இட்லி, தோசைக்கு இனி ருசியான செட்டிநாடு அவியல் குழம்பு இப்படி செய்து பாருங்க!

Aviyal
- Advertisement -

எப்பொழுதும் இட்லி, தோசைக்கு சட்னி, சாம்பார் என்று சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. செட்டிநாடு உணவு என்றாலே அதில் ஒரு தனி சுவைத்தான். அதுவும் இட்லி, தோசைக்கு செய்யப்படும் அவியல் அவ்வளவு சுவையாக இருக்கும். இந்த செட்டிநாடு அவியல் செஞ்சி இட்லி,

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : மதிய உணவுக்கு ஏற்ற கிராமத்து காய்கறி அவியல் இப்படி செஞ்சி பாருங்க!

- Advertisement -

தோசைக்கு தொட்டு சாப்பிட்டு பாருங்க எத்தனை இட்லி சாப்பிட்டோம் என்று கணக்கு தெரியாமல் ருசித்து சாப்பிடுவீங்க. இந்த செட்டிநாடு அவியல் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Print
4 from 1 vote

செட்டிநாடு அவியல் | Chettinad Therakkal Recipe In Tamil

எப்பொழுதும் இட்லி, தோசைக்கு சட்னி, சாம்பார் என்று சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. செட்டிநாடு உணவு என்றாலே அதில் ஒரு தனி சுவைத்தான். அதுவும் இட்லி, தோசைக்கு செய்யப்படும் அவியல் அவ்வளவு சுவையாக இருக்கும். இந்த செட்டிநாடு அவியல் செஞ்சி இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட்டு பாருங்க எத்தனை இட்லி சாப்பிட்டோம் என்று கணக்கு தெரியாமல் ருசித்து சாப்பிடுவீங்க. இந்த செட்டிநாடு அவியல் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time21 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian, TAMIL
Keyword: chettinad therakkal, செட்டிநாடு அவியல்
Yield: 4 people
Calories: 110kcal

Equipment

  • 2 கடாய்

தேவையான பொருட்கள்

அரைக்க:

  • 1 டீஸ்பூன் எண்ணெய்
  • டீஸ்பூன் சோம்பு
  • 4 சின்ன வெங்காயம்
  • 7 பல் பூண்டு
  • 5 பச்சை மிளகாய்
  • 3 வர மிளகாய்
  • 1 டீஸ்பூன் பொட்டுக்கடலை
  • 4 முந்திரி பருப்பு
  • 1 டீஸ்பூன் கசகசா
  • 1 கப் தேங்காய் துருவல்

தாளிக்க:

  • 1 டீஸ்பூன் எண்ணெய்
  • 1 பட்டை
  • ½ டீஸ்பூன் சோம்பு
  • 1 கப் பெரிய வெங்காயம் நறுக்கியது
  • கருவேப்பிலை கொஞ்சம்
  • 2 தக்காளி நறுக்கியது
  • உப்பு தேவையான அளவு
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • டீஸ்பூன் மல்லி தூள்
  • 2 கத்திரிக்காய் நறுக்கியது
  • உருளை கிழங்கு நறுக்கியது
  • கொத்தமல்லி பொடியாக நறுக்கியது

செய்முறை

  • முதலில் அரைக்க ஒரு பாண் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு சேர்த்து சிவந்ததும், சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், வர மிளகாய், சேர்த்து ஓரளவு வதங்கியதும் பொட்டு கடலை, முந்திரி பருப்பு, கசகசா சேர்த்து வதங்கியதும் துருவிய தேங்காய் சேர்த்து சிறிது நேரம் வதக்கி அதனை தனியாக ஒரு தட்டில் எடுத்து ஆற விடவும்.
  • பிறகு ஆறியதும் மிக்சில் சேர்த்து நைசாக தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும்.
  • அடுத்து ஒரு வானலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, சோம்பு சேர்த்து பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி, சேர்த்து குளஞ்சி வரவேண்டும்.
  • தக்காளி வெந்ததும் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பிறகு மல்லி தூள் சேர்த்து நன்கு குலைய வதக்க வேண்டும்.
  • அடுத்து அதில் சுத்தம் செய்து நறுக்கிய உருளை கிழங்கு, கத்திரிக்காய் சேர்த்து அப்படியே வதக்கவும்.
  • கொஞ்சம் மசாலாவில் வெந்ததும் 4 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து காய்கறிகளை மூடி போட்டு வேக விடவும்.
  • உருளை கிழங்கு, கத்திரிக்காய் வெந்ததும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கலந்து 1 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி உப்பு சரி பார்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
  • கொதித்ததும் அதன் மேல் நறுக்கிய கொத்தமல்லி தூவி அடுப்பை நிறுத்தும்.

Nutrition

Serving: 450G | Calories: 110kcal | Protein: 10g | Fat: 0.1g | Cholesterol: 0.5mg