பச்சைப்பயிறு பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் இருக்கும். இதனைக் கொண்டு சுண்டல், தோசை செய்வது வழக்கம். குறிப்பாக டயட் இருப்பவர்கள் மத்தியில் இந்த பச்சை பயிறு மிகவும் பிரபலமானது. உடல் எடையை குறைப்பவர்களின் அன்றாட புரத தேவையை பூர்த்தி செய்ய இந்த பச்சை பயிறு நிச்சயம் உதவும். இத்தகைய நற்பண்புகள் நிறைந்த பச்சை பயிறு புரதத்தின் சிறந்த ஆதாரம் ஆகும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த பயிறில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.
எனவே இதனை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை சமைத்து சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும். அதிலும் அந்த பயறுகளில் பச்சை பயறு மிகவும் சுவையாக இருக்கும். இந்த பச்சை பயறு மசியல் உங்கள் தினசரி டோஸ் முளைகளைப் பெற ஒரு சுவையான வழியாகும். ருசியும் நறுமணமும் கொண்டது, இது வேகவைத்த சாதம் மற்றும் நெய்யுடன் சாப்பிடுவது சிறந்தது அதுமட்டுமின்றி தோசை அல்லது புல்காவுடன் பரிமாறலாம்.
பச்சைப்பயறு மசியல் | Green Moong Dal Gravy Recipe in Tamil
Equipment
- 1 குக்கர்
- 1 மண்சட்டி
- 1 கடாய்
- 1 கரண்டி
தேவையான பொருட்கள்
- 1 கப் பச்சை பயறு
- 1 பெரிய
- 1 தக்காளி
- 3 பச்சை மிளகாய்
- 5 பல் பூண்டு
- 1/2 டீஸ்பூன் இஞ்சி
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1 டீஸ்பூன் தனியா தூள்
- 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள்
- 1/4 டீஸ்பூன் கரம்
- கறிவேப்பிலை சிறிதளவு
- கொத்தமல்லி இலை சிறிதளவு
- உப்பு தேவையானஅளவு
- எண்ணெய் தேவையான க்அளவு
செய்முறை
- பச்சை பயரை நன்கு வறுத்து கழுவி, குக்கரில் சேர்த்து மூன்று கப் தண்ணீர் ஊற்றி நான்கு விசில் வைத்து எடுக்கவும்.
- பின்னர் அதனை எடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து அடுப்பில் வைத்து மற்றோரு முறை வேக வைக்கவும்.
- பின் வெங்காயம், தக்காளி ,பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை எல்லாம் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பின்னர் இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
- நன்கு வதங்கியதும் எடுத்து வேகும் பச்சை பயரில் சேர்த்து நன்கு மசித்து விடவும்.
- மிதமான சூட்டில் பத்து நிமிடங்கள் மூடி வைத்து வேக வைக்கவும். உப்பு சரிபார்த்து நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கினால் பச்சை பயறு மசியல் தயார்.
- மிகவும் சத்தான இந்த பச்சை பயறு மசியல் சூடான சாதம், சப்பாத்தியுடன் சேர்த்து கொஞ்சம் நெய் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.