இரண்டு மாதம் ஆனாலும் கெடாத இஞ்சி பூண்டு விழுது பக்குவமாக செய்வது எப்படி ?

- Advertisement -

நாம் தினசரி செய்யும் பொரியல், கிரேவி, குழம்பு, கூட்டு, பிரியாணி என நாம் செய்யும் அனைத்து உணவு பொருட்களிலும் முக்கியமாக பயன்படுத்துவது இஞ்சி பூண்டு விழுது. ஆம் நாம் செய்யும் சமைக்கும் உணவுகளின் சுவை மற்றும் மணத்தை இஞ்சு பூண்டு விழுது நமக்கு அதிகப்படுத்தி தரும். மேலும் இஞ்சி மற்றும் பூண்டில் அதிகப்படியான மருத்துவ குணங்கள் உள்ளதால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இருந்தாலும் நாம் சமையலுக்கு இஞ்சி பூண்டு விழுது தேவைப்படும்போது ஒவ்வொரு முறையும் அரைத்துக் கொண்டு இருக்க முடியாது.

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : நல்ல சுவையும் மணமும் தரும் கரம் மசாலா பொடி செய்வது எப்படி ?

- Advertisement -

ஆகையால் நமக்குத் தேவைப்படும் இஞ்சி பூண்டு விழுதை பக்குவமான முறையில் அரைத்து வைத்துக் கொண்டால் நமக்கு அது உதவியாக இருக்கும். கடைகளிலும் இஞ்சி பூண்டு விழுது விற்கப்படுகின்றனர் ஆனால் கடைகளில் இருக்கும் இஞ்சி பூண்டு விழுது நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்காக வினிகர் மற்றும் இன்னும் சில பொருட்களை பயன்படுத்தி இருப்பார்கள். ஆனால் இயற்கையாக நாம் செய்யும் இஞ்சி பூண்டு விழுதை பிரிட்ஜில் வைத்தால் இரண்டு மாதம் ஆனாலும் நிறம் மாறாமல் கெடாமல் அப்படியே இருக்கும். ஆகையால் இன்று இஞ்சி பூண்டு விழுது பக்குவமாக எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

500 கிராம் இஞ்சி
350 கிராம் பூண்டு
2 tbsp எண்ணெய்
2 tbsp உப்பு

செய்முறை விளக்கம்

முதலில் ஒரு 500 கிராம் பூண்டை எடுத்துக்கொண்டு தோல் பகுதிகளை நீக்கிவிட்டு தோல் உரித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்பு 350 கிராம் இஞ்சியை நன்கு கழுவி விட்டு அதன் தோல் பகுதிகளை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பவுளில் வைத்துக் கொள்ளுங்கள்.

-விளம்பரம்-

பின் இஞ்சி பூண்டு விழுது அரைக்கும் போது தண்ணீர் சேர்த்து அரைக்க கூடாது. நாம் நீண்ட நாட்கள் கெடாமல் வைத்திருக்க வேண்டுமென்றால் தண்ணீர் இல்லாமல் அரைக்க வேண்டும். முதலில் ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் பூண்டு பற்களை சேர்த்து துருதுருவென அரைத்துக் கொள்ளுங்கள்.

பின்பு மிக்ஸி ஜாரில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் மற்றும் ஒரு டீஸ்பூன் அளவு உப்பு சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள், பின்பு பூண்டு நன்றாக அரைபட்டதும் ஒரு பெரிய பவுலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பின்பு அதை மிக்ஸி ஜாரில் நறுக்கிய இஞ்சி துண்டுகளை சேர்த்து முதலில் கொரகொரவென அரைத்துக் கொள்ளுங்கள், பின்பு மிக்ஸி ஜாரில் மீதம் இருக்கும் ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெய் மற்றும் ஒரு டீஸ்பூன் அளவு உப்பு சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள்.

-விளம்பரம்-

இஞ்சி நன்றாக பேஸ்ட் போல் அரைபட்டதும், பூண்டு இருக்கும் அதே பவுளில் இஞ்சியையும் சேர்த்து இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின்பு ஒரு கண்ணாடி ஜாரில் நாம் அரைத்த இஞ்சி பூண்டு விழுது சேர்த்து டைட்டாக மூடி கொள்ளுங்கள்.

பின் இந்த இஞ்சி பூண்டு விழுதை பிரிட்ஜில் வைத்து நீன்ட நாட்கள் பயண்படுத்தலாம். இவ்வாறு நீங்கள் இஞ்சி பூண்டு விழுது செய்தால் இரண்டு மாதம் ஆனாலும் கெடாமல் அப்படியே இருக்கும் அவ்வளவுதான் இஞ்சி பூண்டு விழுது இனிதே தயாராகி விட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here