இந்த ஒரு பழம் சாப்பிட்டால் உடலில் இருந்த பல நோய்கள் இருந்த இடம் தெரியாமல் போகும்!

- Advertisement -

பலாப்பழம்… முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்துக்கு மருத்துவ குணம் உண்டு. இதில் ஒரு புரதச்சத்து, மாவுச்சத்து, நார்ச்சத்து, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், தாமிரம், குளோரின், கந்தகம், வைட்டமின் ஏ, சி உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் உள்ளன.

-விளம்பரம்-

புத்துணர்ச்சி கிடைக்கும்

பலாப்பழத்தை மற்ற பழங்களைப்போல வெறுமனே சாப்பிடுவதைவிட தேன், நெய், வெல்லம், பனங்கற்கண்டு போன்ற ஏதாவது ஒன்றை சேர்த்து சாப்பிட்டு வந்தால் அதன் முழு பலனைப் பெறலாம். அப்படி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பலம் சேர்க்கும். பலாப்பழத்துடன் நெய் சேர்த்து வதக்கி சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும். பலாச்சுளைகளை தேன் ஊற்றி ஊற வைத்து பிறகு அதனுடன் நெய் சேர்த்து மீண்டும் ஊற வைத்துச் சாப்பிடலாம். இப்படி காலையில் ஊற வைத்து மாலையில் சாப்பிட்டு வந்தால் மூளை நரம்புகள் வலுவடைவதுடன் புத்துணர்ச்சி கிடைக்கும்.

- Advertisement -

மலச்சிக்கல் நீங்கும்

பலாப்பழத்துடன் நாட்டுச் சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் செரிமானக்கோளாறுகள் சரியாகும். அத்துடன் இருமலும் கட்டுப்படும். பலாச்சுளைகளை சிறிது சிறிதாக நறுக்கி மண்சட்டியில் போட்டு பால் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து தேன், நெய், ஏலக்காய்த் தூள் சேர்த்து சாப்பிட்டால் ரத்த ஓட்டம் சீராவதுடன் நரம்புகள் வலுப்பெறும். இதை பாலூட்டும் தாய்மார், மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள், வாத நோய், பித்தக்கோளாறு, காசநோய் (டி.பி) உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது.

எலும்புகள் பலம்பெறும்

பலாப்பழத்தில் மெக்னீசியம் கால்சியம் சத்துக்கள் இருப்பதால் எலும்புகள் பலம் பெற உதவும். இதை குழந்தைகளுக்கு அடிக்கடி சாப்பிட கொடுத்து வந்தால் எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் பார்த்துக்கொள்ளலாம். வைட்டமின் சி மற்றும் ஏ சத்து நிறைந்திருப்பதால் பார்வைக் குறைபாடுகள் வராமல் பார்த்துக் கொள்ளலாம். பலா காயில் பிஞ்சு காயை சமையல் செய்யலாம். பலா பிஞ்சுடன் மிளகு, லவங்கப்பட்டை, தேங்காய்த் துருவல், சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கோளாறு, நெஞ்செரிச்சல் மற்றும் பல பிரச்சினைகள் சரியாகும். வாதம், பித்தம், கபம் சீராகும்; நரம்புத் தளர்ச்சி சரியாகும்.