எவ்வளவு செய்தாலும் காலியாகும் காரசாரமான ருசியில் ஆட்டு மூளை முட்டை மிளகு வறுவல் இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

ஆட்டோட எல்லா பாகத்தையும் நம்ப உணவு சேர்ந்து செய்து சாப்பிட்டு இருக்கோம். அப்படி இன்னைக்கு  ஆட்டோட எந்த பாகத்துல நம்ம உணவு செய்யப் போறோம் அப்படின்னா ஆட்டு மூளை வறுவல் பண்ண போறோம். அதில் வெறும் ஆட்டு மூளை மட்டும் இல்லாம ஆட்டு மூளையோட முட்டையும் சேர்த்து ஒரு மிளகு வறுவல் செய்யப்போறோம். எல்லாருமே ஆட்டுமூளை செய்யும்போது வெறும் ஆட்டு மூளை மட்டும் தான் செய்வாங்க. சிலர் மூளை கம்மியா இருக்கும் அப்படிங்கறதுக்காக அதுல முட்டை சேர்த்து செய்வாங்க.

-விளம்பரம்-

 நம்ம எப்போதும் ஆட்டு மூளை செய்றதுக்கு முட்டை சேர்த்து செய்வதற்கு என்ன வித்தியாசம் இருக்கும் அப்படினா? ஆட்டு மூளை  கொஞ்சம் ஈரமான தன்மை இருக்கும் நம்ம எவ்ளோதான் ஃப்ரை பண்ணாலும் அது வந்து ட்ரை ஆகவே ஆகாது.அதனால நம்ம அதுல முட்டை சேர்த்து பண்ணும் போது நம்ம முட்டை பொடிமாஸ் பண்ற மாதிரியான ட்ரையா இருக்கும். அதே நம்ம முட்டை சேர்க்காமல் மூளைய பொடி பொடியா செய்யாமல் சின்ன சின்ன பீசஸா பண்ணனும் அப்படின்னாலும் பண்ணலாம்.

- Advertisement -

எல்லாமே  நம்ம எப்படி கலந்து விடுறோம் அதை பொறுத்து இருக்கு. அந்த மூளையை எப்படி பிரட்டி போட போறோம் அப்படிங்கறதுல தான் இருக்கு. உங்களுக்கு மூளை உடையாம  பெரிய பெரிய பீசஸா வரணும் அப்படின்னு நினைச்சீங்கன்னா லைட்டா திருப்பி போட்டு பிரை பண்ணனும். அப்படி இல்ல பொடிப்பொடியா இருந்தாலும் பரவால்ல அப்படின்னு நினைச்சீங்கனா முட்டை பொடி மாஸ்  மாதிரி வரணும் அப்படின்னு கொஞ்சம் உடைச்சு விட்டு நல்லா ட

ப்ரை பண்ணனும் மூளை மிளகு வறுவல் நல்ல சுவையா இருக்கும். இந்த ஆட்டோட மூளையை வெறும் ஆட்டு மூளை வறுவலை சாப்பிடுவதை விட முட்டையோடு சேர்த்து சாப்பிடும்போது ரொம்ப ருசியா இருக்கும். வாங்க இந்த ஆட்டு மூளை முட்டை மிளகு வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
2 from 2 votes

மூளை முட்டை மிளகு வறுவல் | Goat Brain Egg Ppper Fry Recipe In Tamil

ஆட்டு மூளை செய்றதுக்கு முட்டை சேர்த்து செய்வதற்கு என்ன வித்தியாசம் இருக்கும் அப்படினா? ஆட்டுமூளை  கொஞ்சம் ஈரமான தன்மை இருக்கும் நம்ம எவ்ளோதான்ஃப்ரை பண்ணாலும் அது வந்து ட்ரை ஆகவே ஆகாது.அதனால நம்ம அதுல முட்டை சேர்த்து பண்ணும்போது நம்ம முட்டை பொடிமாஸ் பண்ற மாதிரியான ட்ரையா இருக்கும். அதே நம்ம முட்டை சேர்க்காமல்மூளைய பொடி பொடியா செய்யாமல் சின்ன சின்ன பீசஸா பண்ணனும் அப்படின்னாலும் பண்ணலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Fry, LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Goat Brain Egg Pepper Fry
Yield: 4
Calories: 120kcal

Equipment

 • 1 கடாய்

தேவையான பொருட்கள்

 • 1 ஆட்டு மூளை
 • 2 முட்டை
 • 1/2 கப் சின்ன வெங்காயம்
 • 1 பச்சைமிளகாய்
 • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
 • 2 ஸ்பூன் மிளகு தூள்
 • 12 ஸ்பூன் மஞ்சள் தூள்
 • 12 ஸ்பூன் மிளகாய் தூள்
 • 1 கொத்து கறிவேப்பிலை
 • கொத்தமல்லி சிறதளவு
 • உப்பு தேவையான அளவு
 • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

 • முதலில் ஆட்டு மூளையை சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். ஆட்டின் மூளையின் மேல் ஒருசவ்வு போன்ற படலம் இருக்கும் அதை நீக்கி விட வேண்டும்.
 •  
  பிறகு மூளையில் சிவப்பு சிவப்பாக இருக்கும் அவற்றை எடுத்தால் தனியே வந்துவிடும் அந்த சிகப்பு நிறத்தில் இருப்பவர்களையும் நீக்கிவிட்டு நன்றாக நீரில் கழுவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
   
 •  பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றிகாய்ந்ததும் அதில் கறிவேப்பிலை பொடியாக நறுக்கி வைத்துள்ள சிர்ர வெங்காயம் சேர்த்துதாளித்துக் கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு அதில் மஞ்சள் தூள், இஞ்சிபூண்டு விழுது, பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
   
 • பின் மிளகாய்த்தூள்,மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இந்த மசால் ஆட்டின் மூளையை சேர்த்துநன்றாக கலந்து விடவும். தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
 •  பிறகு மூளை நன்றாக வெந்து வரும்  அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி பொரியல் போல நன்றாகமுட்டைகளை கலந்து விடவும். முட்டைகளும் மூளையும் ஒன்றோடு ஒன்று மசாலாக்கள் உடன் நன்றாககலந்து வெந்லு வர வேண்டும்.
 •  முட்டையும் மூளையும் வெந்த பிறகு நன்றாக கலந்து விட்டுகொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான ஆட்டு மூளை முட்டை மிளகு வறுவல் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 120kcal | Protein: 40g | Saturated Fat: 13.6g | Cholesterol: 6.9mg | Sodium: 376mg | Potassium: 859mg

இதையும் படியுங்கள் : ருசியான மட்டன் சுவரொட்டி பிரட்டல் இனி இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இந்த ரெசிபி ஒரு தனி ருசி!

-விளம்பரம்-