இட்லி மாவு இருந்தால் போதும் மொறு மொறுனு போண்டா இப்படி செய்து அசத்துங்கள்!

- Advertisement -

இட்லி மாவு போண்டா உள்ளே சாப்டாவும் மேல நல்லா மொறு மொறுன்னு மொறுமொறுப்பாவர இந்த பொருளை சேர்த்து தான் செய்யணும். இந்த செய்முறையில் சுட்டு பாருங்க அருமையாக  இருக்கும். வீட்டில் ஏதாவது ஸ்நாக்ஸ் செய்ய வேண்டும் என்றால் அதற்காக எல்லா பொருட்களையும் தயார் செய்ய வேண்டியது இருக்கும். ஆனால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சிம்பிளாக ஸ்நாக்ஸ் செய்ய நிறைய ரெசிபிகள் உள்ளது .

-விளம்பரம்-

அதிலும் இட்லி மாவை வைத்து எண்ணற்ற ஸ்நாக்ஸ் வகைகள் செய்யலாம். அந்த வகையில் இட்லி மாவை வைத்து மொறு மொறு போண்டா எப்படி செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கார போண்டா பொதுவாக அரிசி மாவு, மைதா மாவு போன்றவற்றில் செய்வது உண்டு ஆனால் இட்லி மாவில் இது போல ரொம்ப சுலபமாக மாலை நேரத்தில் செஞ்சு பாருங்க, டீயுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். இட்லி மாவில்… காரசாரமான ருசியில். மொறுமொறுப்பான ரெசிபி செய்து அசத்துங்க..!!இந்த சுவையான இட்லி மாவு கார போண்டா எப்படி தயாரிப்பது? என்று இனி தொடர்ந்து இந்த பதிவை படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

Print
5 from 3 votes

இட்லி மாவு போண்டா | Idly flour Bonda Recipe In Tamil

கார போண்டா பொதுவாக அரிசி மாவு, மைதா மாவு போன்றவற்றில் செய்வது உண்டு ஆனால் இட்லி மாவில் இதுபோல ரொம்ப சுலபமாக மாலை நேரத்தில் செஞ்சு பாருங்க, டீயுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.இட்லி மாவில்… காரசாரமான ருசியில். மொறுமொறுப்பான ரெசிபி செய்து அசத்துங்க..!!இந்தசுவையான இட்லி மாவு கார போண்டா எப்படி தயாரிப்பது? என்று இனி தொடர்ந்து இந்த பதிவைபடித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: snacks
Cuisine: tamil nadu
Keyword: Idly flour Bonda
Yield: 4
Calories: 72kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 2 கப் இட்லி மாவு
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • கொத்தமல்லி சிறிதளவு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • உப்பு தேவையான அளவு 
  • எண்ணெய் தேவையான அளவு 

செய்முறை

  • முதலில் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலையை சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் இட்லி மாவை எடுத்து, அதில் நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய், கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி இலை,சீரகம்,ருசிக்கேற்ப உப்பு போட்டு,கூடுதலாக தண்ணீர் சேர்க்காமல் நன்கு கெட்டியாகவும், போண்டா மாவு பதத்திற்கும் நன்கு கரண்டியால் கலந்து கொள்ளவும்.
  • பின்பு அகலமான கடாயை அடுப்பில் வைத்து, அதில் பொரிக்க தேவைகேற்ப எண்ணெய் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.மேலும் எண்ணெய் நன்கு கொதித்ததும், அதில் கலந்து வைத்த இட்லி மாவு கலவையை சிறிய உருண்டைகளாக எடுத்து,கொதிக்கின்ற எண்ணெயில் போட்டு நன்கு வேக வைக்கவும்.
  • போண்டாவானது நன்கு வெந்ததும், நீளமான கம்பியால் திருப்பி விட்டு, இரு புறமும் சிவக்கும் அளவுக்கு, வேக வைத்து பொரித்து எடுத்து சூடாக பரிமாறினால், மொறுமொறுப்பான இட்லி மாவு போண்டா ரெடி.
     

செய்முறை குறிப்புகள்

கலந்து வைத்த இட்லி மாவு கலவையில், தண்ணீர் அதிகளவு இருந்தால், அதில் கூடுதலாக சிறிதளவு அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளலாம்.
 

Nutrition

Serving: 600g | Calories: 72kcal | Carbohydrates: 45g | Protein: 4g | Fat: 2g | Saturated Fat: 0.7g | Cholesterol: 0.5mg