பக்கோடா இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. பக்கோடாக்களில் பல வகை உண்டு. அதில் வெங்காய பக்கோடா, முந்திரி பக்கோடா, சிக்கன் பக்கோடா, இறால் பக்கோடா, பன்னீர் பக்கோடா, மற்றும் உருளைக்கிழங்கு பக்கோடா மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது சேனைக்கிழங்கு பக்கோடா.
தமிழ்நாட்டில் பக்கோடா என்று அழைக்கப்படும் இவை, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் பஜ்ஜி என்றும், மகாராஷ்டிராவில் பக்கோரா ன்றும் அழைக்கப்படுகிறது. இந்திய துணை கண்டத்தில் உதயமான இவை மெல்ல மெல்ல வங்கதேசம், பாகிஸ்தான், மற்றும் நேபாளத்திலும் பிரபலம் அடைந்திருக்கிறது.
மாலை நேரங்களில் காபியுடன் பக்கோடாவை சுவைப்பது பெரும்பாலானோருக்கு மிகவும் விருப்பமான காம்பினேஷன் ஆக இருக்கிறது. விருந்தினர்களின் வருகையின்போதும், குழந்தைகளின் சிணுங்கலின்போதும் இல்லத்தரசிகளின் மெனுவில் இடம்பெறுவதும் பக்கோடாதான். ஒரு சில பொருள்களை வைத்துக்கொண்டே சுலபமாகத் தயாரித்துவிடக்கூடிய பக்கோடாவால் குடும்பத்தினரையும் உறவினர்களையும் மகிழ்ச்சியடைய செய்ய முடியும்.
சேனைக்கிழங்கு பக்கோடா | Elephant Yam Pakoda In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/4 கி சேனைக்கிழங்கு
- 1 உருளைக்கிழங்கு
- 2 பெரியவெங்காயம்
- கொத்துமல்லி இலை
- கருவேப்பிலை சிறிதளவு
- 5 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
- 3 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
அரைக்க
- 3 வரமிளகாய்
- 3 பூண்டு
- 2 துண்டு இஞ்சி
செய்முறை
- முதலில் சேனைக்கிழங்கு மற்றும் உருளைக்கிழங்கை தோல் சீவி நன்கு கழுவி விட்டு துருவிக் கொள்ளவும்.
- ஒரு மிக்ஸியில் வர மிளகாய், இஞ்சி,பூண்டு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- பின்னர் ஒரு பாத்திரத்தில் துருவிய சேனைக்கிழங்கு, துருவிய உருளைக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை, கடலை மாவு, அரிசி மாவு, உப்பு மற்றும் அரைத்த விழுதை சேர்த்து தண்ணீர் சேர்காமல் நன்கு பிசைந்து கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்த மாவை சிறிது சிறிதாக சேர்த்து பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான மொறு மொறு சேனைக்கிழங்கு பக்கோடா தயார்.