வேர்க்கடலையை நொறுக்குத்தீனியாகச் சாப்பிடாதவர்கள் உலகில் யாரேனும் இருக்கிறார்களா? உலர்ந்த வெவ்வேறு பயிறுகளோடு வேர்க்கடலையையும் கலந்து உலகின் பல தெருக்களில் விற்கிறார்கள். வேர்க்கடலை பட்டரை சாண்ட்விச்சில் தடவி சாப்பிடுவதும் வழக்கமாக இருக்கிறது. வேர்க்கடலைக்கென்று அதற்கே உரிய மணமும் ருசியும் உண்டு. குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பி சாப்பிடுகின்ற ஸ்னாக்ஸ் வகைகளை செய்தால் சத்தம் மில்லாமல் அனைத்தையும் மகிழ்ச்சியாக சாப்பிட்டு முடிப்பார்கள்.
இதனையும் படியுங்கள் : ருசியான பலாப்பழ குக்கீஸ் இப்படி செய்து பாருங்க! டீ, காபியுடன் சாப்பிட ஏற்ற ஸ்நாக்ஸ்!
அப்படி அவர்கள் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ் வகைகளில் ஒன்றான வேர்க்கடலை குக்கீஸை ஆரோக்கியமான வகையில் செய்து கொடுத்தால் நமக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். மேலும் இதனை நாம் வெகு நாட்கள் வைத்து கூட சாப்பிடலாம். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் பாக்ஸிற்கும் கொடுத்து அனுப்பலாம்.
வேர்க்கடலை பட்டர் குக்கீஸ் | Groundnut Butter Cookies
Equipment
- 1 பவுள்
- 1 கரண்டி
- 1 ஓவன்
தேவையான பொருட்கள்
- 1 கப் மைதா
- 1/2 கப் தேங்காய்
- 1/2 கப் வறுத்த வேர்க்கடலை
- 1 கப் சர்க்கரை
- 1/2 கப் வெண்ணெய்
- 1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
- 1/2 டீஸ்பூன் பேக்கிங்
- 3 டேபிள் ஸ்பூன் பால்
- 100 கிராம் கார்ன்ப்ளேக்ஸ்
செய்முறை
- மைதா உடன் பொடித்த சர்க்கரை பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு ஜலித்து கொள்ளவும்.
- பின் அதனுடன் வறுத்து பொடி செய்த வேர்க்கடலை, தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- பின் வெண்ணெய் சேர்த்து மிருதுவாக பிசையவும். பின் பால் தெளித்து பிசைந்து கொள்ளவும்.
- பின் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி கார்ன்ப்ளேக்ஸில் புரட்டி பட்டர் தடவி பட்டர் பேப்பர் போட்டு ரெடியா உள்ள ட்ரேயில் இடைவெளி விட்டு அடுக்கி வைக்கவும்.
- பின் ஓவனில் ரெடியா உள்ள குக்கீகளை வைத்து 160 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 20 நிமிடங்கள் வரை வேகவிட்டு எடுக்கவும்.
- சுவையான ஆரோக்கியமான கார்ன்ப்ளேக்ஸ் வேர்க்கடலை பட்டர் குக்கீஸ் ரெடி.