- Advertisement -
தினமும் சாம்பார், ரசம், புளிக்குழம்பு, சாப்பிட்டு அலுத்துப் போய்விட்டதா. கொள்ளு வைத்து ஒரு மசியல் சுலபமாக எப்படி செய்வது, என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு என்ற பழமொழியை அனைவரும் அறிந்து இருப்பீர்கள். உடல் பருமனாக உள்ளவர்கள் பெரும்பாலும் கொள்ளை தன உணவில் சேர்த்து கொள்வார்கள். கொள்ளு மசியல் எப்படி செய்வது. இப்போவே தெரிஞ்சுக்கலாம் வாங்க.
-விளம்பரம்-
கொள்ளு மசியல் | Horse Gram Masiyal Recipe In Tamil
தினமும் சாம்பார்,ரசம், புளிக்குழம்பு, சாப்பிட்டு அலுத்துப் போய்விட்டதா. கொள்ளு வைத்து ஒரு மசியல்சுலபமாக எப்படி செய்வது, என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம்தெரிந்து கொள்ளப் போகின்றோம். இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு என்ற பழமொழியைஅனைவரும் அறிந்து இருப்பீர்கள். உடல் பருமனாக உள்ளவர்கள் பெரும்பாலும் கொள்ளைதன உணவில் சேர்த்து கொள்வார்கள். கொள்ளு மசியல் எப்படி செய்வது. இப்போவே தெரிஞ்சுக்கலாம் வாங்க.
Yield: 4
Calories: 321kcal
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 200 கிராம் கொள்ளு
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 டீஸ்பூன் மல்லி
- 2 தக்காளி நறுக்கியது
- 4 வரமிளகாய்
- 5 பற்கள் பூண்டு
- 10 சின்ன வெங்காயம்
- புளி சிறு நெல்லிக்காய் அளவு
- கறிவேப்பிலை சிறிது
- கொத்தமல்லி சிறிது
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கொள்ளுவை போட்டு லேசாக வறுத்து இறக்கி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
- பின்னர் கொள்ளுவை கழுவி, குக்கரில் போட்டு, அடுப்பில் வைத்து, 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 6-7 விசில் விட்டு இறக்கி, தனியாக வைத்துக் கொள்ளவும்.
- பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், மல்லி, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து வதக்கி, பின் அதில் வேக வைத்துள்ள கொள்ளு சேர்த்து, கொத்தமல்லி தூவி 2 நிமிடம் நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
- பிறகு அதனை மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து, முக்கால் பதத்தில் அரைத்தால், கொள்ளு மசியல் ரெடி!!
Nutrition
Serving: 100g | Calories: 321kcal | Carbohydrates: 57.2g | Protein: 22g | Fiber: 5g | Calcium: 287mg | Iron: 7mg
- Advertisement -