இட்லி மீதமானால் உப்புமா செய்யலாம் அந்த உப்புமாவை இப்படி ருசியாகவும் செய்யலாம் ஒரு முறை செஞ்சி பாருங்க!

- Advertisement -

இட்லி உப்புமா அப்படின்னு சொன்னாலே நம்ம எல்லாருக்கும் ஞாபகம் வருது சூரிய வம்சம் இட்லி உப்புமா. இட்லியில் உப்புமா செய்யலாம் அப்படின்னு கண்டு புடிச்சது வேண்டுமென்றால் சூரியவம்சம் படமாக இருக்கலாம். ஆனால்  இந்த சூரிய வம்சம் இட்லி உப்புமாவுல நிறைய பொருட்களை எக்ஸ்ட்ராவா சேர்த்து அந்த சூரியவம்சம் இட்லி உப்புமாவை பார்ட் 2 , பார்ட் 3 எல்லாம் கொண்டு வந்த பெருமை நம்மளோட இல்லத்தில இருக்கிற இல்லத்தரசிகளோடு தான் சேரும்.

-விளம்பரம்-

இந்த சூரியவம்சம் இட்லி உப்புமா மாலை நேர சிற்றுண்டியா எப்போதெல்லாம் இட்லி இல்லங்கல்ல மீதம் இருக்குதோ அப்போதெல்லாம்   அவங்க வீட்டுல இட்லி உப்புமா தான். நாமளும் அந்த சூர்யவம்சம் இட்லி உப்புமா ஸ்டோரி தெரிஞ்சி தான் இருக்கோம். இந்த உப்புமால நம்ம என்னெல்லாம் புதுசா சேர்த்து பண்ண போறோம் அப்படிங்கறதையும் பார்த்துட்டு உங்களுக்கு விருப்பமானது நீங்க அதுல சேர்த்து பண்ணிக்கலாம். 

- Advertisement -

ரவா உப்புமாவை  நிறைய பேருக்கு இப்ப பிடிக்கிறது கிடையாது இட்லி உப்புமான குழந்தைங்க சாப்பிடுவாங்களா அப்படின்னு நீங்க கேட்கலாம். இந்த உப்புமாவுல நிறைய வெஜிடபிள்ஸ் கலர் கலரா சேர்த்து நம்ம செய்ய இருக்கோம். குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி ரொம்பவே ருசியாகவும் கலர் புல்லாவும் பண்ணி கொடுத்தா அதிகமாவே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த சூரியவம்சம் இட்லி உப்புமா எப்படி பண்ண போறோம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

Print
No ratings yet

இட்லி உப்புமா | Idly Uppuma Recipe In Tamil

சூரியவம்சம்இட்லி உப்புமா மாலை நேர சிற்றுண்டியா எப்போதெல்லாம் இட்லி இல்லங்கல்ல மீதம் இருக்குதோ அப்போதெல்லாம்   அவங்க வீட்டுல இட்லி உப்புமா தான். நாமளும் அந்த சூர்யவம்சம் இட்லி உப்புமா ஸ்டோரி தெரிஞ்சி தான் இருக்கோம். இந்த உப்புமால நம்ம என்னெல்லாம் புதுசா சேர்த்து பண்ண போறோம் அப்படிங்கறதையும் பார்த்துட்டு உங்களுக்கு விருப்பமானது நீங்க அதுல சேர்த்து பண்ணிக்கலாம். . இந்தசூரியவம்சம் இட்லி உப்புமா எப்படி பண்ண போறோம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Idly Uppuma
Yield: 4
Calories: 38kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 5 இட்லி
  • 1 வெங்காயம்
  • 1 பச்சைமிளகாய்
  • 1 கப் கேரட்
  • 1/4 கப் பச்சை பட்டாணி
  • 3 ஸ்பூன் இட்லி பொடி
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் இட்லிகளை  சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு ஒரு கடாயில் பாத்திரத்தை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து நறுக்கி வைத்துள்ள இட்லி துண்டுகளை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அதே பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும். பிறகு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வறுத்தெடுக்கவும் .
  •  
    வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு அதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  • பிறகு அதில் கேரட், வேக வைத்து எடுத்து உள்ள பச்சைப்பட்டாணி சேர்த்து நன்றாக வதக்கவும். பச்சை பட்டாணி, கேரட் நன்றாக வதங்கிய பிறகு அதில் வறுத்து வைத்துள்ள இட்லிகளை சேர்த்து கலந்து விடவும்.
  • இப்பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும் பிறகு அதில் இட்லி பொடியை சேர்த்து நன்றாக  கலந்துஇறக்கி சூடாக பரிமாறினால் சூரிய வம்சம் இட்லி உப்புமா ரிட்டன்ஸ் தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 38kcal | Carbohydrates: 4.5g | Protein: 18g | Fat: 0.1g | Fiber: 1.7g | Sugar: 2.2g | Vitamin A: 45IU | Vitamin C: 40mg | Calcium: 2mg