முன்பெல்லாம் காதல் திருமணம் செய்து கொண்டால் திருமண உறவு என்பது விவகாரத்தில் தான் சென்று முடியும் என்று கூறுவார்கள் அந்த பயத்தின் காரணமாகவே பெற்றோர்கள் பலரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் இன்று காதலித்து திருமணம் செய்தாலும் அல்லது வீட்டிலேயே பார்த்து திருமணம் செய்து வைத்தாலும் சரி பெரும்பாலானோர் அந்த கல்யாண வாழ்க்கையில் திருப்தியாக வாழ்வது கிடையாது. கணவன் மனைவி இரண்டு பேருமே பிரிந்து வாழ்கிறார்கள் இப்படி பிரிந்து வாழும் கணவன் மனைவி இருவருக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு அன்பு துளியும் இருக்காது என்று பலர் நினைக்கலாம். ஆனால் அது தவறு ஒருவருக்கு ஒருவர் அன்போடு தான் இருப்பார்கள்.
யார் யாரெல்லாம் இதை செய்யலாம்
இருந்தாலும் ஏதோ சில கருத்து வேறுபாடுகள் மற்றும் ஈகோ போன்ற பிரச்சனைகள் வருவதால் சேர்ந்து வாழ்வதற்கு மனம் தடுக்கின்றது. இது போன்ற காரணமே இல்லாத சில விஷயங்களுக்காக பிரிந்த குடும்பங்கள் ஏராளம். அதனால் இது போன்ற விஷயங்களுக்காக கணவன் மனைவி பிரிந்து வாழக்கூடாது என்று நினைப்பவர்களும், ஏன் பிரிந்து வாழ்பவர்கள் கூட சேர்ந்து வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் மேலும் எந்தவித காரணங்களுக்காவும் கணவன் மனைவி பிரியவே கூடாது என்றும் நினைப்பவர்களும் ஆன்மீ ரீதியாக இந்த விஷயத்தை மட்டும் செய்து பாருங்கள் அதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
பரிகாரம்
கணவன் மனைவி என்ற உறவுக்குள் விரிசல் விழாமல் இருக்க வேண்டும் என்றால் நமக்கு சுக்கிர பகவானின் முழு அனுக்கிரகமும் கிடைக்க வேண்டும். இப்படி சுக்கிர பகவானை அனுகிரகம் மட்டும் பெற்றுவிட்டால் வாழ்க்கை முழுவதும் அந்த தம்பதிகள் பிரிந்து வாழவே மாட்டார்கள் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். அப்படி சுக்கிர பகவானின் அனுகிரகம் நமக்கு கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்றால் சுக்கிர பகவானுக்கு உகந்த நிறமான இளஞ்சிவப்பு நிறத்தில் ஒரு காகிதம் ஒன்று எடுத்துக் கொள்ளுங்கள். அதாவது பிங்க் கலர் காகிதம் ஒன்றை எடுத்துக்கொண்டு அதில் முதலில் கணவன் பெயரை எழுதி அதன் கீழே சுக்கிர பகவான் பெயரை எழுதி அதற்கு அப்புறமாக
மனைவியின் பெயரை எழுத வேண்டும்.
கட்டில் அடியில்
இப்போது இந்த பிங்க் கலர் காகிதத்தில் முதலில் கணவன் பெயரும், இரண்டாவதாக சுக்கிர பகவானின் பெயரும், மூன்றாவதாக மனைவியின் பெயரும் இருக்கும் இப்படி எழுதி இருக்கும் இந்த காகிதத்தை அப்படியே மடித்து உங்கள் வீட்டின் கட்டிலில் மெத்தை போட்டிருந்தால் அந்த மெட்டையின் அடியில் வைத்து விடுங்கள் ஆனால் நீங்கள் இப்படி செய்யும் பொழுது நீங்கள் எடுத்து கொண்ட காகிதம் கண்டிப்பான முறையில் பிங்க் கலர் காகிதமாக இருக்க வேண்டும். மேலும் நீங்கள் பெயர் எழுத பயன்படுத்தும் பேனாவும் பிங்க் கலராக இருந்தால் இன்னும் சிறப்பானதாக இருக்கும்.
பிரிந்து வாழும் சூழ்நிலை வராது
இப்படி பிங்க் கலர் பேப்பரில் கணவன் மனைவி பெயரை எழுதி வைத்துவிட்டு அதில் நாம் சுக்கிர பகவானின் பெயரையும் நாம் எழுதுவதன் மூலம் கணவன் மனைவி இடையே சுக்கிர பகவானே இருப்பதற்கு சமம். இந்த சுக்கிர பகவான் கடைசிவரை உங்களை பிரிய விடாமல் பார்த்துக் கொள்வார். அதாவது கணவன் மனைவி இருவருக்கும் இடையில் எவ்வளவு சண்டை, சச்சரவுகள் வந்தாலும் ஒருவரை ஒருவர் வெறுத்து பிரிந்து போகும் அளவிற்கு உண்டான சூழ்நிலைகளை என்றுமே உருவாகாது. இந்த பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு கண்டிப்பாக உடனடி பலன் கிடைக்கும்.
கிழிந்து காணாமல் போகும் வரை
இப்போது பெரும்பாலான நபர்களுக்கு கேள்வி எழலாம் இந்த பேப்பரை குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டுமா வேற என்ன செய்ய வேண்டும் என்று. நீங்கள் மேலே சொன்ன பரிகாரத்தை மட்டும் செய்து முடித்துவிட்டு அந்த பேப்பரை நீங்கள் கட்டிலுக்கு அடியில் வைத்து விட்டால் போதும் அந்த பேப்பரை கிழிந்து காணாமல் போகும் வரை அப்படியே விட்டு விடலாம். உங்களுக்கு மேலும் நம்பிக்கை வர வேண்டும் என்றால் பழைய காகிதம் கிழிந்து காணாமல் போன உடன் மீண்டும் எழுதி வைத்து விடுங்கள். நாம் எந்த ஒரு விஷயத்தையும் ஆத்மார்த்தமாக நம்பிக்கையுடன் செய்யும் போது அதற்குண்டான முழு பலன் நமக்கு கிடைக்கும் என்பார்கள் அதனால் இதையும் நம்பிக்கையுன் செய்து பாருங்கள் நல்ல பலனை உங்களுக்கு கிடைக்கும்.