நெய் மிதக்க மிதக்க ருசியான நெய்யப்பம் ஒரு தரம் இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

- Advertisement -

அப்பம் என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது தமிழ் கடவுள் முருகன் தான். முருகருக்கு மிகவும் பிடித்த ஒன்றுதான் இந்த நெய் அப்பம். முருகனுக்கு நெய்வேத்தியமாக நாம் இந்த நெய்யப்பத்தை படைக்கலாம். இந்த நெய் அப்பம் குழந்தைகள் மட்டுமல்லாமல் அனைத்து வயதில் இருக்கும் மிகவும் பிடித்தமான இந்த நெய் அப்பம் கேரளாவில் தான் மிகவும் ஃபேமஸான ஒன்று. கார்த்திகை தீபம் அன்று அனைவரது வீட்டிலும் இந்த அப்பம் செய்து முருகருக்கு நெய்வேத்தியமாக படைப்பார்கள்.

-விளம்பரம்-

அப்படி நாம் முருகருக்கு அப்பத்தை நெய்வேதியம் ஆக படைத்தால் அது மிகவும் விசேஷமானது. மாலை நேரத்தில் குழந்தைகள் ஏதாவது ஸ்னாக்ஸ் கேட்டால் நாம் இந்த அப்பத்தை செய்து கொடுக்கலாம் நெய் அதிகமாக விட்டு செய்வதால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது தான்.

- Advertisement -

நம் வீட்டில் ஏதாவது ஒரு விசேஷம் வந்தால் கூட இனிப்பிற்காக இந்த நெய் அப்பத்தை செய்து ருசிக்கலாம். அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த சுவையான நெய் அப்பம் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

Print
5 from 1 vote

நெய்யப்பம் | Ghee Appam Recipe In Tamil

அப்பம்என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது தமிழ் கடவுள் முருகன் தான். முருகருக்கு மிகவும் பிடித்த ஒன்றுதான் இந்த நெய் அப்பம். முருகனுக்கு நெய்வேத்தியமாக நாம் இந்த நெய்யப்பத்தை படைக்கலாம். இந்த நெய் அப்பம் குழந்தைகள் மட்டுமல்லாமல் அனைத்து வயதில் இருக்கும் மிகவும் பிடித்தமான இந்த நெய் அப்பம் கேரளாவில் தான் மிகவும் ஃபேமஸான ஒன்று. கார்த்திகை தீபம் அன்று அனைவரது வீட்டிலும் இந்த அப்பம் செய்து முருகருக்கு நெய்வேத்தியமாக படைப்பார்கள்.
Prep Time5 minutes
Active Time9 minutes
Course: Breakfast, snacks, sweets
Cuisine: tamil nadu
Keyword: Ghee Appam
Yield: 4
Calories: 155kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 கப் அரிசி மாவு
  • 3/4 கப் கோதுமை மாவு
  • 1/2 கப் துருவிய வெல்லம்
  • 1/2 கப் தேங்காய்
  • 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 1 சிட்டிகை உப்பு
  • 1/4 கப் நெய்
  • சமையல் சோடா சிறிதளவு

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் துருவிய வெல்லம் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரையும் வரை கொதிக்க வைக்கவும்
  • மற்றொரு பாத்திரத்தில் அரிசி மாவு, கோதுமை மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்.அதனுடன் துருவிய தேங்காய், உப்பு, கரைத்து வைத்துள்ள வெல்லம், பேக்கிங் சோடா சேர்த்து கலக்கவும்.
  • இட்லி மாவு பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்ளவும். ஒரு பணியார கல்லில் நிறைய நெய் ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து காய விடவும்.
  • ஒவ்வொரு குழியிலும் முக்கால் அளவிற்கு மாவு ஊற்றி வெந்ததும் திருப்பி போடவும்.
  • இருபுறமும் நன்றாக வெந்தவுடன் சூடாக எடுத்து பரிமாறினால் சுவையான நெய் அப்பம் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 155kcal | Carbohydrates: 217g | Fat: 0.33g | Fiber: 1g