- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 2
- Cuisine
- italy
- Course
- Salad
வொர்க் ஃப்ரம் ஹோமில் இருப்பவர்களின் மிகப் பெரிய சவால் ஆரோக்கியமான சாப்பாடு. பெருந்தொற்றுக் காலத்தில் சத்தாகவும் சரிவிகிதத்திலும் சாப்பிடச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். உடலுக்குப் புரிந்தாலும் உணர்வுகளுக்கு அதெல்லாம் புரிகிறதா? அதிகரித்திருக்கும் ஸ்ட்ரெஸ் காரணமாகக் கண்ட நேரத்தில் கண்டதையும் சாப்பிட்டுக்கொண்டே வேலை பார்ப்பவர்கள் பெருகியிருக்கிறார்கள். ஸ்ட்ரெஸ் காரணமாக அதிகம் சாப்பிடுகிறவர்களுக்கு சரியான சாய்ஸ் சாலட். செய்வதும் எளிது.
சத்துகளின் சங்கமமாகவும் இருக்கும். வயிறும் மனதும் நிறைந்த உணர்வையும் தரும். பொதுவாக சாலட் என்பது, சமைக்கப்படாத பலவகை உணவுப் பொருட்களின் கலவை ஆகும்.நமது உடல்களில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக காய்கறிகள் மற்றும் பழம் வகைகள் முக்கிய காரணமாக உள்ளது. ஆரோக்கியமான உணவு முறையில் சாலட்கள் எப்போதும் முக்கியமானவை. சாலட்டில் அதிகளவு காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்து சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான நார்ச்சத்துக்கள் கிடைக்கிறது.
இது உங்கள் பசி உணர்வை கட்டுப்படுத்துகிறது. எடையை குறைக்க உதவுகிறது. உடலில் கெட்ட கொழுப்பையும் குறைக்க உதவுகிறது. சாலட்டில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்தை உடல் உறிஞ்ச உதவுவதோடு அது குடல் இயக்கத்தை திறம்பட செயல்பட வைக்கிறது. தினமும் இந்த வெள்ளரிக்காய் காய்கறிகளை சாலட் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்தசோகை குணமாகும். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். முடி வளர்ச்சிக்கும் நல்லது. இந்த பதிவில் இத்தாலிய சாலட் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
Ingredients
Method
முதலில் எல்லா காய்கறிகளையும் சதுரமாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
ஒரு பௌலில் ஆலிவ் ஆயில், ரெட் வினிகர், ஒயிட் வினிகர், சர்க்கரை, உப்பு, மிளகுத்தூள் எல்லாம் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
அதன்பிறகு ஒரு பௌலில் நறுக்கி வைத்துள்ள காய்களை சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் வினிகர் கலவையை காய்கறிகளுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அதனுடன் துளசி, ஒரிகானோ எல்லாம் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
விருப்பப்பட்டால் காய்கறிகள் மேலே சீஸ் தூவி கொள்ளலாம்.
அவ்வளவுதான் மிகவும் சுவையான, சத்தான இத்தாலியன் சாலட் தயார். டயட் செய்ய விரும்பும் அனைவரும் சுவைக்கலாம்.






