வீட்டில் இரு சட்னிகளை மட்டும் திரும்ப திரும்ப வைக்காமல் நெல்லிக்காய் சட்னி ஒரு முனை இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

கோலி குண்டு அளவிலிருந்தாலும் மலையளவு சத்துக்களை கொண்ட காய் எதுவென கேட்டால் நெல்லிக்காய் என சட்டென சொல்லிவிடலாம். நெல்லிக்காய் புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு சற்று கசப்பு நிறைந்த ஒன்று. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் மிக வல்லமையான ஒன்று. நெல்லிக்காயில் வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் என அதன் சத்துக்களை சொல்லிக்கொண்டே போகலாம். இந்த நெல்லிக்காயில் ஜூஸ், ஊறுகாய் போன்றவற்றை அடிக்கடி செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால் நெல்லிக்காய் சட்னி செய்திருக்கீங்களா.? ஆம் நெல்லிக்காயை கொண்டு சட்னியும் செய்யலாம். இதை இட்லி, தோசை மட்டுமல்லாமல் தயிர் சாதம், தக்காளி சாதம் புளி சாதம் என அனைத்து வகையான கட்டு சாதங்களுக்கும் ஏற்ற சைடிஷ்ஷாக இருக்கும். அதோடு இதுவரை நீங்கள் சுவைத்திராத ருசியில் சற்று வித்தியாசமாகவும் இருக்கும்.

-விளம்பரம்-

இதன் சுவையானது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். நெல்லிக்காயை அப்படியே சாப்பிட்டால் குழந்தைகள் விரும்ப மாட்டார்கள். அதன் துவர்ப்பு சுவை சிலருக்கு பிடிக்காது. ஆனால் நெல்லிக்காயை சாப்பிட்டு முடித்து தண்ணீர் குடித்தால் நா இனிக்கும். எனவே ஒரு சில குழந்தைகள் அதை விரும்புவார்கள். நெல்லிக்காய் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இப்படி சட்னி செய்து கொடுக்கலாம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி என்றவுடன் சொல்லும் பொருள்களில் நெல்லிக்காயும் ஒன்று. இந்த நெல்லிக்காய் கொண்டு செய்யப்படும் சுவைமிக்க சட்னியை எப்படி செய்வதென்று இப்போது பார்க்கலாம்.

- Advertisement -
Print
5 from 1 vote

நெல்லிக்காய் சட்னி | Gooseberry Chutney Recipe In Tamil

கோலி குண்டு அளவிலிருந்தாலும் மலையளவு சத்துக்களை கொண்ட காய் எதுவென கேட்டால் நெல்லிக்காய் என சட்டென சொல்லிவிடலாம். நெல்லிக்காய் புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு சற்று கசப்பு நிறைந்த ஒன்று. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் மிக வல்லமையான ஒன்று. நெல்லிக்காயில் வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் என அதன் சத்துக்களை சொல்லிக்கொண்டே போகலாம். இந்த நெல்லிக்காயில் ஜூஸ், ஊறுகாய் போன்றவற்றை அடிக்கடி செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால் நெல்லிக்காய் சட்னி செய்திருக்கீங்களா.? ஆம் நெல்லிக்காயை கொண்டு சட்னியும் செய்யலாம். இதை இட்லி, தோசை மட்டுமல்லாமல் தயிர் சாதம், தக்காளி சாதம் புளி சாதம் என அனைத்து வகையான கட்டு சாதங்களுக்கும் ஏற்ற சைடிஷ்ஷாக இருக்கும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian
Keyword: Gooseberry Chutney
Yield: 4 People
Calories: 44kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 7 நெல்லிக்காய்
  • 2 டீஸ்பூன் கடலை பருப்பு
  • 2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 4 பச்சை மிளகாய்
  • 1/4 கப் தேங்காய்
  • 1 துண்டு வெல்லம்
  • உப்பு தேவையான அளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 4 வர ‌மிளகாய்
  • 1 கொத்து கறிவேப்பிலை

செய்முறை

  • முதலில் நெல்லிக்காயை தண்ணீரில் அலசி விட்டு அதன் கொட்டையை நீக்கி விட்டு நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு சேர்த்து வதக்கவும்.
  • பின் தேங்காய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதன்பிறகு நெல்லிக்காயை சேர்த்து ஐந்து நிமிடங்கள் வரை நன்கு வதக்கவும்.
  • இவை நன்கு ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் வெல்லம் மற்றும் உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும். பின் இதனை‌ ஒரு பவுளுக்கு மாற்றி விடவும்.
  • ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, கடுகு, வர மிளகாய், கறிவேப்பில்லை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான நெல்லிக்காய் சட்னி தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 44kcal | Carbohydrates: 4g | Protein: 7.9g | Fat: 0.6g | Sodium: 4mg | Potassium: 198mg | Fiber: 4.1g | Vitamin A: 290IU | Vitamin C: 27.7mg | Calcium: 25mg | Iron: 7.31mg

இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் நெல்லிக்காய் ஊறுகாய் இப்படி சுலபமாக வீட்டிலயே செஞ்சு பாருங்கள்!