நாளை சிக்கன் வாங்கினால் அவசியம் மிஸ் பண்ணாம இப்படி ஹரியாலி சிக்கன் கிரேவி செஞ்சி பாருங்கள்!

- Advertisement -

பொதுவாக அசைவ பிரியர்களுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். சிக்கனில் பலவித ரெசிபிகள் உள்ளன. அதாவது சிக்கன் பிரியாணி, சிக்கன் குழம்பு, சிக்கன் வறுவல், சிக்கன் 65, சிக்கன் கிரேவி என்று பல விதமான ரெசிபி செய்யலாம். அவற்றில் பஞ்சாபி ஸ்டைல் ஹரியாலி சிக்கன் மிகவும் முக்கியமானதாக உள்ளது. பஞ்சாபி ரெசிபிக்கள் பெரும்பாலும் காரமாகவும், சுவையானதாகவும் இருக்கும். அதிலும் சிக்கன் ரெசிபிக்களை பற்றி சொல்லவே வேண்டாம். சுவை ஆள மயக்கும். அதிலும் பட்டர் சிக்கன், பாட்டியாலா சிக்கன், கடாய் சிக்கன் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

-விளம்பரம்-

அந்த வகையில் இப்போது பஞ்சாபி ஸ்டைல் ஹரியாலி சிக்கன் மசாலாவை எப்படி செய்வதென்று இந்த பதிவில் நாம் காண்போம். இந்த டிஷ் உண்மையில் மிகவும் எளிமையானது. மேலும் இது மழைக் காலங்களில் வீட்டில் செய்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். பொதுவாக சிக்கன் வகையில் நிறைய ரெசிபிகள் நாம் செய்து சாப்பிட்டிருப்போம். அந்த வகையில் பஞ்சாபி ஹரியாலி சிக்கனையும் ஒரு முறை செய்து பாருங்கள். ஹரியாலி சிக்கன் என்பது கொத்தமல்லி இலைகள், புதினா இலைகள் மற்றும் பச்சை மிளகாய் போன்ற புளிப்பும் காரமுமான பொருட்களின் கலவையில் ஹரியாலி சிக்கன் மாரினேட் செய்து தயாரிப்பது.

- Advertisement -

ஓட்டல் சுவையில் வீட்டில் ருசியான உணவு கிடைத்தால் யாருக்குத்தான் பிடிக்காது. இதை நீங்கள் நெய் சோறு மற்றும் வெஜிடபிள் பிரியாணி ஆகியவற்றுடனும் மற்ற அசைவ உணவுகளுடனும் பரிமாறலாம். நாம் சாதாரணமான சிக்கன் குழம்பை அவ்வளவு ருசியாக இருக்கும் பொழுது இந்த பஞ்சாபி சிக்கன் எவ்வளவு ருசியாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய வகையில் இந்த பஞ்சாபி சிக்கன் ரெசிபி இருக்கும். ஹரியாலி சிக்கன் எனப்பெயரிடப்பட்டுள்ள அந்த உணவை எப்படி சமைப்பது என்று பார்க்கலாம்.

Print
4 from 1 vote

ஹரியாலி சிக்கன் கிரேவி | Hariyali Chicken Gravy Recipe In Tamil

பொதுவாக அசைவ பிரியர்களுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். சிக்கனில் பலவித ரெசிபிகள் உள்ளன. அதாவது சிக்கன் பிரியாணி, சிக்கன் குழம்பு, சிக்கன் வறுவல், சிக்கன் 65, சிக்கன் கிரேவி என்று பல விதமான ரெசிபி செய்யலாம். அவற்றில் பஞ்சாபி ஸ்டைல் ஹரியாலி சிக்கன் மிகவும் முக்கியமானதாக உள்ளது. பஞ்சாபி ரெசிபிக்கள் பெரும்பாலும் காரமாகவும், சுவையானதாகவும் இருக்கும். அதிலும் சிக்கன் ரெசிபிக்களை பற்றி சொல்லவே வேண்டாம். சுவை ஆள மயக்கும். அதிலும் பட்டர் சிக்கன், பாட்டியாலா சிக்கன், கடாய் சிக்கன் போன்றவை குறிப்பிடத்தக்கவை. அந்த வகையில் இப்போது பஞ்சாபி ஸ்டைல் ஹரியாலி சிக்கன் மசாலாவை எப்படி செய்வதென்று இந்த பதிவில் நாம் காண்போம். இந்த டிஷ் உண்மையில் மிகவும் எளிமையானது. மேலும் இது மழைக் காலங்களில் வீட்டில் செய்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: dinner, LUNCH
Cuisine: Indian
Keyword: Hariyali Chicken Gravy
Yield: 4 People
Calories: 128kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கி சிக்கன்
  • 1/2 கப் தயிர்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

அரைக்க

  • 1/2 கப் சின்ன ‌வெங்காயம்
  • 15 முந்திரி
  • 1 கைப்பிடி கொத்தமல்லி, புதினா
  • 3 பச்சை மிளகாய்

செய்முறை

  • முதலில் சிக்கனை நன்கு சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு மிக்ஸியில் முந்திரி, சின்ன வெங்காயம், புதினா, கொத்தமல்லி, பச்சைமிளகாய் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பவுளில் கழுவிய சிக்கனை சேர்த்து அதனுடன் தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பிறகு இதனுடன் அரைத்து வைத்த மசாலா மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் ஊற வைத்த சிக்கனை சேர்த்து சிறிது நேரம் நன்றாக வதக்கவும்.
  • பிறகு இதில் உப்பு, கரம் மசாலா மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு சேர்த்து மூடி போட்டு சிக்கன் வேகும் வரை குறைந்த தீயில் வைத்து வேக விடவும்.
  • சிக்கன் நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து கிரேவி கெட்டியானவுடன் மிளகுத்தூள் மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி அடுப்பை‌ அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான ஹரியாலி சிக்கன் கிரேவி தயார்.

Nutrition

Serving: 600g | Calories: 128kcal | Carbohydrates: 13.4g | Protein: 16g | Fat: 4.7g | Sodium: 54.8mg | Potassium: 77.6mg | Fiber: 1.27g | Vitamin A: 29.5IU | Vitamin C: 606mg | Calcium: 24.71mg | Iron: 0.21mg

இதனையும் படியுங்கள் : இவ்வளவு சுவையாக சிக்கன் கிரேவி செய்ய முடியுமா? ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் சிக்கன் கிரேவி ரெசிபி இதோ உங்களுக்காக!