Home காலை உணவு உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான முறையில் ஏதேனும் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த பச்சை பயறு...

உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான முறையில் ஏதேனும் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த பச்சை பயறு பீட்ரூட் இட்லி செய்து கொடுங்கள்!!!

காலையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? இட்லி சுடலாம் என்று நினைத்தால் மாவு இல்லையா? அப்படியானால் கவலையை விடுங்கள். வீட்டில் பச்சை பயறு மற்றும் பீட்ரூட் இருந்தால், அதைக் கொண்டு அட்டகாசமான சுவையில் இட்லி செய்யலாம். இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் துணை புரிவது தானிய வகைகள்.

-விளம்பரம்-

பொதுவாக பச்சை பயறில் இரும்புச்சத்து நிறைந்திருக்கும் என்று கூறப்படுகிறது. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது உணவில் பச்சை பயறை சேர்த்துக் கொள்ள வேண்டும். அன்றாட வாழ்க்கையில் ஒரு பகுதி உளுத்தம் பருப்புடன் மூன்று பங்கு அரிசியை சாப்பிடப் பழகிவிட்டோம். இது குறைந்த புரதம் மற்றும் அதிக கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்வதற்கு வழிவகுக்கிறது என்கிறார்கள். ஆனால் அதற்கு பதிலாக நாம் செய்ய வேண்டியது, சத்தான உணவைத் தேடுவது தான். அதாவது சாதாரண இட்லிக்கு பதிலாக பச்சை பயறு இட்லி தயாரித்து சாப்பிடலாம்.

பச்சை பயறை பொரியலாக செய்து கொடுத்தால் வீட்டில் உள்ள குழந்தைகள் அல்லது ஒரு சில பெரியவர்களும் சாப்பிட மறுக்கலாம். ஆனால் இது போல இட்லி செய்து கொடுத்துப் பாருங்கள். நிச்சயமாக அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு இட்லி சாப்பிட வேண்டிய இடத்தில் இரண்டு இட்லி சாப்பிடுவார்கள் குறிப்பாக குழந்தைகள் மிகவும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். ஒரு முறை இப்படி இட்லி செய்து சுடச்சுட சாம்பார் அல்லது சட்னி செய்து கொஞ்சமாக நெய் விட்டு சாப்பிட்டு பாருங்கள். சொல்லும் போதே மணக்க மணக்க வாசம் வீசும். இன்று இந்த பச்சை பயறு பீட்ரூட் இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

Print
5 from 1 vote

பச்சை பயறு பீட்ரூட் இட்லி | Green Gram Beetroot Idly Recipe In Tamil

காலையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? இட்லி சுடலாம் என்று நினைத்தால் மாவு இல்லையா? அப்படியானால் கவலையை விடுங்கள். வீட்டில் பச்சை பயறு மற்றும் பீட்ரூட் இருந்தால், அதைக் கொண்டு அட்டகாசமான சுவையில் இட்லி செய்யலாம். இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் துணை புரிவது தானிய வகைகள். அதாவது சாதாரண இட்லிக்கு பதிலாக பச்சை பயறு இட்லி தயாரித்து சாப்பிடலாம்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian, TAMIL
Keyword: Green Gram Beetroot Idly
Yield: 4 People
Calories: 212kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 இட்லி பாத்திரம்
  • 1 கிரைண்டர்

தேவையான பொருட்கள்

  • 1 கப் பச்சை பயறு
  • 1 கப் உளுத்தம் பருப்பு
  • 1/4 கப் ரவை
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • உப்பு தேவையான அளவு
  • 4 பீட்ரூட்

செய்முறை

  • முதலில் பச்சை பயறு , உளுந்து, ராகி ஆகியவற்றை நன்கு அலசி விட்டு 5 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். பீட்ரூட்டை தோல் சீவி விட்டு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் கிரைண்டரில் ஊற வைத்த பயறை சேர்த்து அதனுடன் பீட்ரூட் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். பின் அரைத்து வைத்துள்ள மாவுடன் ரவை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின் சிறிதளவு தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு நன்கு கலந்து 15 நிமிடங்கள் வரை மாவை ஊற விடவும்.
  • பின் ஒரு இட்லி சட்டியை அடுப்பில் வைத்து இட்லி தட்டில் எண்ணெய் தடவி இட்லி மாவை ஊற்றி 15 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான பச்சை பயறு பீட்ரூட் இட்லி தயிர்.

Nutrition

Serving: 500g | Calories: 212kcal | Carbohydrates: 3.8g | Protein: 14.2g | Fat: 2.8g | Sodium: 108mg | Potassium: 547mg | Fiber: 15.4g | Vitamin A: 33IU | Vitamin C: 132mg | Calcium: 80mg | Iron: 19mg

இதனையும் படியுங்கள் : மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!