மாலை நேர ஸ்நாக்ஸாக ருசியான பச்சை பட்டாணி கட்லெட் ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -

எல்லாருக்கும் கட்லெட்  என்றாலே மிகவும் பிடிக்கும். கட்லெட் அப்படிங்கறது மாலை நேர சிற்றுண்டிகளில் ஒரு முக்கியமான உணவாகவும் கருதப்பட்டு வருகிறது. இந்த கட்லெட்டில் பல வெரைட்டிகளில் கட்லெட் செய்வார்கள். சைவ கட்லெட் , அசைவ கட்லெட் பல வகைகளில் சாப்பிட்டு இருப்போம் .வீட்டில் ரொம்பவே எளிமையாக வீட்டில் இருக்கிற பொருட்களை வைத்து ரொம்ப ரொம்ப சுலபமாக ருசியாகவும் செய்திடலாம்.

-விளம்பரம்-

இந்த சுவையான கட்லெட்டை வீட்ல செய்து கொடுக்கும் போது குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாரும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த சுவையான கட்லெட் மேல அவங்களுக்கு அப்படி ஒரு விருப்பம் வரும். இது மாலை நேர சிற்றுண்டி மட்டும் கிடையாது  எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். இப்போ பட்டாணியோட சீசன் ஆரம்பிச்சிருக்கு ரொம்ப ப்ரெஷ்ஷா இருக்கிற பட்டாணி கிடைச்சிருக்கு. அதனால அந்த மாதிரி பட்டாணி வாங்குனீங்கன்னா அந்த பச்சை பட்டாணி வைத்து சூப்பரான ஒரு கட்லெட் செய்யலாம் எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி. இந்த மாதிரி சுவையான பட்டாணி கட்லெட்டை இப்ப நாம செய்ய இருக்கும் இந்த பதிவுல எப்படி பட்டாணி கட்லெட் ரொம்பவே ஈசியா வீட்டுல செய்யலாம் அப்படி என்று தெரிந்துகொள்ள இருக்கோம்.

- Advertisement -

இந்த சுவையான பட்டாணி கட்லெட்டை வீட்ல இருக்குற எல்லாருமே ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. அதுவும் பட்டாணில செய்து கொடுக்கும்போது அது இன்னுமே எல்லாருக்கும் விரும்பக்கூடிய ஒரு உணவாக மாறுகிறது. காரணம் பட்டாணி அப்படினாலே இப்போ இருக்கிற எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். பட்டாணி சாப்பிடுவதை எல்லாருமே விரும்பி தான் பண்ணுவாங்க. அந்த அளவுக்கு ரொம்பவே சுவையா இருக்கும் இந்த பட்டாணி கட்லெட். சுவையான பட்டாணி வச்சு விதவிதமான உணவுகள் செய்து கொடுக்கும் போது வீட்டில் இருக்கிற எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். நம்ம பட்டாணி வச்சு கட்லெட் செய்ய போறோம் சரி வாங்க இந்த சுவையான கட்லெட் எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

Print
5 from 1 vote

பச்சை பட்டாணி கட்லெட் | Green peas cutlet recipe in tamil

இந்த சுவையான கட்லெட்டை வீட்ல செய்து கொடுக்கும் போது குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாரும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த சுவையான கட்லெட் மேல அவங்களுக்கு அப்படி ஒரு விருப்பம் வரும். இது மாலை நேர சிற்றுண்டி மட்டும் கிடையாது  எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். இப்போ பட்டாணியோட சீசன் ஆரம்பிச்சிருக்கு ரொம்ப ப்ரெஷ்ஷா இருக்கிற பட்டாணி கிடைச்சிருக்கு. அதனால அந்த மாதிரி பட்டாணி வாங்குனீங்கன்னா அந்த பச்சை பட்டாணி வைத்து சூப்பரான ஒரு கட்லெட் செய்யலாம் எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி. இந்த மாதிரி சுவையான பட்டாணி கட்லெட்டை இப்ப நாம செய்ய இருக்கும் இந்த பதிவுல எப்படி பட்டாணி கட்லெட் ரொம்பவே ஈசியா வீட்டுல செய்யலாம் அப்படி என்று தெரிந்துகொள்ள இருக்கோம்
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: fast food, snacks
Cuisine: tamilnadu
Keyword: Banana cutlet, Broccoli Cutlet, Chickpeas Cutlet, Elephant yam Cutlet
Yield: 7 People
Calories: 250kcal
Cost: 50

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 கரண்டி
  • 1 பவுள்
  • 1 வாணலி

தேவையான பொருட்கள்

  • 2 கப் பட்டாணி
  • 5 பச்சை மிளகாய்
  • 3 பெரிய வெங்காயம்
  • 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 ஸ்பூன் மைதா
  • 2 துண்டு பிரட்
  • கொத்தமல்லிமல்லி சிறிதளவு
  • 1 கப் புதினா இலைகள்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் பட்டாணியை சுத்தம் செய்து கொள்ளவும். பின்  மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
  • எடுத்து வைத்துள்ள பிரட் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடியாக்கி எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, புதினா,  கொத்தமல்லிமல்லி தழை  சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  • இதனுடன் அரைத்து வைத்த பட்டாணி , உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  • மைதா மாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலக்கி கொள்ளவும்.
  • பிசைந்து வைத்துள்ள மாவை வடை போன்று தட்டி அதனை மைதா மாவில் லேசாக நனைத்து பிறகு பொடி செய்து வைத்துள்ள பிரட்டில்  பிரட்டி எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி வடை பதத்திற்கு தட்டி வைத்துள்ள பட்டாணி கலவையை போட்டு பொன்னிறமாகும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது சூடான பட்டாணி கட்லெட் தயார். இதனை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்.

Nutrition

Calories: 250kcal | Carbohydrates: 25g | Protein: 20g | Fat: 16g