Home அசைவம் ஆட்டு ரத்த பொரியல் ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு சாப்பிடுங்க!

ஆட்டு ரத்த பொரியல் ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு சாப்பிடுங்க!

நம்ம என்னதான் நான் வெஜ் சாப்பிட்டாலும் மட்டன்ல இருக்கிற சத்துக்கள் கொஞ்சம் மத்த நான்வெஜ் விட அதிகம் என்று சொல்லலாம். ஆட்டில் இருக்கும் அனைத்து பாகங்களையும்  சமையல் செய்து சாப்பிட்டால் நமது உடம்பிற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று ஆட்டு ரத்த பொரியல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.இருமல் சளி போன்ற பிரச்சனைகள் இருந்தால் இந்த ஆட்டு ரத்த பொறியல் செய்து அதில் மிளகுத்தூளை கொஞ்சம் அதிகமாக சேர்த்து சாப்பிட்டால் இருமல் சளி அனைத்தும் பறந்து விடும்.

-விளம்பரம்-

அது மட்டுமில்லாமல் இதில் இன்னும் ஏராளமான சத்துக்களும் நம் உடம்பிற்கு நன்மைகளும் உள்ளது. இந்த ஆட்டு ரத்த பொரியல் ஒரு சிலருக்கு பிடிக்கும் ஆனால் ஒரு சிலருக்கு சுத்தமாக பிடிக்காது ஆனால் ஒரு முறை உங்கள் வீட்டில் இந்த மாதிரி ஆட்டு ரத்த பொரியல் செய்து கொடுங்க கண்டிப்பாக பிடிக்காதவங்க கூட திருப்பி திருப்பி வாங்கி சாப்பிடுவாங்க. அந்த அளவுக்கு இதோட ருசி சூப்பரா இருக்கும்.

 ரொம்பவும் கம்மியான பொருட்கள் வச்சே நம்ம சூப்பரான ரத்த பொரியல் செஞ்சுடலாம். இத கிளீன் பண்றது மட்டும் தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கும் ஆனா இத சமையல் செய்றது ரொம்பவே ஈஸி தான். ஒரு சில பேருக்கு இந்த ரத்த பொரியல் எப்படி செய்வது என்று தெரியாமல் இருக்கும் அவங்க இதை பார்த்து உங்க வீட்ல செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் நீங்க அசால்டா இந்த ரத்த பொறியல உங்க வீட்ல செய்யலாம். இப்ப வாங்க இந்த சூப்பரான ஆட்டு ரத்த பொரியல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

ஆட்டு ரத்த பொரியல் | Goat Blood fry recipe In Tamil

நம்ம என்னதான் நான் வெஜ் சாப்பிட்டாலும் மட்டன்ல இருக்கிற சத்துக்கள் கொஞ்சம் மத்த நான்வெஜ் விட அதிகம் என்று சொல்லலாம். ரொம்பவும் கம்மியானபொருட்கள் வச்சேநம்ம சூப்பரான ரத்தபொரியல் செஞ்சுடலாம்.இத கிளீன் பண்றதுமட்டும் தான்கொஞ்சம் கஷ்டமாஇருக்கும் ஆனாஇத சமையல் செய்றதுரொம்பவே ஈஸிதான். ஒரு சிலபேருக்கு இந்தரத்த பொரியல் எப்படிசெய்வது என்றுதெரியாமல் இருக்கும்அவங்க இதை பார்த்துஉங்க வீட்ல செஞ்சுபாருங்க அதுக்கப்புறம் நீங்க அசால்டாஇந்த ரத்த பொறியலஉங்க வீட்ல செய்யலாம்.இப்ப வாங்க இந்தசூப்பரான ஆட்டுரத்த பொரியல் எப்படிசெய்வது என்றுபார்க்கலாம்
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Goat Blood Fry
Yield: 4
Calories: 354kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் ஆட்டு ரத்தம்
  • 1 கப் நறுக்கிய சின்ன வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1/2 கப் துருவிய தேங்காய்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் ஆட்டு ரத்தத்தை நன்குகழுவி சுத்தம் செய்துஎடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிகருவேப்பிலை நறுக்கியசின்ன வெங்காயம் நறுக்கியபச்சை மிளகாய் சேர்த்துநன்றாக வதக்கவும்.
  • அதனுடன் தேவையான அளவு உப்பு மஞ்சள்தூள் சேர்த்து வதக்கியபிறகு ஆட்டு ரத்தத்தை சேர்த்து கைவிடாமல்கிளறிக் கொண்டேஇருக்கவும்.
  • நன்றாக கெட்டியாகி உதிரி உதிரியாக வந்தவுடன்அது தேங்காய் துருவலையும்மிளகுத்தூளையும் சேர்த்துஇறக்கினால் சுவையானஆட்டு ரத்த பொரியல்தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 354kcal | Carbohydrates: 34g | Protein: 12g | Cholesterol: 3mg | Potassium: 373mg

இதையும் படியுங்கள் : ரொம்ப சிம்பிளா இந்த மட்டன் உப்புக்கறி செஞ்சு பாருங்க!