எல்லோர் வீட்டிலேயும் தான் மீன் குழம்பு வைப்போம். ஆனால் காரைக்குடி மீன் குழம்புக்கு என்றே தனி சுவையும் மனமும் உண்டு. அதே மீன் குழம்பை நாம் வைத்தால் நம்முடைய கை பக்குவம் ருசி இருக்காது. என்ன செய்வது. காரைக்குடி மீன் குழம்பு குறிப்பை பின்பற்றி யார் மீன் குழம்பு வைத்தாலும் ருசியாக வரும். உங்க வீட்ல ஒரு முறை காரைக்குடி மீன் குழம்பு இப்படி வைத்து பாருங்க. பக்குவமான மீன் குழம்பு பக்குவமான ருசியில் கிடைக்கும்.
கோழிக்கறி, ஆட்டுக்கறி இவற்றைவிட உடம்பிற்கு மிகவும் ஆரோக்கியமான ஒரு உணவு என்றால் அது மீன் வகைகள் தான். மீன்களில் உடம்பிற்கு தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் உள்ளது. எனவே சிறுவயது முதலே குழந்தைகளுக்கு மீன் சாப்பிடக் கொடுத்து பழக்குவது மிகவும் நல்ல விஷயமாகும். அதிலும் மீன்களை வறுப்பதை விட, குழம்பில் சேர்த்து சாப்பிடுவது உடல் நலத்துக்கு நன்மை பயக்கும். அவ்வாறு பெருமளவில் மீன் குழம்பு வைப்பது அனைவருக்கும் இருக்கின்ற ஒரு வழக்கம் தான். பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் பலரது வீட்டிலும் மீன் குழம்பு தான் இருக்கும். இந்த ஞாயிற்று கிழமையில் மீன் வாங்கி இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் மீன் குழம்பு வைத்து பாருங்க. வாங்க இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
காரைக்குடி மீன் குழம்பு | Kaaraikudi Fish Gravy
Equipment
- 1 கடாய்
Ingredients
- 1/2 கிலோ மீன்
- 1 ஸ்பூன் மிளகு
- புளி எலுமிச்சைபழ அளவு
- 2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 3 தக்காளி நறுக்கியது
- 10 பல் பூண்டு
- மல்லி இலை
- 1 குழிக்கரண்டி நல்லெண்ணெய்
- 2 வெங்காயம்
- 1 ஸ்பூன் கடுகு
- 2 ஸ்பூன் தனியாத்தூள்
- 1 ஸ்பூன் வெந்தயம்
- 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 2 பச்சை மிளகாய்
- 1 ஸ்பூன் சீரகம்
- உப்பு தேவையான அளவு
- 1/2 மூடி தேங்காய்
- கறிவேப்பிலை தேவையான அளவு
Instructions
- முதலில் மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பின்பு புளியை தண்ணீரில் கரைத்து வைத்து கொள்ளவும்.
- தேங்காய்,மிளகு, சீரகம், சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிதளவு சீரகம், மிளகு, வெந்தயம்,கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- அதன் பின் பூண்டு, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின் புளித்தண்ணீர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது தேவைாயான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- குழம்பு ஒரளவு கெட்டியானவுடன் மீன் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு மல்லி இலை கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.பின்பு பரிமாறவும். சுவையான காரைக்குடி மீன் குழம்பு தயார்.