நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் எலுமிச்சை பழத்தின் அதிசய சக்திகள்!

- Advertisement -

நாம் அப்படியே காலதத்தை சிறிது பின்னோக்கி நகர்த்தி சென்றால் ஒவ்வொருவருடைய வீட்டின் நிலை வாசலிலும் எலுமிச்சை பழம் என்று சொல்லக்கூடிய தேவ கனி ஏதாவது ஒரு வழிமுறையில் கண்டிப்பாக இருக்கும். ஒரு சிலர் வீட்டில் எலுமிச்சம் பழ மாலையாகவும்! ஒரு சிலர் வீட்டில் ஒரு மஞ்சள் துணியில் முடிந்து அதனுடன் சில நாணயங்களை சேர்த்து கட்டி தொங்க விடுவதாக இருக்கட்டும்! சிலர் வீட்டில் எலுமிச்சைபழம் பச்சை மிளகாய் கரி துண்டு சேர்த்து கட்டி தொங்க விட்டிருப்பார்கள். இன்னும் சிலர் அவர் வீட்டில் தினசரி இரவு படுப்பதற்கு முன்பு ஒரு எலுமிச்சம் பழத்தை பாதியாக வெட்டி இரு பக்கத்திலும் குங்குமத்தை தடவி நிலை வாசலில் இரு பக்கம் வைப்பது வழக்கமாக வைத்திருப்பார்கள்! பெரிய பெரிய முதலாளிமார்கள் கடைகள் அல்லது அவர்களின் ஆபீஸ்க்கு சென்று பார்த்தால் அவர்கள் அமர்ந்திருக்கும் மேஜையில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு எலுமிச்சம் பழத்தை போட்டு வைத்திருப்பார்கள்! இதற்கெல்லாம் பின்னாடி நமது முன்னோர்கள் ஒரு அறிவியல் காரணத்தை தான் ஒளித்து வைத்திருக்கிறார்கள் இதெல்லாம் மூடநம்பிக்கை சார்ந்த ஒரு விஷயம் என்று பலர் கூறினாலும் அதற்குப்பின் ஒளிந்திருக்கும் ஆன்மீக காரணத்தை பற்றி யாரும் பெரிதாக கண்டு கொள்வதில்லை. ஆனால் நாம் அதற்கு பின்னால் உள்ள ஆன்மிக காரணத்தை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் தெளிவாக காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

எலுமிச்சை பழத்தின் மகத்துவம்

பொதுவாக இந்துக்களின் ஆன்மீகம் சார்ந்த எந்த செயல் எடுத்துக் கொண்டாலும் அதில் இந்த எலுமிச்சம் பழம் என்பது முக்கியமான ஒரு பொருளாக விளங்க கூடியது அப்படி நம் முன்னோர்கள் இந்த எலுமிச்சம் பழத்திற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்று தெரியுமா ? சொல்கிறேன் கேளுங்கள் இந்த எலுமிச்சை பழம் என்பது நமக்கு நேர்மறையான சக்திகளை மட்டும் வழங்க கூடியது. நேர்மறை சக்தி என்றால் நல்ல சக்திகள் என்று எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் எப்படிப்பட்ட துர் சக்திகள் இருந்தாலும் உங்கள் வீட்டில் ஒரு எலுமிச்ச பழம் இருக்கும் போது வீட்டில் உள்ள கெட்ட சக்திகளை அனைத்தையும் தனக்குள் ஈர்த்துக் கொண்டு வெறும் நேர்மறையான நல்ல சக்திகளை மட்டும் வெளியிடக்கூடியது

- Advertisement -

கண்திருஷ்டி

இதனால்தான் கண் திருஷ்டி போன்ற பரிகாரங்களுக்கு நாம் இன்றளவும் எலுமிச்சம்பழத்தை பயன்படுத்துகிறோம். கண் திருஷ்டி என்றால் என்ன ? அதில் திருஷ்டி என்பது பார்வையை குறிக்கக் கூடியது ஒருவர் உங்கள் வீட்டிற்கு வருகிறார் என்றால் உங்கள் வளர்ச்சியில் பார்க்கும்போது அவர்களுடைய பார்வை நேர்மறையான எண்ணங்களுடன் இருந்தால் ஒன்றும் பிரச்சனை இருக்காது. அதை பார்வை கெட்ட எண்ணங்களுடன் எதிர்மறை சக்தியாக இருக்கும் பொழுது அது உங்களை எண்ணெற்ற தீமைகளை விளைவிக்கும். அதனால் நிலை வாசலில் இந்த எலுமிச்சம் பழம் இருக்கும் போது கெட்ட எண்ணங்களுடன் யார் உங்கள் வீட்டிற்கு வந்தாலும் அவர்களுடன் கெட்ட எண்ணங்களை இந்த பழம் ஈர்த்துக் கொண்டு அவர்களை நேர்மறையான எண்ணங்களுடன் உங்களிடம் பேச வைக்கும் அதிசய சக்தி படைத்த பழம் தான் இது அதனால் தான் இதை தேவ கனி என்று சொல்கிறோம்.

மூதேவி

அடுத்ததாக நமது வீட்டை எப்பொழுதும் கூட்டி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்! பழைய பொருட்களை வீட்டில் போட்டு வைக்க கூடாது அப்படி போட்டு வைத்திருந்தால் தரித்திரம் பிடிக்கும் மூதேவி வந்து வீட்டில் அமர்ந்து கொள்வாள் என்றெல்லாம் சொல்வார்கள்! அது உண்மைதான் உங்கள் வீட்டில் லட்சுமி தேவி வாசம் செய்கிறாள் என்றால் உங்கள் வீட்டில் பொன்னும் பொருளும் சேர்ந்து கொண்டே இருக்கும்! அதே உங்கள் வீட்டில் மூதேவி வாசம் செய்யும் பொழுது உங்களிடம் இருக்கக்கூடிய அனைத்து விதமான சொத்து சுகங்களும் சிறது காலத்திலே இழந்து மிகவும் வறுமைக்கு தள்ளப்படுவீர்கள். அப்படிப்பட்ட மூதேவி வீட்டிற்குள் வரக்கூடாது என்பதற்காகத்தான் வீட்டு நிலை வாசலில் எலுமிச்சம் பழத்தையும் பச்சை மிளகாய் மற்றும் கரியை சேர்த்து கட்டி வைப்பார்கள். மூதேவிக்கு புளிப்பு சுவை கார சுவை இதுபோன்ற சுவைகள் எல்லாம் பிடிக்கும் அதனால் உங்கள் வீட்டின் வெளியே இப்படி கட்டி வைத்திருக்கும் இந்த எலுமிச்சை புளிப்பு சுவைத்தையும் பச்சைமிளகாய் எனக்கு கார சுவையை தரும் அதனால் வீட்டிற்கு வரும் மூதேவி இதை மட்டும் சுவைத்துவிட்டு உங்கள் வீட்டு வாசலோடு வெளியேறி விடுவாள்.

எலுமிச்சையை ஒரு டம்பளர் தண்ணீரில் போட்டு வைத்தல்

அடுத்ததாக ஒரு டம்ளர் தண்ணீரில் எலுமிச்சம் பழத்தை போட்டு வைக்கக் கூடியது இதை நாம் ஆன்மீக ரீதியாக எப்படி பார்க்க வேண்டும் என்றால் இது ஒரு பிரசன்னம் செய்யும் முறையாக எடுத்துக் கொள்ளலாம் அதாவது இப்போது கோவிலில் வெள்ளை பூ சிவப்பு பூ போட்டு பிரசன்னம் பார்ப்பார்கள் அல்லவா அதே போல் தான் நீங்கள் தண்ணீரில் எலுமிச்சம் பழத்தை போடும்போது அந்த எலுமிச்சை பழம் தண்ணீரில் மிதக்கும் போது அன்றைய நாள் உங்களுக்கு மிகுந்த லாபத்தை தரக்கூடிய நாளாகவும். அதே எலுமிச்சை பழம் தண்ணீரின் கீழ் மூழ்கும் போது உங்களுக்கு அன்றைய நாள் கஷ்டத்தை தரக்கூடிய நாளாகவும் அமையும் இதன் காரணமாகத்தான் ஒவ்வொரு தொழில் செய்பவர்களின் மேஜையிலும் ஒரு டம்ளர் தண்ணீரில் எலுமிச்சம் பழம் போட்டு வைத்திருக்கிறார்கள். நாம் நாளடைவில் எதற்கு இதை செய்கிறோம் என்ற வழிமுறையை நாம் மறந்து விட்டோம்.

-விளம்பரம்-

இதெல்லாம் விட சில அதிசயங்கள் நடக்கும் நாம் எங்கேயாவது கோவிலுக்கு செல்லும்போது பூசாரி நமக்கு திருநீரு குங்குமம் இதெல்லாம் தரும்பொழுது திடீரென நம்மை கூப்பிட்டு ஒரு எலுமிச்சம் பழத்தை கொடுத்து வீட்டில் போய் பிழிந்து குடும்பத்தில் உள்ள அனைவரையும் குடிக்க சொல்வார். பொதுவாக பூசாரி யாரிடமும் இப்படி சொல்ல மாட்டார் எலுமிச்சம் பழம் கொடுத்தாலும் சாதாரணமாக கையில் கொடுத்து விடுவார். ஆனால் ஒரு சிலரிடம் மட்டும் கூப்பிட்டு பழத்தை கொடுத்து சாறு பிழிந்து குடிக்க சொல்வார் அதற்கு காரணம் பல வருடங்களாக தெய்வங்களோட தெய்வங்களாக இருந்து பூஜை செய்து வரும் பூசாரிக்கு கோவிலுக்கு வரும் பக்தர்களின் முகத்தை பார்த்தாலே தெரிந்து விடும் அவர்கள் கஷ்டத்தில் இருக்கிறார்களா இல்லையா என்பது. அப்படி நீங்கள் மிகுந்த கஷ்டத்துடன் இருப்பவர்களாக இருந்தாலும் பல பிரச்சினைகளை கையுடன் வைத்திருப்பவர்களாக இருந்தாலும் சரி உங்களை பார்த்தவுடன் அந்த பூசாரி கண்டுபிடித்து விடுவார். அதன் பின்பு அம்மனின் பாதத்தில் வைத்திருக்கும் அல்லது அம்மனுக்கு பூஜை செய்து வைத்திருக்கும் பழத்தில் இருந்து ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து தருவார். சாதாரணமாகவே ஒரு எலுமிச்சம் பழம் எதிர்மறையான சக்திகளை உள்வாங்கிக் கொண்டு நேர்மையான செய்திகளை நமக்கு கொடுக்கும் என்பதை பற்றி பார்த்தோம் அதுவும் அம்மன் சன்னதியில் இருந்து கொடுக்கப்படும் எலுமிச்சம்பழத்தில் நல்ல சக்திகள் மிகுந்து காணப்படும் அதில் ஒரு தெய்வீக சக்தி நிறைந்திருக்கும். மேலும் இந்த எலுமிச்சை பழங்களில் ஆக்ரசன சக்தி என்பது அதிகமாக இருக்கும். இதிலிருந்து நாம் சாறை பிழிந்து குடிக்கும் போது நமக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் கஷ்டங்கள் அனைத்தும் காற்றோடு காற்றாக கரைந்து போய்விடும்.

lemon

அடுத்ததாக ஒரு எலுமிச்சை பழத்தை வெட்டி இரண்டு பக்கங்களிளும் குங்குமத்தை பூசுவது இதற்கான உண்மையான காரணம் என்னவென்று பார்த்தால் எலுமிச்சம் பழம் இயற்கையாகவே கெட்ட சக்திகளை உள்வாங்க கூடிய திறன் உள்ளது. அதனுடன் பூச படும் குங்குமம் எப்படி தயாரிக்கப்படுகிறது அந்த குங்குமம் மஞ்சளை வைத்து தான் தயாரிக்கப்படுகிறது. மஞ்சள் என்பது நம் வீட்டிற்கு மங்களத்தையும் சுபிக்ஷசத்தையும் கொடுக்கக் கூடிய ஒரு மங்களகரமான பொருள். இந்த குங்குமத்தை எலுமிச்சம் பழத்தில் தடவி நம் வீட்டின் நிலை வாசலில் வைக்கும்போது நம் வீட்டிற்குள் எந்தவிதமான கெட்ட சக்திகளும் வர முடியாது, கெட்ட எண்ணங்களுடனும் யாராலும் வர முடியாது அப்படி யார் வந்தாலும் அவர்களுடைய கெட்ட எண்ணத்தை வெளியே வை நிறுத்தக்கூடிய சக்தி இந்த எலுமிச்சம் பழத்திற்கு இருக்கும். இதனால்தான் நம் முன்னோர்கள் எலுமிச்சை பழத்தை நமது வீட்டின் நிலை வாசலை கட்டி தொங்க விடுவார்கள். இன்றளவில் இது மூடநம்பிக்கை அதற்கு பின் அறிவியல் ரீதியான காரணங்கள் மட்டும் உள்ளது என்று பலர் கூறினாலும் இதற்கு பின்னால் உள்ள உண்மையான ஆன்மிக காரணம் இதுதான். இன்றளவும் நீங்கள் கிராமப்புறங்களிக்கு சென்று பார்த்தல் அனைவரது வீட்டிலும் இதுபோன்று கட்டி தொங்க விட்டிருப்பார்கள். ஏன் நகர் புறத்திலும் ஆன்மீகத்தில் தன் முழுமையாக ஈடுபடுத்தி கொண்டு உள்ளவர்களுக்கு எலுமிச்சை பழத்தின் மகத்துவம் தெரியும் அவர்கள் தங்கள் வீட்டில் கண்டிப்பாக கட்டி தொங்க விட்டிருப்பார்கள்.