காரசாரமான ருசியில் கடாய் பன்னீர் இப்படி ஒரு தடவை ஈஸியா வீட்டிலயே செஞ்சு பாருங்க!

- Advertisement -

இப்ப இருக்கிற குழந்தைகளுக்கு எல்லாம் பன்னீர் அப்படின்னாலே ரொம்ப பிடிக்குது இந்த பன்னீர் வச்சு நம்ம நிறைய உணவுகள் செய்யலாம் அதுல எல்லாருக்கும் ரொம்பவே ஃபேவரைட் ஆன ஒன்னு அப்படின்னா பன்னீர் பட்டர் மசாலா தான் சப்பாத்திக்கு ஒரு சூப்பரான காம்பினேஷன்ல செம்ம டேஸ்ட்ல இருக்கும் அது மட்டும் இல்லாம பன்னீர் புலாவ் பன்னீர் 65 பன்னீர் கிரேவி அப்படின்னு பன்னீர் வச்சு நம்ம எக்கச்சக்கமான உணவுகள் செய்யலாம்.

-விளம்பரம்-

பன்னீர் வச்சு செய்யக்கூடிய உணவுகள் என்னதான் நிறைய இருந்தாலும் எல்லாரும் ரொம்பவே அதிகமா விரும்பக் கூடியது பன்னீர் பட்டர் மசாலா தான். ஆனா எப்பவுமே பன்னீர் பட்டர் மசாலா சாப்பிட்டு போர் அடிச்சி இருக்கும் அவங்க எல்லாரும் இப்ப நம்ம செய்ய போற இந்த கடாய் பன்னீர் செஞ்சு சாப்பிட்டு பாருங்க ரொம்ப சூப்பரான டேஸ்ட்ல சப்பாத்திக்கு சைட் டிஷ்ஷா வச்சு சாப்பிட அருமையான காம்பினேஷனா இருக்கும்.

- Advertisement -

இத சப்பாத்திக்கு சைடு டிஷ் மட்டும் இல்லாம இட்லி, தோசை பூரி எல்லாத்துக்கும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம் சாதத்துக்கும் இதை சைட் டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம் வெரைட்டி சாதத்துக்கு இன்னும் மேல் சூப்பரா இருக்கும். இந்த கடை பன்னீர் செய்வதற்கு ரொம்ப நேரம் கூட ஆகாது சட்டு என்ன செஞ்சு முடிச்சிடலாம் ரொம்பவே எளிமையான ஒரு டிஷ் தான் இந்த கடாய் பன்னீர்.

இந்த பன்னீர்ல உடம்புக்கு ஆரோக்கியமான பல சத்துக்கள் இருக்கு அதனால குழந்தைகளுக்கு பன்னீர் வச்சு கொஞ்சம் டிஃபரண்டா இந்த மாதிரி செஞ்சு கொடுத்தா அவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க அவங்களுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்கும். இப்ப வாங்க இந்த அருமையான கடாய் பன்னீர் எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
5 from 1 vote

கடாய் பன்னீர் | Kadaai Paneer Recipe In Tamil

பன்னீர் வச்சு செய்யக்கூடிய உணவுகள் என்னதான் நிறைய இருந்தாலும் எல்லாரும் ரொம்பவே அதிகமா விரும்பக் கூடியது பன்னீர் பட்டர் மசாலா தான். ஆனா எப்பவுமே பன்னீர் பட்டர் மசாலா சாப்பிட்டு போர் அடிச்சி இருக்கும் அவங்க எல்லாரும் இப்ப நம்ம செய்ய போற இந்த கடாய் பன்னீர் செஞ்சு சாப்பிட்டு பாருங்க ரொம்ப சூப்பரான டேஸ்ட்ல சப்பாத்திக்கு சைட் டிஷ்ஷா வச்சு சாப்பிட அருமையான காம்பினேஷனா இருக்கும். குழந்தைகளுக்கு பன்னீர் வச்சு கொஞ்சம் டிஃபரண்டா இந்த மாதிரி செஞ்சு கொடுத்தா அவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க அவங்களுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Kadaai Paneer
Yield: 4
Calories: 321kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 250 கிராம் பன்னீர்
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 2 வெங்காயம்
  • 2 தக்காளி
  • 2 பச்சை மிளகாய்
  • 2 டீஸ்பூன் தனியா தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் கஸ்தூரி மேத்தி
  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு

செய்முறை

  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் பட்டை கிராம்பு ஏலக்காய்  சேர்த்து தாளிக்கவும்.
  • பிறகு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். வெங்காயம் வதங்கியவுடன் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.பிறகு தனியா தூள் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்
  • எண்ணெய் பிரிந்து வரும் போது நீளமாக நறுக்கிய பன்னீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • 5 நிமிடங்கள் அனைத்தும் சேர்த்து வெந்தவுடன் கஸ்தூரி மேத்தி மற்றும் மல்லி இலைகளை சேர்த்து இறக்கினால் சுவையான கடாய் பன்னீர் தயார்

Nutrition

Serving: 100gram | Calories: 321kcal | Carbohydrates: 2.9g | Protein: 25g | Sodium: 18mg | Potassium: 71mg | Fiber: 1.4g | Vitamin C: 12mg | Calcium: 23mg | Iron: 1mg

இதையும் படியுங்கள் : ருசியான பன்னீர் புலாவ் இனி இப்படி செஞ்சி பாருங்கள்! சுட சுட புலாவ் இப்படி செய்து கொடுத்தால் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவார்கள்!

-விளம்பரம்-