சப்பாத்தி பூரியுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட என்ன செய்யலாம் என்று யோசனையாக இருக்கிறதா? அப்போ உடனே இந்த பச்சைப் பட்டாணி கிரேவியை செய்து பாருங்கள்!!!

- Advertisement -

சப்பாத்தி, பூரியுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட பெரும்பான்மையான வீடுகளில் உருளைக்கிழங்கு மசாலா தான் செய்யப்படும். ஆனால் இந்த உருளைக்கிழங்கு குழந்தைகளுக்கு மிகவும் நன்மை கொடுக்ககூடியது என்றாலும் வயதானவர்கள் இந்த உருளைக்கிழங்கை சாப்பிட வாய்வுத் தொல்லை ஏற்படும். சிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்படும்.

-விளம்பரம்-

இரவு நேரங்களில் சப்பாத்தி, பூரியுடன் தொட்டுக்கொள்ள உருளைக்கிழங்கு மசாலாவை தவிர்த்து விட்டு, இந்த சுவையான பச்சை பட்டாணி கிரேவியை தாபா ஸ்டைலில் செய்து பாருங்கள்.பச்சை பட்டாணியில் மாங்கனீஸ், இரும்புச் சத்து, போலேட் மற்றும் தயமின் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதன் அதிகமான நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. பச்சை பட்டாணி சீரண சக்திக்கு உதவுகிறது. வீட்டில் உள்ளவர்கள் இரண்டு சப்பாத்தி சாப்பிடுவதற்கு பதிலாக நான்கு சப்பாத்திகளாக சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை அவ்வளவு அருமையாக இருக்கும். இதனை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

பச்சை பட்டாணியை வைத்து தான் கிரேவி செய்தால். ஆனா பக்கத்து வீட்டில இன்னைக்கு என்ன ஸ்பெஷல். உங்க வீட்ல மட்டனா? அப்படின்னு நிச்சயம் கேட்பாங்க. அந்த மட்டன் வாசம் இந்த கிரேவியில் வீசும். அப்படி ஒரு சூப்பர் பச்சை பட்டாணி கிரேவியை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். வீட்டில் இருக்கும் சில மசாலா பொருட்களுடன் பச்சை பட்டாணியை வைத்து அட்டகாசமான நாவிற்கு ருசியை தரும் குருமா ரெசிபி உங்களுக்காக.

Print
5 from 1 vote

பச்சைப் பட்டாணி கிரேவி | Green Peas Gravy Recipe In Tamil

சப்பாத்தி, பூரியுடன் தொட்டுக்கொள்ள உருளைக்கிழங்குமசாலாவை தவிர்த்து விட்டு, இந்த சுவையான பச்சை பட்டாணி கிரேவியை தாபா ஸ்டைலில் செய்துபாருங்கள்.பச்சை பட்டாணியில் மாங்கனீஸ், இரும்புச் சத்து, போலேட் மற்றும் தயமின் போன்றஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதன் அதிகமான நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் உடல் எடையைகுறைக்க பயன்படுகிறது. பச்சை பட்டாணி சீரண சக்திக்கு உதவுகிறது. வீட்டில் உள்ளவர்கள்இரண்டு சப்பாத்தி சாப்பிடுவதற்கு பதிலாக நான்கு சப்பாத்திகளாக சாப்பிடுவார்கள். அந்தஅளவிற்கு இதன் சுவை அவ்வளவு அருமையாக இருக்கும். இதனை எவ்வாறு செய்வது என்பதை இந்தபதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Green Peas Gravy
Yield: 4
Calories: 493kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/4 கிலோ பச்சை பட்டாணி
  • 4 பெரிய வெங்காயம்
  • 3 தக்காளி
  • 4 பச்சை மிளகாய்
  • 1 இஞ்சி சிறிய துண்டு
  • 10 பல் பூண்டு
  • 10 முந்திரிபருப்பு
  • 1 ஸ்பூன் தனி மிளகாய் தூள்
  • 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 4 ஸ்பூன் எண்ணெய்
  • 1 ஸ்பூன் உப்பு
  • 1/2 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1/2 ஸ்பூன் சோம்பு
  • 1 பட்டை
  • 2 ஏலக்காய்
  • 2 கிராம்பு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 கொத்து கொத்தமல்லித் தழை

செய்முறை

  • முதலில் 3 வெங்காயம் மற்றும் 3 தக்காளியை நான்குதுண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு பூண்டு மற்றும் இஞ்சியை பொடியாகநறுக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் பட்டாணியை தோலுரித்து தண்ணீரில் அலசிவைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து, ஒருஸ்பூன் எண்ணெய் ஊற்றி, முந்திரி பருப்பு மற்றும் நறுக்கி வைத்த 3 வெங்காயத்தை சேர்த்துபொன்னிறமாக வதக்கி, அதனை மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட் பதத்தில் அரைத்துக் கொள்ளவேண்டும்.
  • பிறகு அதே கடாயில் தக்காளியை வதக்கி மிக்ஸியில்சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு இவை மூன்றையும் சேர்த்துபேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவேண்டும்.
  •  
    பிறகு மீண்டும் கடாயில் அடுப்பின் மீது வைத்து,மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் சோம்பு, பட்டை, ஏலக்காய்,கிராம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
  • பிறகு ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி பொன்னிறமாகவதக்கவும், பின்னர் பச்சை பட்டாணியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அடுத்ததாக அரைத்து வைத்துள்ள பச்சை மிளகாய் விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவேண்டும்.
  •  
    பின்னர் இவற்றுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கிய பின்னர், தக்காளி பேஸ்ட்டை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.இவை சிறிது நேரம் கொதித்தவுடன் உப்பு சேர்த்து, இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி போட்டுகொதிக்க விடவேண்டும்.
  • பின்னர் அரைத்து வைத்துள்ள முந்திரி பேஸ்ட்டைஇவற்றுடன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு இறுதியாக அரை ஸ்பூன் கரம் மசாலாத்தூள்,கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அனைத்துவிட வேண்டும்.
  • அவ்வளவு தான் சுவையான பச்சை பட்டாணி கிரேவி தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 250g | Calories: 493kcal | Carbohydrates: 69g | Protein: 4.9g | Fat: 25g | Sodium: 16mg | Potassium: 432mg | Calcium: 32mg | Iron: 4.1mg