உதிர்ந்த ஒவ்வொரு தலைமுடியும் திரும்ப அசுர வேகத்தில் வளர! இந்த 3 பொருள்கள் போதும்!

- Advertisement -

உங்களுடைய தலையில் இருந்து கொட்டிய தலைமுடி மீண்டும் வளர வேண்டுமா ? இளநரை வராமல் முற்றிலும் தடுக்க வேண்டுமா ? வழுக்கை தலையாக இருந்த உங்கள் தலையில் கூட மறுபடியும் முடி முளைக்க வேண்டுமென்றால் இந்த ஒரு எண்ணைய் உங்களிடம் இருந்தால் மட்டும் போதும்.

-விளம்பரம்-

இந்த ஒரு எண்ணெய் இருந்தால் போதும்

ஆம், சமீப காலங்களிலே பலருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை அதுவும் பெரிய பிரச்சனை இந்த முடி பிரச்சனைதான். சும்மா தலையில் கை வைத்து எடுத்தாலே போதும் நாலு முடி கையோடு வந்து விடுகிறது. வீடெல்லாம் முடியாக தான் கொட்டி கிடைக்கின்றது. இந்த முடி பிரச்சனையை எப்படி சரி செய்வது என்று பார்த்தால் இதற்கு ஒரு எளிய தீர்வு இருக்கிறது ஒரு எண்ணெய் மட்டும் போதும் இந்த எண்ணெய் செய்வதற்கு உங்களுக்கு கருஞ்சீரகம் ஒரு மூன்று டீஸ்பூன், வெந்தயம் ஒரு மூன்று டீஸ்பூன், சுத்தமான தேங்காய் எண்ணெய் 250 மில்லி தேவைப்படும். இந்த எண்ணெய் எப்படி தயார் செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்.

- Advertisement -

செய்முறை

முதலில் இந்த எண்ணெய் செய்வதற்கு நம் கருஞ்சீரகம் சேர்ப்பதற்கு என்ன காரணம் என்றால் உங்கள் தலையில் இருந்து கொட்டிய தலைமுடிகளை திரும்ப வளர வைக்க கருஞ்சீரகம் உதவி செய்யும், சிறு வயதில் இள நரை வருவது போன்ற பிரச்சனைகளையும் இந்த கருஞ்சீரகம் சரி செய்யும். அதனால் இந்த கருஞ்சீரகம் மூன்று டீஸ்பூன் எடுத்து ஒரு மிக்ஸியில் சேர்த்து நன்றாக பொடியாக்கிக் கொள்ளவும். அதன் பின் வெந்தயம் மூன்று டீஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள், இந்த வெந்தயத்தில் புரோட்டின் சத்துக்கள் அதிகமாக உள்ளதால் நம் தலைமுடி உதிர்வதை தடுக்கவும் மற்றும் வெந்தயம் நம் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய ஒரு பொருள் ஆகையால் இந்த வெந்தயத்தை மூன்று டீஸ்பூன் எடுத்து மிக்ஸியில் சேர்த்து நன்கு பொடித்துக் கொள்ளவும். பின்பு நாம் பொடித்து வைத்துள்ள கருஞ்சீரகம் மற்றும் வெந்தயத்தை ஒன்றாக கலந்து கொள்ளுங்கள் பின் இதனுடன் நாம் எடுத்து வைத்திருக்கும் 250 ml சுத்தமான தேங்காய் எண்ணெய் இந்த பொடியுடன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

எப்படி அப்பளை செய்வது

இந்த எண்ணையை இப்போது சூடு படுத்த வேண்டும் இதை நேரடியாக நாம் அடுப்பில் வைத்து சூடு படுத்த கூடாது அதனால் அடுப்பில் முதலில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நாம் வைத்திருக்கும் இந்த எண்ணெய் வைத்திருக்கும் பாத்திரம் மிதக்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அந்த தண்ணீர் கொதித்து வந்ததும் அதில் நாம் வைத்திருக்கின்ற எண்ணை பாத்திரத்தை மிதக்க விட்டு சூடேற்ற வேண்டும். எண்ணெய் நன்கு சூடேறியதும் இதனை நீங்கள் ஒரு டப்பாவில் ஊற்றி பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். பின்பு நீங்கள் குளிப்பதற்கு பத்து நிமிடத்திற்கு முன்பாக பஞ்சி வைத்து அல்லது ஹேர் பிரஸ் வைத்து இந்த எண்ணெயை உங்கள் தலையில் அப்ளை செய்து கொள்ளுங்கள் எண்ணெய் நன்கு தலையில் ஊறியதும் சீயக்காய் அல்லது ஷாம்பு போட்டு தலையை முடியை அலசிக் கொள்ளுங்கள்.

இப்படி நீங்கள் அடிக்கடி இந்த எண்ணெயை உங்கள் தலைமுடிக்கு அப்ளை செய்து வரும் போதும கொட்டிய தலைமுடிகள் மீண்டும் முளைக்கும் தலை முடி உதிரும் பிரச்சனை உள்ளவர்களுக்கு தலை முடி உதிர்வது முற்றிலும் நிறுத்தப்படும், இள நரை வருவது தாமதமாகும்.

-விளம்பரம்-