ருசியான கல்யாண பருப்பு இப்படி ஒரு முறை வீட்டில் ட்ரை பண்ணி பாருங்களேன்!

- Advertisement -

கல்யாண பருப்பு ஒரு முறை இப்படி செய்து பாருங்களேன், நல்ல சுவையாக இருக்கும். அசைவ சைடு டிஷ் ஆகா இருந்தாலும், அது அசைவமாக பக்க உணவாக இருந்தாலும் சாதத்திற்கு இந்த பருப்பை போட்டு, சாப்பிட்டால் அமிர்தமாக இருக்கும் .  அசைவமாக ,சைவமாக இருந்தாலும் சாதாரணமாக சாப்பிடுவதை விட கல்யாண பருப்பு இருந்தால் இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே சாப்பிடுவார்கள். அப்படி ஒரு சுவையான கு

-விளம்பரம்-

கல்யாண பருப்பை வித்தியாசமாக எப்படி செய்வது என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். என்னதான் வீட்டில் பருப்புசெய்தாலும் கல்யாண வீட்டில் செய்யப்படும் பருப்புமிகவும் சுவையாக இருக்கும். அதே மாதிரி நாமும் வீட்டில் ட்ரை பண்ணலாம் என்றால், அந்த அளவுக்கு நமக்கு சுவை வராதுநெய் மணக்க சூப்பரான கல்யாண வீட்டு பருப்பு, ரொம்ப எளிதாக நம்முடைய வீட்டிலும் எப்படி தயார் செய்வது என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

- Advertisement -
Print
5 from 1 vote

கல்யாண பருப்பு | Kalyana Paruppu Recipe In Tamil

கல்யாண பருப்பை வித்தியாசமாக எப்படி செய்வதுஎன்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். என்னதான்வீட்டில் பருப்புசெய்தாலும் கல்யாண வீட்டில் செய்யப்படும் பருப்புமிகவும் சுவையாக இருக்கும்.அதே மாதிரி நாமும் வீட்டில் ட்ரை பண்ணலாம் என்றால், அந்த அளவுக்கு நமக்கு சுவை வராது.நெய்மணக்க சூப்பரான கல்யாண வீட்டு பருப்பு, ரொம்ப எளிதாக நம்முடைய வீட்டிலும் எப்படி தயார்செய்வது என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
Prep Time5 minutes
Active Time8 minutes
Course: LUNCH, Side Dish
Cuisine: tamil nadu
Yield: 4
Calories: 143kcal

Equipment

  • 1 குக்கர்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கப் துவரம் பருப்பு
  • 1 தேக்கரண்டி பெருங்காயம்
  • உப்பு தேவையானஅளவு

அரைக்க

  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 2 பல் பூண்டு
  • 1/4 தேக்கரண்டி சீரகம்
  • 2 மிளகாய்வற்றல்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்

தாளிக்க

  • 1 மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய்
  • 1/2 தேக்கரண்டி கடுகு
  • 1 மிளகாய்வற்றல்
  • 1 இணுக்கு கறிவேப்பிலை

செய்முறை

  • துவரம் பருப்புடன்பெருங்காயம் சேர்த்து குழைய வேகவைத்து கடைந்து வைக்கவும்.
     
  • அரைக்க வேண்டிய பொருட்களை தண்ணீர் சேர்த்து மையாக அரைக்கவும்.
  • அரைத்த கலவையை வேகவைத்த பருப்புடன் சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து கொதிக்க விடவும்.
  • கொதித்ததும் தாளிக்க வேண்டியவற்றை தாளித்து சேர்த்து கிளறி மேலும் ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி பரிமாறவும்.

Nutrition

Serving: 100g | Calories: 143kcal | Carbohydrates: 27g | Protein: 8g | Fat: 1g | Sodium: 64mg | Potassium: 232mg | Calcium: 4mg | Iron: 2mg