- Advertisement -
கடைகளில் வாங்கி சாப்பிடும் முட்டை பக்கோடாவை விட நாம் வீட்டிலேயே செய்யும் இந்த முட்டை பக்கோடா ரொம்பவே சுவையாக இருக்கும். நல்ல ஆரோக்கியமுள்ள இந்த முட்டை பக்கோடா செய்வதற்கு ரொம்பவே சுலபம் தான். முட்டையை வேக வைத்து, பஜ்ஜி மாவு தயாரித்து செய்யும் இந்த முட்டை பக்கோடா வித்தியாசமான நல்ல சுவையுடன் இருக்க போகிறது. முட்டை பக்கோடா எளிதாக எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.
-விளம்பரம்-
முட்டை பக்கோடா | Egg Pakoda Recipe In Tamil
கடைகளில் வாங்கி சாப்பிடும் முட்டை பக்கோடாவை விட நாம் வீட்டிலேயே செய்யும் இந்த முட்டை பக்கோடா ரொம்பவே சுவையாக இருக்கும். நல்ல ஆரோக்கியமுள்ள இந்த முட்டை பக்கோடா செய்வதற்கு ரொம்பவே சுலபம் தான். முட்டையை வேக வைத்து, பஜ்ஜி மாவு தயாரித்து செய்யும் இந்த முட்டை பக்கோடா வித்தியாசமான நல்ல சுவையுடன் இருக்க போகிறது. முட்டை பக்கோடா எளிதாக எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம்நாம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.
Yield: 4
Calories: 0.18kcal
Equipment
- 1 கடாய்
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 4 முட்டை
- 50 கிராம் கடலை மாவு
- 1/2 டீஸ்பூன் மிளகாய்தூள்
- 1 சிட்டிகை சமையல் சோடா
- பொரிக்க எண்ணெய்
- உப்பு தேவையானஅளவு
செய்முறை
- முட்டைகளை நன்கு வேக வைத்துக் கொள்ளவும். வெந்த முட்டை நன்கு ஆறிய பிறகு, அதை இரண்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- கடலை மாவு, உப்பு, சமையல் சோடா, மிளகாய் தூள் முதலியவைகளை தண்ணீர் விட்டு இளகிய பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
- வெட்டிய முட்டை துண்டுகளை மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போடவும். பொன்னிறமாக வறுபட்ட பின் இறக்கி தக்காளி சாஸூடன் பரிமாறவும்.
Nutrition
Serving: 100g | Calories: 0.18kcal | Carbohydrates: 0.4g | Protein: 6.3g | Fat: 6.8g
- Advertisement -