Home ஸ்நாக்ஸ் பச்சை பட்டாணியில் ருசியான கோப்தா இப்படி செய்து பாருங்க! மாலை நேரம் சாப்பிட ஸ்நாக்ஸ் ரெடி!

பச்சை பட்டாணியில் ருசியான கோப்தா இப்படி செய்து பாருங்க! மாலை நேரம் சாப்பிட ஸ்நாக்ஸ் ரெடி!

சப்பாத்தி ரொட்டி நாண் இவற்றிற்கு எல்லாம் கிடைக்கக் கூடிய சூப்பரான இந்த பச்சைபட்டாணி கோப்தா நாம் எப்போதும் செய்யும் சாதாரணமான போண்டாவை போல இல்லாமல் நல்ல பதத்தில் சாப்பிட ரொம்பவே சுவையாக இருக்கும். அதே நேரத்தில் இது நல்ல ஒரு ரிச்சான டேஸ்ட்டில் இருக்கும்.

-விளம்பரம்-

டீ, காபியுடன் மாலை நேரங்களில் சிற்றுண்டி வகையாக செய்யக்கூடிய கட்லெட்  போன்ற ரெசிபிகளில் இதுவும் ஒன்று. பட்டாணி கொண்டு செய்யப்படும் இந்த கோப்தா ரொம்பவே வித்தியாசமான ஒரு சுவையை கொடுக்க இருக்கிறது. கோப்தா சாப்பிட்டிருப்போம். இது போல கொஞ்சம் பட்டாணி சேர்த்து செஞ்சு பாருங்க சுவையோ அட்டகாசமாக இருக்கும். வாங்க பச்சைபட்டாணி கோப்தா எப்படி செய்றதுன்னு தெரிஞ்சிக்குவோம்.

Print
5 from 3 votes

பச்சைபட்டாணி கோப்தா | Green Peas Kofta Recipe In Tamil

சப்பாத்தி ரொட்டி நாண் இவற்றிற்கு எல்லாம்கிடைக்கக் கூடிய சூப்பரான இந்த பச்சைபட்டாணி கோப்தா நாம் எப்போதும் செய்யும் சாதாரணமானகட்லெட் போல இல்லாமல் நல்ல பதத்தில் சாப்பிட ரொம்பவே சுவையாக இருக்கும். அதே நேரத்தில்இது நல்ல ஒரு ரிச்சான டேஸ்ட்டில் இருக்கும். டீ, காபியுடன் மாலை நேரங்களில் சிற்றுண்டிவகையாக செய்யக்கூடிய கட்லெட்  போன்ற ரெசிபிகளில்இதுவும் ஒன்று. பட்டாணி கொண்டு செய்யப்படும் இந்த கோப்தா ரொம்பவே வித்தியாசமான ஒருசுவையை கொடுக்க இருக்கிறது. கோப்தா சாப்பிட்டிருப்போம். இது போல கொஞ்சம் பட்டாணி சேர்த்துசெஞ்சு பாருங்க சுவையோ அட்டகாசமாக இருக்கும். வாங்க பச்சைபட்டாணி கோப்தா எப்படி செய்றதுன்னுதெரிஞ்சிக்குவோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: snacks
Cuisine: tamil nadu
Keyword: Green Peas Kofta
Yield: 4
Calories: 198kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் பச்சை பட்டாணி
  • 2 உருளைக்கிழங்கு
  • 1 டீஸ்பூன் சீஸ்
  • 2 டீஸ்பூன் கார்ன் பளார்
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது
  • 1/2 கப் பொட்டுக்கடலை பவுடர்
  • உப்பு தேவையானஅளவு
  • எண்ணெய் தேவையானஅளவு

செய்முறை

  • உருளைக்கிழங்கு வேகவைத்து தோலை உரித்து மசித்துக்கொள்ளவும். பச்சை பட்டாணியையும் குழைய வேகவைத்து மசிக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளைக்கிழங்கு, பட்டாணி துருவிய சீஸ், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், கான்பிளான் மாவு, உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
  • மாவு கெட்டி பதத்திற்கு வரும் வரை தேவைக்கேற்க பொட்டுக்கடலை பவுடர் சேர்த்துக்கொள்ளவும்.
  • இப்போது உருண்டைகளாக உருட்டி காய்ந்த எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.
  • சுவையான கோப்தா ரெடி.

செய்முறை குறிப்புகள்

தக்காளி சாஸுடன் சேர்த்து

Nutrition

Serving: 250g | Calories: 198kcal | Carbohydrates: 30.3g | Protein: 4.2g