பொதுவாக ஒரு வீட்டின் கஷ்ட, நஷ்டம், பணம், செல்வம், சொத்துக்கள் என அனைத்தையும் நாம் வீட்டில் வாழ்கின்ற வாழ்க்கை தான் தீர்மானிக்கிறது. இருந்தாலும் அதையும் மீறி நமது வீட்டில் கடன் கஷ்டம், கெட்ட காரியங்கள் மட்டுமே நடந்து கொண்டே இருக்கிறது என்றால் அதற்கு வாஸ்து சாஸ்திரங்கள் கூட ஒரு காரணமாக இருக்கலாம். நமது வீடு நமது வீட்டில் உள்ள பொருட்கள் அமைந்திருக்கும் வாஸ்துகள் கூட நமது வீட்டின் நிலையை தீர்மானிக்கும் ஆகையால் இன்று வாஸ்து சாஸ்திரத்தின் படி ஒரு வீட்டில் எத்தனை கதவுகள் இருந்தால் அந்த வீட்டில் என்னென்ன நடக்கும் என்பதை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.
நீங்கள் குடியிருக்கும் வீட்டில் வாஸ்து சாஸ்திரத்தின் படி எத்தனை கதவுகள் எந்த எண்ணிக்கையில் உள்ளதோ அதற்கு ஏற்றார் போல் உங்களுக்கு பலன்களும் கிடைக்கும். உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் உங்கள் வீட்டில் வாஸ்து சாஸ்திர எண்ணிக்கை படி கதவுகளின் எண்ணிக்கை ஐந்தாக இருக்கும் பட்சத்தில் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு அடிக்கடி உடல் நலம் குறைவு ஏற்பட்டு அவதிப்படுவார்கள். அதனால் உங்கள் வீட்டில் எத்தனை கதவுகள் இருக்கிறது வாஸ்து சாஸ்திரம் படி அந்த எண்ணிக்கையும் அதன் பலன்களும் தெரிந்து விட்டால் அதற்கு ஏற்றார் போல் நீங்கள் வீட்டில் உள்ள கதவுகளை எண்ணிக்கையை கூட்டவும் குறைக்கவும் செய்யலாம்.
தற்சமயம் ஒரு வீடு என்று எடுத்துக் கொண்டால் அந்த வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட கதவுகள் தான் அமைக்கப்பட்டு இருக்கும். ஒரு கதவுகள் என்ற எண்ணிக்கையில் தற்சமயம் எந்த வீடுகளும் கட்டப்படுவதில்லை. ஆகையால் ஒன்றுக்கு மேற்பட்ட கதவுகளின் எண்ணிக்கையில் இருந்தே நாம் செல்லலாம்.
உங்கள் வீட்டில் உள்ள கதவுகளை எண்ணிக்கை இரண்டாக இருந்தால் உங்களுக்கு நல்ல பலன்கள் மட்டுமே கிடைத்துக் கொண்டே இருக்கும்.
உங்கள் வீட்டின் கதவுகளின் எண்ணிக்கை மூன்றாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு இருக்கும் எதிரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
உங்கள் வீட்டில் உள்ள கதவுங்களின் எண்ணிக்கை நான்காக இருக்கும் பட்சத்தில் உங்கள் வீட்டில் உள்ளவர்களின் ஆயுட்காலமும் கூடுதலாக இருக்கும்.
நாம் ஏற்கனவே பார்த்தவாறு உங்கள் வீட்டில் உள்ள கதவுகளின் எண்ணிக்கை ஐந்தாக இருக்கும் பட்சத்தில் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி உடல் நலக் குறைவால் அவதிப்படும் சூழ்நிலை உண்டாகும்.
உங்கள் வீட்டில் உள்ள கதவுகளின் எண்ணிக்கை ஆறாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு பரிபூரண புத்திரபாக்கியம் கிடைக்கும். புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் கூட ஆறு கதவுகள் உள்ள வீடாக பார்த்து குடி போகலாம்.
உங்களது வீட்டில் உள்ள கதவுகளின் எண்ணிக்கை ஏழாக இருக்கும் பட்சத்தில் உங்களை சுற்றி உங்களுக்கு நடக்கக்கூடிய ஆபத்துகளும் அதிகமானதாகவே இருக்கும்.
வீட்டில் உள்ள கதவுகளில் எண்ணிக்கை எட்டாக ஆக இருக்கும் பட்சத்தில் உங்களது வீட்டில் நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும் செல்வம் வீடு தேடி வந்து கொட்டிக் கொண்டே இருக்கும்.
உங்கள் வீட்டில் உள்ள கதவுகளின் எண்ணிக்கை ஒன்பதாக இருக்கும் பட்சத்தில் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் நோய்நொடி வந்து அவதிப்படுவார்கள்.
உங்கள் வீட்டில் உள்ள கதவுகளின் எண்ணிக்கை பத்தாக ஆக இருக்கும் பட்சத்தில் சகல ஐஸ்வர்யங்களும், பணமும் பொருளும், நேரடியாக உங்களின் வீடு தேடி தானாகவே வரும்.
How to count doors🚪