நம்முடைய உணவுப் பட்டியலில் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கின்ற பொருட்களில் கொண்டக்கடலைக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. கொண்டக்கடலையை வெகு எளிமையாக தயார் செய்து சாப்பிடலாம். சுமார் 6 முதல் 8 மணி நேரம் கொண்டக்கடலையை ஊற வைத்து, வெறும் உப்பும், தண்ணீரும் சேர்த்து அவித்து சாப்பிட்டால் கூட அவ்வளவு சுவையாக இருக்கும். அதே சமயம், கொண்டக்கடலையுடன் சில பச்சைக் காய்கறிகள் மற்றும் எலுமிச்சை போன்றவற்றை சேர்த்து சாலட் தயாரித்தும் சாப்பிடலாம். வொர்க் ஃப்ரம் ஹோமில் இருப்பவர்களின் மிகப் பெரிய சவால் ஆரோக்கியமான சாப்பாடு.
பெருந்தொற்றுக் காலத்தில் சத்தாகவும் சரிவிகிதத்திலும் சாப்பிடச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். உடலுக்குப் புரிந்தாலும் உணர்வுகளுக்கு அதெல்லாம் புரிகிறதா? அதிகரித்திருக்கும் ஸ்ட்ரெஸ் காரணமாகக் கண்ட நேரத்தில் கண்டதையும் சாப்பிட்டுக்கொண்டே வேலை பார்ப்பவர்கள் பெருகியிருக்கிறார்கள். ஸ்ட்ரெஸ் காரணமாக அதிகம் சாப்பிடுகிறவர்களுக்கு சரியான சாய்ஸ் சாலட். செய்வதும் எளிது, சத்துகளின் சங்கமமாகவும் இருக்கும். வயிறும் மனதும் நிறைந்த உணர்வையும் தரும்.
பொதுவாக சாலட் என்பது, சமைக்கப்படாத பலவகை உணவுப் பொருட்களின் கலவை ஆகும். நமது உடல்களில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக காய்கறிகள் மற்றும் பழம் வகைகள் முக்கிய காரணமாக உள்ளது. ஆரோக்கியமான உணவு முறையில் சாலட்கள் எப்போதும் முக்கியமானவை. சாலட்டில் அதிகளவு காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்து சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான நார்ச்சத்துக்கள் கிடைக்கிறது. இது உங்கள் பசி உணர்வை கட்டுப்படுத்துகிறது. எடையை குறைக்க உதவுகிறது. அந்தவகையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் கொண்டைக்கடலை சாலட் செய்வது குறித்து பார்க்கலாம்.
கருப்பு கொண்டைக்கடலை சாலட் | Black Chana Salad Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 குக்கர்
தேவையான பொருட்கள்
- 1/2 கப் கொண்டைக்கடலை
- 1 கேரட்
- 1 குடைமிளகாய்
- 1 வெங்காயம்
- 1 வெள்ளரிக்காய்
- 1 தக்காளி
- 1/4 கப் மாதுளை
- 2 டேபிள் ஸ்பூன் நறுக்கிய முட்டைக்கோஸ்
- உப்பு தேவையான அளவு
- 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
- 1 டீஸ்பூன் மிளகு தூள்
- 1/2 டீஸ்பூன் ஆரிகானோ
செய்முறை
- முதலில் கொண்டைக்கடலையை ஆறு மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
- பின் கொண்டைக்கடலையை ஒரு குக்கரில் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் விட்டு நான்கு விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- பின் வெள்ளரிக்காய், தக்காளி, முட்டைக்கோஸ், கேரட், குடைமிளகாய், வெங்காயம் ஆகியவற்றை நன்கு கழுவி விட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு பவுளில் நறுக்கிய காய்கறிகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து, அதனுடன் உப்பு, மிளகுத்தூள், ஆரிகானோ, மாதுளை, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- பின் வேகவைத்த கொண்டைக்கடலையை சேர்த்து நன்கு கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான கருப்பு கொண்டை கடலை சாலட் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : சமைக்கப்படாத, சத்துகளின் சங்கமமாகவும் இருக்கும், இத்தாலியன் சாலட், செய்முறை உங்களுக்காக !!