ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கடாய் பன்னீர் செய்வது எப்படி ?

- Advertisement -

கடாய் பன்னீர் ஒரு சுவையான மற்றும் பிரபலமான வட இந்திய சைட் டிஷ் ஆகும். குழந்தைகளின் வளர்ச்சிக்கு பால் பொருட்கள் மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் இவற்றில் தான் கால்சியம் அதிகம் உள்ளது. பொதுவாக பன்னீர் சாப்பிடுவது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றாகும். பன்னீரை நீங்கள் பொரித்தோ அல்லது மசாலா செய்தோ சாப்பிட்டு வரலாம். எப்படி செய்தாலும் இது சுவை மிகுந்தது. இது எப்படி சுவை வாய்ந்ததோ அதைப் போல் சத்துக்களும் நிறைந்த ஒன்று. பன்னீர், போன்ற உணவுகளில் அதிக அளவு நிறைந்திருக்கிறது. இதனை குழந்தைகள் சாப்பிட அவர்கள வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் முழுவதுமாக கிடைக்கிறது. அதிலும் குழந்தைகள் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்கள். அத்தகைய பன்னீரை இரவில் கிரேவி போன்று செய்து சப்பாத்திக்கு கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

-விளம்பரம்-

சப்பாத்தி இட்லி, தோசை, பூரிக்கு கடாய் பனீர் செய்து கொடுத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் குழந்தைகள் சாப்பிடுவார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். புரோட்டீன் சத்து அதிகமுள்ள பன்னீரை உணவுடன் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ஆனால் இதனை பலரும் வீட்டில் செய்வதில்லை. ஹோட்டல்களுக்கும், ரெஸ்டாரண்ட்களுக்கும் செல்லும் பொழுது பன்னீர் கிரேவியை ஆர்டர் செய்து சாப்பிடுகிறார்கள்.

- Advertisement -

ஏனென்றால் அங்கு செய்யப்படும் பன்னீர் கிரேவியின் சுவை நாம் வீட்டில் செய்யும் கிரேவியின் சுவை போன்று இல்லாமல் மிகவும் சூப்பராக இருக்கும். எனவே குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். அவ்வாறு ஹோட்டலில் செய்யும் அதே சுவையில் இந்த கடாய் பன்னீர் எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து போகின்றோம். சப்பாத்தி, நாண் வகை ரொட்டிகளுக்கு பொருத்தமாக இருக்கும் கடாய் பனீரை எப்படி செய்வது என்று பார்க்கலாம். பனீர் ஹோட்டல்களிலும், தாபாக்களிலும் செய்யக் கூடிய அதே சுவையில் செய்து கொடுத்தால் சலிக்காமல், தட்டாமல் விருப்பமாக சாப்பிடுபவர்கள்.

Print
No ratings yet

ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கடாய் பன்னீர் | Kadai Paneer Recipe In Tamil

கடாய் பன்னீர் ஒரு சுவையான மற்றும் பிரபலமான வட இந்திய சைட் டிஷ் ஆகும். குழந்தைகளின் வளர்ச்சிக்கு பால் பொருட்கள் மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் இவற்றில் தான் கால்சியம் அதிகம் உள்ளது. பொதுவாக பன்னீர் சாப்பிடுவது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றாகும். பன்னீரை நீங்கள் பொரித்தோ அல்லது மசாலா செய்தோ சாப்பிட்டு வரலாம். எப்படி செய்தாலும் இது சுவை மிகுந்தது. இது எப்படி சுவை வாய்ந்ததோ அதைப் போல் சத்துக்களும் நிறைந்த ஒன்று. பன்னீர், போன்ற உணவுகளில் அதிக அளவு நிறைந்திருக்கிறது. இதனை குழந்தைகள் சாப்பிட அவர்கள வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் முழுவதுமாக கிடைக்கிறது. அதிலும் குழந்தைகள் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்கள். அத்தகைய பன்னீரை இரவில் கிரேவி போன்று செய்து சப்பாத்திக்கு கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: dinner
Cuisine: Indian
Keyword: kadai paneer
Yield: 4 People
Calories: 321kcal

Equipment

  • 1 தவா
  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 வாணலி

தேவையான பொருட்கள்

  • 200 கி பன்னீர்
  • 1 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 1 குடைமிளகாய்
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1/2 டீஸ்பூன் மிளகு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 பிரிஞ்சி இலை
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் ஃப்ரெஷ் க்ரீம்
  • 1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி
  • 1 டீஸ்பூன் கஸ்தூரி மேத்தி
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் பன்னீரை சிறிய துண்டுகளாக வெட்டி அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா தூள், எலுமிச்சை சாறு மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
  • பின் ஒரு தவாவை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பன்னீரை சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
  • அதன்பிறகு அதே தவாவில் வெங்காயம் மற்றும் ‌குடைமிளகாயை சதுரமாக வெட்டி சேர்த்து வதக்கி கொள்ளவும்.
  • பின் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் மிளகு, சீரகம் சேர்த்து பின் வெங்காயம் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி ஆற விடவும்.
  • இவை ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும்.
  • பின் நாம் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி போட்டு கொதிக்க விடவும்.
  • கிரேவி நன்கு கொதித்ததும் பிரஷ் க்ரீம் சேர்த்து நன்கு கலந்து அதனுடன் கஸ்தூரி மேத்தி கசக்கி சேர்த்து பொரித்து வைத்திருக்கும் பன்னீரை சேர்த்து கலந்து இரண்டு நிமிடங்கள் வேக விடவும்.
  • அதன்பிறகு நாம் வதக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் குடைமிளகாயை சேர்த்து நன்கு கலந்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சிறிது கொத்தமல்லியை சேர்த்து‌ இறக்கினால் சுவையான கடாய் பன்னீர் தயார்.

Nutrition

Serving: 450g | Calories: 321kcal | Carbohydrates: 3.6g | Protein: 25g | Fat: 2.5g | Saturated Fat: 1.8g | Sodium: 18mg | Potassium: 71mg | Fiber: 1.4g | Vitamin A: 505IU | Vitamin C: 25mg | Calcium: 407mg | Iron: 17mg

இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் பன்னீர் டிக்கா ரெம்ப சுலபமாக இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்கள்! வீட்டில் உள்ளவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்!