இனிப்பான ஸ்வீட் என்றால் சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. கடையில செய்ற ஸ்வீட்னா எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஆனா வீட்டுல செஞ்சா அந்த மாதிரி வர மாட்டேங்குது அப்படின்னு வீட்ல இருக்க தாய்மார்கள் எல்லாரும் ரொம்ப பீல் பண்ணுவாங்க.
அவங்களுக்காகவே வீட்ல செய்யக்கூடிய ரொம்பவே ஈஸியா செய்யக்கூடிய ஒரு அருமையான கேசரி அதுவும் கல்யாண வீட்டு கேசரி எப்படி செய்வது அப்படின்னு பார்க்கலாம். கல்யாண வீடுகளில் கேசரி சாப்டுட்டு அந்த டேஸ்ட் நமக்கு நாக்கிலேயே ஒட்டிக்கிடும் அதனால குழந்தைகள் கூட வீட்டில் வந்து அதே மாதிரி செஞ்சு தாங்க அம்மானு கேட்டுகிட்டே இருப்பாங்க அந்த அளவுக்கு சுவை அருமையாக இருக்கக்கூடிய ஒரு கல்யாண வீட்டை கேசரி இப்போ எப்படி செய்யலாம்னு வாங்க பார்க்கலாம்…
கல்யாண வீட்டு கேசரி | Kalyaana Veetu Kesari In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கப் ரவை
- 1 கப் சர்க்கரை
- 3 கப் தண்ணீர்
- 120 மில்லி நெய்
- 1 சிட்டிகை கேசரி பவுடர்
- 1 டீஸ்பூன் ஏலக்காய் பொடி
- 10 முந்திரி
- 10 உலர்ந்த திராட்சை
செய்முறை
- ஒரு கடாயில் சிறிதளவு நெய் சேர்த்து அதில் எடுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் உலர் திராட்சையை போட்டு பொன்னிறமாகும் வரை நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
- அதே கடாயில் ரவையை சேர்த்து அடுப்பை குறைத்து வைத்து ரவை வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.
- மறுபடியும் அதே கடாயில் தண்ணீர் சேர்த்து அதனுடனே நெய் சேர்த்து அதில் ஏலக்காய் பொடி மற்றும் கேசரி பவுடரை கலந்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
- தண்ணீர் கொதித்த உடன் ரவையை சேர்த்து கலந்து விடவும் ரவை சிறிது வெந்தவுடன் எடுத்து வைத்துள்ள சர்க்கரையை சேர்த்து கிளறவும்.
- பிறகு வறுத்து வைத்துள்ள உலர்ந்த திராட்சை மற்றும் முந்திரியை சேர்த்துக் கொள்ளவும்
- இப்பொழுது அருமையான கல்யாண வீட்டு கேசரி தயார் இதை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்
Nutrition
இதையும் படியுங்கள் : கிராமத்து ஸ்டைலில் ருசியான காளான் குழம்பு இப்படி ட்ரை பண்ணி பாருங்க! சுட சுட சாதத்துடன் சாப்பிட பக்காவாக இருக்கும்!