ருசியான பூண்டு வெந்தய பொங்கல் இப்படி செய்து பாருங்க உடலுக்கு மிகவும் நல்லது, மருத்துவ குணங்கள் அடங்கியது இந்த பொங்கல்!

- Advertisement -

குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரையில் அனைவருக்கும் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய சுவையான பொங்கல் செய்ய போறோம். அதிகமாக கடைகளில் பொங்கல் வாங்கி விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் கோவில்களில் கிடைக்கக்கூடிய மிளகு பொங்கல் பிரசாதம் என்றால் கூட்டமாக இருந்தாலும் அந்த கூட்டத்திலும் சென்று வாங்கி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு ஒரு சிலருக்கு பிரசாதமாக தரப்படும் பொங்கல் மிகவும் பிடிக்கும். என்னதான் கோவில்களில் நிறைய பிரசாதங்கள் கொடுத்தாலும் பொங்கல் பிரசாதம் மிகவும் ஸ்பெஷல் ஆனது.

-விளம்பரம்-

அவ்வளவு ருசியாக இருக்கும். எவ்வளவு வேண்டுமானாலும் நம்மால் சாப்பிட முடியும் . அந்த அளவிற்கு அதனுடைய ருசியை சொல்லி கொண்டே இருக்கலாம். வீட்டில் விசேஷங்கள் என்று சாமிக்கு படைக்க இந்த பொங்கல் பிரசாதத்தையும் செய்வார்கள். அது மட்டும் இல்லாமல் பொங்கல் பண்டிகை அதிகமாக செய்யபடும் வெண்பொங்கலுக்கு தனி மவுசு உண்டு. அந்த அளவிற்கு இந்த பொங்கலின் சுவை மிகவும் அற்புதமாக இருக்கும்.

- Advertisement -

அதிலும் நாம் இன்று பூண்டு வெந்தயம் வைத்து உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய பொங்கல் செய்யப் போகிறோம். பொதுவாக பூண்டு மற்றும் வெந்தயம் எண்ணற்ற நன்மைகள் உண்டு என்பார்கள். பூண்டை நாம் சாப்பிட்டு வந்தால் பசி எடுக்காதவர்களுக்கு நன்றாக பசியை தூண்டும், உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை சுத்தம் செய்து ரத்தத்தையும் சுத்திகரிக்கும், அதுமட்டுமில்லாமல் கர்ப்பிணி பெண்களுக்கு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் வெட்டைசூட்டை தணிக்கும் பிரசவலிகுறையும் .

இப்படி எண்ணெற்ற  நன்மைகள் உள்ள இந்த பூண்டு வெந்தய பொங்கல் செய்து கொடுத்தால் குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை விரும்பியும் சாப்பிடுவார்கள். அதே நேரத்தில் ஆரோக்கியமானதும் கூட. இந்த அருமையான பூண்டு வெந்தய பொங்கல் எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.

Print
5 from 1 vote

பூண்டு வெந்தய பொங்கல் | Garlic Fenugreek Pongal In Tamil

நாம் இன்று பூண்டு வெந்தயம் வைத்து உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய பொங்கல் செய்யப் போகிறோம். பொதுவாக பூண்டு மற்றும் வெந்தயம் எண்ணற்ற நன்மைகள் உண்டு என்பார்கள். பூண்டை நாம் சாப்பிட்டு வந்தால் பசி எடுக்காதவர்களுக்கு நன்றாக பசியை தூண்டும், உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை சுத்தம் செய்து ரத்தத்தையும் சுத்திகரிக்கும், அதுமட்டுமில்லாமல் கர்ப்பிணி பெண்களுக்கு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் வெட்டைசூட்டை தணிக்கும் பிரசவலிகுறையும் .
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast
Cuisine: tamil nadu
Keyword: Garlic Fenugreek Pongal
Yield: 4
Calories: 217kcal

Equipment

  • 1 குக்கர்

தேவையான பொருட்கள்

  • 1 கப் பச்சரிசி
  • 1 கைப்பிடி முருங்கை கீரை
  • 10 பூண்டு
  • 1 ஸ்பூன் வெந்தயம்
  • 1/4 கப் தேங்காய் பால்
  • 2 டேபிள் ஸ்பூன் நெய்
  • 1/2 ஸ்பூன் மிளகு
  • 1/2 ஸ்பூன் சீரகம்
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் ஒரு குக்கரில் அரிசியை சுத்தம் செய்து சேர்த்து  கொள்ளவேண்டும். பின்பு பூண்டு , வெந்தயம் , முருங்கைகீரை, தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து இரண்டு விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.
  •  
    பிறகு பச்சரிசி , பூண்டு , வெந்தயம் நன்றாக வெந்ததும்  பூண்டை நன்றாக மசித்து கொள்ளவும்.
  • பிறகு அடுப்பில் கடாயை வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் மிளகு, சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
  • பிறகு வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் சாதத்தில் இந்த தாளிப்பை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  • இறுதியாக தேங்காய் பால் சேர்த்து நன்றாக கலந்து விட்டு பரிமாறினால் சுவையான பூண்டு வெந்தய பொங்கல் தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 217kcal | Carbohydrates: 56g | Protein: 18g | Trans Fat: 1g | Cholesterol: 10mg | Sodium: 5mg | Potassium: 382mg | Fiber: 9g | Sugar: 2g

இதையும் படியுங்கள்: தித்திக்கும் சுவையில் கருப்பட்டி பொங்கல் இப்படி செய்து பாருங்க! வீட்டில் உள்ள அனைவரும் விருப்பி சாப்பிடுவார்கள்!

-விளம்பரம்-