மொறு மொறு ருசியான மீன் லாலிபாப் இப்படி ரெம்ப ஈஸியாக வீட்டிலயே செய்யலாம்!

- Advertisement -

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் வித்தியாசமான ஸ்நாக்ஸ் கேட்டு நச்சரிக்கிறார்களா? உங்கள் குழந்தைகள் மீனை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் அவர்களுக்கு மாலை வேளையில் மீன் லாலிபாப் செய்து கொடுங்கள். மீன் லாலிபாப் குழந்தைகள் மட்டுமின்றி பெரியோர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் மிகவும் சுவையாக இருக்கும். அதுவும் இது மழைக்காலத்தின் மாலை வேளையில் செய்து சாப்பிட ஏற்ற அற்புதமான ஸ்நாக்ஸ். இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் மீன் சார்ந்த உணவுகளில் மீன் லாலிபாப் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது என்றால் அது மிகை அல்ல. மீன் சார்ந்த உணவுகளை விரும்பி உண்ணும் உணவு பிரியர்களுக்கு மட்டுமின்றி இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவாக இருக்கிறது.

-விளம்பரம்-

மீன் லாலிபாப்பை பொதுவாக மக்கள் பிரியாணி, ஃப்ரைட் ரைஸ், மற்றும் நூடுல்ஸ்க்கு சைடிஷ் ஆக சுவைக்கிறார்கள். இதை நாம் வெறுமனேவும் ஒரு மாலை நேர சிற்றுண்டியாகவும் சுவைக்கலாம். இந்த லாலிபாப்பை விரும்பி உண்பவர்கள் இதை பெரும்பாலும் துரித உணவகங்களிலோ அல்லது ரெஸ்டாரன்ட்களிலோ ஆர்டர் செய்து தான் இதை சுவைக்கிறார்கள். ஆனால் பலருக்கும் தெரியாது இதை நாம் வெகு சுலபமாக வீட்டிலேயே சுகாதாரமான முறையில் செய்து விடலாம் என்று. குழந்தைகளுக்கு ஏதாவது புதுமையாக செய்து கொடுக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க. ஒரு மாதத்திற்கு ஒரு நாள் மீன் லாலிபாப் உங்கள் வீட்டிலேயே எளிமையாக தயார் செய்து சாப்பிடலாம். இப்படி நீங்கள் மீன் லாலிபாப் செய்து கொடுத்தீர்கள் என்றால் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.

- Advertisement -
Print
No ratings yet

மீன் லாலிபாப் | Fish Lollipop Recipe In Tamil

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் வித்தியாசமான ஸ்நாக்ஸ் கேட்டு நச்சரிக்கிறார்களா? உங்கள் குழந்தைகள் மீனை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் அவர்களுக்கு மாலை வேளையில் மீன் லாலிபாப் செய்து கொடுங்கள். மீன் லாலிபாப் குழந்தைகள் மட்டுமின்றி பெரியோர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் மிகவும் சுவையாக இருக்கும். அதுவும் இது மழைக்காலத்தின் மாலை வேளையில் செய்து சாப்பிட ஏற்ற அற்புதமான ஸ்நாக்ஸ். இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் மீன் சார்ந்த உணவுகளில் மீன் லாலிபாப் மசாலா முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது என்றால் அது மிகை அல்ல. மீன் சார்ந்த உணவுகளை விரும்பி உண்ணும் உணவு பிரியர்களுக்கு மட்டுமின்றி இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவாக இருக்கிறது. மீன் லாலிபாப்பை பொதுவாக மக்கள் பிரியாணி, ஃப்ரைட் ரைஸ், மற்றும் நூடுல்ஸ்க்கு சைடிஷ் ஆக சுவைக்கிறார்கள். இதை நாம் வெறுமனேவும் ஒரு மாலை நேர சிற்றுண்டியாகவும் சுவைக்கலாம்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: evening, snacks
Cuisine: Indian
Keyword: Fish Lollipop
Yield: 4 People
Calories: 309kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 வாணலி

தேவையான பொருட்கள்

  • 200 கி மீன்
  • 100 கி உருளைக்கிழங்கு   
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 டீஸ்பூன் நறுக்கிய இஞ்சி, பூண்டு
  • 2 பச்சை மிளகாய்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்

செய்முறை

  • முதலில் மீனை சுத்தம் செய்து கழுவி முள்‌ நீக்கி வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கையும் உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் இஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளி, மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின்‌ மீன் மற்றும் உருளைக்கிழங்கை ஒரு‌ பவுளில் சேர்த்து நன்கு பிசைந்துக் கொள்ளவும். இதனுடன்‌ நாம்‌ வதக்கிய கலவையை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  • பின் தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், நறுக்கிய வெங்காய சேர்த்து கலந்து சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
  • ஒரு பவுளில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும். பின் லாலிபாப் உருண்டைகளை முட்டையில் புரட்டி பின் பிரெட் தூளில் புரட்டி எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இந்த உருண்டையை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும். பின் இந்த மீன் லாலிபாப்பை ஒரு குச்சியில் குத்தி பரிமாறவும்.

Nutrition

Serving: 400g | Calories: 309kcal | Carbohydrates: 3.18g | Protein: 25.2g | Fat: 4.2g | Sodium: 76.5mg | Potassium: 47mg | Fiber: 1.5g | Vitamin A: 32IU | Vitamin C: 27.2mg | Calcium: 104mg | Iron: 2.38mg

இதனையும் படியுங்கள் : மீன் சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி சுவையான மீன் கட்லெட் செய்து கொடுத்தால் தட்டாமல் சாப்பிடுவார்கள்!