தினமும் நம்மில் பலரும் மாலை நேரத்தில் டீயோ காபியோ அருந்தும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கின்றோம். மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது உங்கள் வீட்டில் உள்ளோர் ஸ்நாக்ஸ் ஏதாவது சாப்பிட கேட்கிறார்களா? இன்று என்ன ஸ்நாக்ஸ் செய்து கொடுப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா?
இதனையும் படியுங்கள் : ருசியான மோர் வடை குழம்பு ஒருமுறை இப்படி வைத்து பாருங்கள்! இதன் ருசியே தனி ருசி தான்!
வழக்கமாக மாலை நேரங்களில் வடை, சமோசா,போண்டா புட்டு,கொழுக்கட்டை போன்றவற்றை அதிகமாக சாப்பிட்டு இருப்போம். ஒவ்வொரு விதமும் ஒவ்வொரு விதமான சுவையை தருகின்றன. அந்த வகையில் இன்று நாம் ஜவ்வரிசி வைத்து மொறுமொறுவென வடை செய்ய உள்ளோம்.
-விளம்பரம்-
ஜவ்வரிசி மசால் வடை | Javvarisi Masal Vadai Recipe in Tamil
மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது உங்கள் வீட்டில் உள்ளோர் ஸ்நாக்ஸ் ஏதாவது சாப்பிட கேட்கிறார்களா? இன்று என்ன ஸ்நாக்ஸ் செய்து கொடுப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? வழக்கமாக மாலை நேரங்களில் வடை, சமோசா,போண்டா புட்டு,கொழுக்கட்டை போன்றவற்றை அதிகமாக சாப்பிட்டு இருப்போம். ஒவ்வொரு விதமும் ஒவ்வொரு விதமான சுவையை தருகின்றன. அந்த வகையில் இன்று நாம் ஜவ்வரிசி வைத்து மொறுமொறுவென வடை செய்ய உள்ளோம்.
Yield: 4 People
Calories: 350kcal
Equipment
- 1 பவுள்
- 1 கரண்டி
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கப் மாவு ஜவ்வரிசி
- 2 வேகவைத்த
- 1/4 கப் கடலை
- 1 நறுக்கிய
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 4 பச்சை மிளகாய்
- 1 துண்டு இஞ்சி
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 கைப்பிடி நறுக்கிய கொத்தமல்லி இலை
- உப்பு தேவையானஅளவு
- எண்ணெய் தேவையானஅளவு
செய்முறை
- முதலில் ஜவ்வரிசியை நன்றாக 3 முறை கழுவி பிறகு தண்ணீர் விட்டு 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- பின்னர் தண்ணீர் முழுவதும் வடிக்கிற அளவு வடி கட்டிக் கொள்ளவும்.
- ஒரு பவுலில் ஜவ்வரிசி போட்டு அத்துடன் பொடியாக நறுக்கின இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளவும்.
- பிறகு சீரகம், வெங்காயம் மற்றும் கடலை மாவு சேர்த்து நன்கு பிசைந்துக் கொள்ளவும்.
- அத்துடன் வேக வைத்து மசித்து வைத்திருக்கும் உருளை கிழங்கு, மிளகாய் தூள், மல்லி தழை மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து பிசைந்துக் கொள்ளவும்.
- அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிதமான சூட்டில் வைத்து பிசைந்து வைத்திருக்கும் ஜவ்வரிசி மாவை எடுத்து வடைப்போல் தட்டி இரண்டு பக்கமும் திருப்பி விட்டு நன்கு மொறு மொறுப்பாக பொரித்தெடுக்கவும்.
- சூப்பர் சுவையுடன் மொறு மொறு ஜவ்வரிசி மசால் வடை சுவைக்க தயார். மாலையில் டீயுடன் சேர்த்து சுவைக்கவும்.
Nutrition
Serving: 500g | Calories: 350kcal | Carbohydrates: 58.5g | Protein: 7g | Fat: 0.02g | Sodium: 3mg | Potassium: 5mg | Fiber: 3g | Sugar: 1g | Calcium: 20mg