக்கப்புறம் படிக்க ஆரம்பிச்சிடுவாங்க படிக்கிற குழந்தைகளுக்கு நம்மளும் கொஞ்சம் வித்தியாசமா அவங்களுக்கு புடிச்ச மாதிரி செஞ்சு கொடுத்தா தானே அவங்களும் நல்லா படிப்பாங்க.

- Advertisement -

இந்த எக் சிங்கர்ஸ் நம்ம செஞ்சு கொடுத்தா ரொம்பவே வித்தியாசமான முறையில் இருக்கும். இதுவரைக்கும் நம்ம இந்த மாதிரி சாப்பிட்டே இருக்க மாட்டோம் அந்த அளவுக்கு இதோட டேஸ்ட் ரொம்ப டிஃபரண்டா சாப்பிடுவதற்கு நல்லா வெளியில் மொறு மொறுன்னு உள்ளுக்குள்ள சாப்டா அவ்வளவு அருமையான ருசியில் இருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பரான ஸ்நாக்ஸ் ரெசிபியான எக் பிங்கர்ஸ் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்

Print
No ratings yet

எக் பிங்கர்ஸ் | Egg Fingers Recipe In Tamil

குழந்தைகளுக்கு பிடித்தது நம்ம வீட்லயே செஞ்சு கொடுத்தோம் அப்படின்னா குழந்தைங்க இன்னும் ரொம்ப விரும்பிசாப்பிடுவாங்க. ஸ்கூலுக்கு போயிட்டு வர்ற குழந்தைகளுக்கு இந்த எக் ஃபிங்கர்ஸ் செஞ்சுகொடுத்தா போதும் ரெண்டு நிமிஷத்துல ஃபுல்லா காலி பண்ணிட்டு அதுக்கப்புறம் படிக்க ஆரம்பிச்சிடுவாங்கபடிக்கிற குழந்தைகளுக்கு நம்மளும் கொஞ்சம் வித்தியாசமா அவங்களுக்கு புடிச்ச மாதிரிசெஞ்சு கொடுத்தா தானே அவங்களும் நல்லா படிப்பாங்க. இதுவரைக்கும் நம்ம இந்த மாதிரி சாப்பிட்டே இருக்க மாட்டோம்அந்த அளவுக்கு இதோட டேஸ்ட் ரொம்ப டிஃபரண்டா சாப்பிடுவதற்கு நல்லா வெளியில் மொறு மொறுன்னுஉள்ளுக்குள்ள சாப்டா அவ்வளவு அருமையான ருசியில் இருக்கும்.
Prep Time5 minutes
Active Time8 minutes
Course: Side Dish, snacks
Cuisine: tamil nadu
Keyword: egg fingers
Yield: 4
Calories: 245kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 4 முட்டை
  • 1 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1/2 கப் மைதா மாவு
  • 2 டீஸ்பூன் பால்
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா
  • பிரட் கிரம்ஸ் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டை மிளகு தூள் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
  • அதனை மற்றொரு பாத்திரத்தில் மாற்றி ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்
  • ஒரு பாத்திரத்தில் ஒரு முட்டை பால் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்
  •  
    ஒரு தட்டில் மைதா மாவு மிளகாய் தூள் கரம் மசாலா, பிரட் கிரம்ஸ் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்துவைத்துக் கொள்ளவும். வேக வைத்துள்ள முட்டையை நீளமாக வெட்டி அதனை முதலில் பால் முட்டை கலவையில் போட்டு எடுத்துக் கொள்ளவும்.
     
  • பிறகு அதனை கலந்து வைத்துள்ள மைதா மாவு பிரட் கிரம்ஸில் போட்டு நன்றாக பிரட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பிரட்டி வைத்துள்ள முட்டை துண்டுகளை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்தால்சுவையான எக் ஃபிங்கர்ஸ் தயார்

Nutrition

Serving: 300g | Calories: 245kcal | Carbohydrates: 199g | Cholesterol: 1mg | Sodium: 228mg | Potassium: 3.2mg | Vitamin A: 13IU | Calcium: 22mg

இதையும் படியுங்கள் : மீதமான சாதத்தில் சூப்பரான முட்டை ரைஸ் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இதன் சுவை தாரறுமாறாக இருக்கும்!