குளு குளுவென்று நுங்கு குல்பி ஒரு முறை இப்படி வீட்டிலே சுலபமாக ட்ரை பண்ணி பாருங்கள்!

- Advertisement -

குல்பி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சுவையான உணவு வகை. வெயில் காலங்களில் வீட்டு வாசலில் மணி அடித்துக் கொண்டு வரும் குல்பி  காரரிடம் குல்பி வாங்கி சாப்பிடுவது, நம் குழந்தை பருவத்தில் யாராலும்  மறக்கவே முடியாத இனிமையான நினைவுகள். குல்பி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள். குல்ஃபி ஐஸ் யாருக்கு தான் பிடிக்காது? சிறு வயதில் அதிகம் விரும்பி சாப்பிட்ட ஐஸ் வகைகளில் குல்ஃபியும் ஒன்றாக இருந்திருக்கும்.

-விளம்பரம்-

மற்ற ஐஸ் வகைகளை விட குல்ஃபி ஆரோக்கியம் நிறைந்ததாக இருப்பதற்கு காரணம் அதில் சேர்க்கப்படும் பாலாகும். இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிகவும் சுலபமான முறையில்  வீட்டிலேயே செய்யலாம். கடைகளில் வாங்குவதை காட்டிலும் சுவையாகவும் அதே சமயத்தில் ஆரோக்கியமாகவும் இருக்கும்.  சுவையான குல்ஃபி நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

- Advertisement -

Print
No ratings yet

நுங்கு குல்பி | Ice Apple Kulfi Recipe In Tamil

குல்பிகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள். குல்ஃபி ஐஸ் யாருக்கு தான் பிடிக்காது? சிறு வயதில் அதிகம் விரும்பி சாப்பிட்ட ஐஸ் வகைகளில் குல்ஃபியும் ஒன்றாக இருந்திருக்கும். மற்ற ஐஸ் வகைகளை விட குல்ஃபி ஆரோக்கியம் நிறைந்ததாக இருப்பதற்கு காரணம் அதில் சேர்க்கப்படும் பாலாகும். இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிகவும் சுலபமான முறையில்  வீட்டிலேயேசெய்யலாம். கடைகளில் வாங்குவதை காட்டிலும் சுவையாகவும் அதே சமயத்தில் ஆரோக்கியமாகவும் இருக்கும்.  சுவையானகுல்ஃபி நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Dessert
Cuisine: tamil nadu
Keyword: Ice Apple Kulfi
Yield: 4
Calories: 206kcal

Equipment

  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 8 நுங்கு
  • 2 டம்ளர் காய்ச்சி ஆறின பால்
  • 1/4 கப் சர்க்கரை
  • 1 டேபிள் ஸ்பூன் சோள மாவு
  • 8 ஐஸ்க்ரீம் குச்சிகள்
  • 4 டேபிள்ஸ்பூன் நுங்கு துண்டுகள்

செய்முறை

  • நுங்கை சுத்தம் செய்து, தோலை நீக்கி சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி பிளேட்டில் வைத்துக் கொள்ளவும். பெரிய மிக்ஸி ஜாரில், நுங்கு, சர்க்கரை, சேர்த்து நன்கு அரைக்கவும். அடுத்து பாலை ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில் அரைத்ததை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். சோள மாவை பாலில் சேர்த்து, கட்டிகள் இல்லாமல் நன்கு கரைத்துக் கொள்ளவும்.
  • நன்கு கொதித்து குறுகினதும், சோளமாவு கரைசலை ஊற்றி கைவிடாமல் கிளறி, ஒன்று சேர சிறிது கெட்டியானதும், அடுப்பை நிறுத்தி விட்டு இறக்கவும். இறக்கி ஆறினதும், டம்ளர்களில் ஊற்றி மேலே நுங்கு துண்டுகளை போடவும்.
  • பிறகு ஐஸ்க்ரீம் குச்சிகளை சொருகி, ஃப்ரீஸரில் 8 மணி நேரம் வைக்கவும். பிறகு வெளியில் எடுத்து, டம்ளரின் அடிப்பகுதியை குழாயின் கீழே 1 நிமிடம் காட்டி, டம்ளரில் இருந்து எடுக்கவும்.
  • இப்போது,வித்தியாசமான, சுவையான, சுலபமான, நுங்கு குல்ஃபி தயார். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Nutrition

Serving: 500g | Calories: 206kcal | Carbohydrates: 20.4g | Protein: 6.9g | Fat: 9g | Cholesterol: 13.3mg | Sodium: 49.7mg | Potassium: 173.9mg | Vitamin A: 246IU | Vitamin C: 1.7mg | Calcium: 295.1mg | Iron: 0.2mg