தித்திப்பான சுவையில கருப்பட்டி நெய் மைசூர் பாக் செஞ்சு பாருங்க!

- Advertisement -

மைசூர் பாக் னா யாருக்கு தான் பிடிக்காது எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். மைசூர் பார்க்குணமா கடைகள்ல வாங்கி சாப்பிட்டால் செம டேஸ்டா இருக்கும் மைசூர்பாக்கலாம் நம்மளால வீட்டுல செய்ய முடியாது அப்படின்னு நம்ம நினைச்சுட்டு இருப்போம் ஆனால் அதுதான் தப்பு வீட்டிலேயே சூப்பரான டேஸ்ட்ல கடையில் கிடைக்கிறத விட அருமையா செய்ய முடியும். அதுவும் கடைகள்ல கிடைக்கிற மாதிரி சர்க்கரை சேர்த்து செய்யாமல் ஆரோக்கியமான முறையில கருப்பட்டி சேர்த்து கருப்பட்டி நெய் மைசூர் பாக் எப்படி செய்வது என்று பார்க்க போறோம்.

-விளம்பரம்-

நெய் சொட்ட சொட்ட கடலை மாவு மட்டும் வச்சு சூப்பரா நெய் மைசூர் பாக் செய்யலாம் குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. எப்பவுமே பண்டிகைகள் விசேஷங்கள் அப்படின்னா கடைகள்ல இருந்து தான் நம்ம மைசூர் இல்லனா மற்ற பலகாரங்கள் எல்லாம் வாங்குவோம். ஆனா விசேஷங்கள் வரும் பொழுது கடைகள்ல வாங்காம வீட்டிலேயே நம்ம இனிப்பு பலகாரங்கள் செய்ததும் ஒரு வகையான சந்தோஷம்தான்.

- Advertisement -

வீட்ல நம்ம செஞ்சு கொடுக்கிற அந்த பலகாரங்களை எல்லாரும் சாப்பிட்டு செம டேஸ்டா இருக்கு அப்படின்னு சொன்னா நமக்கு இன்னும் ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கும். அந்த மாதிரி இந்த நெய் மைசூர் பாக்கு சாப்பிட்டு உங்கள வீட்டில் இருக்கிற எல்லாருமே பாராட்டுவாங்க அந்த அளவுக்கு டேஸ்ட்டா இந்த கருப்பட்டி நெய் மைசூர் பாக் இருக்கும். இப்ப வாங்க இந்த தித்திப்பான மணமான சுவையான கருப்பட்டி நெய் மைசூர் பாக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
5 from 1 vote

கருப்பட்டி நெய் மைசூர் பாக் | Ghee Mysore Pak In Tamil

மைசூர் பாக் னா யாருக்கு தான்பிடிக்காது எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். மைசூர் பார்க்குணமா கடைகள்ல வாங்கி சாப்பிட்டால் செம டேஸ்டா இருக்கும் மைசூர்பாக்கலாம் நம்மளால வீட்டுல செய்ய முடியாது அப்படின்னு நம்ம நினைச்சுட்டு இருப்போம் ஆனால் அதுதான் தப்பு வீட்டிலேயே சூப்பரான டேஸ்ட்ல கடையில் கிடைக்கிறத விட அருமையா செய்ய முடியும். அதுவும் கடைகள்ல கிடைக்கிற மாதிரி சர்க்கரை சேர்த்து செய்யாமல் ஆரோக்கியமான முறையில கருப்பட்டி சேர்த்து கருப்பட்டி நெய் மைசூர் பாக் எப்படி செய்வது என்று பார்க்க போறோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: sweets
Cuisine: tamil nadu
Keyword: Karuppati Ghee Mysore pak
Yield: 4
Calories: 60kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் கடலை மாவு
  • 1 கப் நெய்
  • 1/2 கப் எண்ணெய்
  • 2 கப் கருப்பட்டி
  • 1/4 கப் பால்
  • 1 சிட்டிகை சமையல் சோடா

செய்முறை

  • முதலில் ஒரு கடாயில் கடலை மாவு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  • பிறகு நெய் மற்றும் எண்ணெயை ஒன்றாக சேர்த்து அடுப்பில் ஒரு நிமிடத்திற்கு காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்
  • இப்பொழுது வறுத்து வைத்துள்ள கடலை மாவுடன் காய்ச்சி வைத்துள்ள நெய் மற்றும் எண்ணெயை சிறிது சிறிதாக ஊற்றி கலந்து கிளறிக் கொண்டே இருக்கவும்
  • ஒரு பாத்திரத்தில் கருப்பட்டியை சேர்த்து உடன் தண்ணீர் சேர்த்து கருப்பட்டி நன்றாக கரைந்து பாகுபதத்திற்கு வந்தவுடன் இதனையும் கடலை மாவுடன் கலந்து நன்றாக கிளறி கொண்டே இருக்கவும்
  • அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளற வேண்டும் கிளறி கொண்டே இருக்கும் போது மாவு கொஞ்சம் கெட்டியானவுடன் இறக்கி விடவும்.
  • ஒரு தட்டில் நெய் தடவி செய்து வைத்துள்ள கலவையை அதன் மேல் போட்டு சிறிது நேரம் செட் ஆனதும் உங்களுக்கு தேவையான வடிவத்தில் வெட்டி எடுத்து கொள்ளலாம்
  • சுவையான கருப்பட்டி நெய் மைசூர் பாக் தித்திப்பாக தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 60kcal | Carbohydrates: 17g | Protein: 10g | Sodium: 21mg | Fiber: 7g | Sugar: 0.02g