கல்யாண வீட்டு சாம்பார், இட்லி தோசை, சாதம்,வடை னு எல்லாத்துக்கூடயும் சாப்பிடுவதற்கு ரொம்பவே அருமையா இருக்கும்!

- Advertisement -

சாம்பார் நிறைய பேருக்கு ரொம்பவே பிடிக்கும் சில பேருக்கு சுத்தமாவே பிடிக்காது. ஆனால் செய்ற விதத்துல செஞ்சா எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். அதுலயும் கல்யாண வீடுகளில் வைக்கக்கூடிய சாம்பார் ரொம்ப வாசனையா சுவையா சூப்பரா இருக்கும். வீட்ல சாம்பாரே பிடிக்காதவங்க கூட கல்யாண வீட்டு பந்தில வாங்கி வாங்கி சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு கல்யாண வீட்டு சாம்பார்  அருமையா இருக்கும். இட்லி தோசை, சாதம்,வடை னு எல்லாத்துக்கூடயும் வைத்து சாப்பிடுவதற்கு ரொம்பவே அருமையா இருக்கும்..

-விளம்பரம்-

பொதுவா சாம்பார்ல நம்ம சேர்க்கிற பருப்புகள்ல புரோட்டின் அதிகமாகவே இருக்கும். அதனால அந்த புரோட்டின் நிறைந்த பருப்பு இருக்கிற சாம்பார நம்ம சாப்பிட்டா நம்ம ஹெல்த்துக்கு ரொம்பவே நல்லது.‌.

- Advertisement -

வீட்ல வைக்கிற சாம்பார் பிடிக்காதவங்களுக்கு இப்படி சாம்பார் அருமையா வைத்துக் கொடுக்கிறது என்று நிறைய பேருக்கு டவுட் இருக்கும் அந்த வகையில் அருமையான வாசனையான கல்யாண வீட்டு சாம்பார் எப்படி சுலபமான முறையில் வைக்கிறதுன்னு இப்ப நம்ம பார்க்கலாம் வாங்க.

Print
5 from 1 vote

கல்யாண வீட்டு சாம்பார் | Kalyana Veetu Sambar In Tamil

கல்யாண வீடுகளில்வைக்கக்கூடிய சாம்பார் ரொம்ப வாசனையா சுவையா சூப்பரா இருக்கும். வீட்ல சாம்பாரே பிடிக்காதவங்ககூட கல்யாண வீட்டு பந்தில வாங்கி வாங்கி சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு கல்யாண வீட்டுசாம்பார்  அருமையா இருக்கும். இட்லி தோசை, சாதம்,வடைனு எல்லாத்துக்கூடயும் வைத்து சாப்பிடுவதற்கு ரொம்பவே அருமையா இருக்கும்.. பொதுவா சாம்பார்ல நம்ம சேர்க்கிற பருப்புகள்ல புரோட்டின் அதிகமாகவே இருக்கும். அதனால அந்த புரோட்டின் நிறைந்த பருப்பு இருக்கிற சாம்பார நம்ம சாப்பிட்டா நம்ம ஹெல்த்துக்கு ரொம்பவே நல்லது.‌.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Kalyana veetu Sambar
Yield: 4
Calories: 38kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 3/4 கப் துவரம் பருப்பு
  • 1/4 கப் பாசிப்பருப்பு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1 1/2 டேபிள் ஸ்பூன் மல்லி விதைகள்
  • 1/2 ஸ்பூன் வெந்தயம்
  • 4 மிளகாய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 2 மிளகாய்
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 20 சின்ன வெங்காயம்
  • 10 பற்கள் பூண்டு
  • 2 தக்காளி
  • 10 பீன்ஸ்
  • 2 கேரட்
  • 1 முருங்கைக்காய்
  • 2 கத்திரிக்காய்
  • 2 டேபிள் ஸ்பூன் சாம்பார் பொடி
  • புளி தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் வெல்லம்
  • 1 டேபிள் ஸ்பூன் நெய்
  • 1 கைப்பிடி அளவு மல்லி இலை

செய்முறை

  • ஒரு குக்கரில் துவரம் பருப்பையும் பாசிப்பருப்பையும் சேர்த்து நன்றாக கழுவி விட்டு அதனுடன் தேவையானஅளவிற்கு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்த மூன்று விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்
  • ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் கடலைப்பருப்பை போட்டு நன்றாக வறுத்துக் கொள்ளவும் அதன்பிறகு மல்லி விதைகள், அரை டீஸ்பூன் சீரகம்,20 வெந்தயம்,2 மிளகாய் என அனைத்தையும் போட்டுபொன்னிறமாகும் வரை வறுக்கவும்
  • இறுதியாக எடுத்து வைத்துள்ள தேங்காய் துருவலை சேர்த்து தேங்காய் துருவிலும் பொன்னிறமாகும் வரைநன்றாக வறுத்து அதனை ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்
  • இப்பொழுது ஒரு கடாயில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு 15 வெந்தயம் சேர்த்துபொரிந்த உடன் வெங்காயம் பூண்டு கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
  • வெட்டி வைத்துள்ள பீன்ஸ் கேரட் கத்திரிக்காய் முருங்கைக்காய் சேர்த்து வதங்கியவுடன் அதில் இரண்டு டேபிள் ஸ்பூன்அளவிற்கு சாம்பார் தூள் சேர்த்து உப்பு சேர்த்து தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து காய்கறிகள் நன்றாக வேகும் வரை வேக வைக்க வேண்டும்
  • காய்கறிகள் வெந்தவுடன் அதில் மாங்காய் மற்றும் எலுமிச்சை பழ அளவிற்கு புளியை கரைத்து அதில் சேர்த்துக்கொள்ளவும். பிறகு குக்கரில் வேக வைத்துள்ள பருப்பை அதனுடன் சேர்த்து அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து10 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்
  • அதனுடன் வெல்லம் சேர்த்து கலந்த உடன் ஒரு கைப்பிடி அளவிற்கு மல்லி இலைகளை அதில் தூவி விட்டு எடுத்தால்வறுத்து அரைத்த கல்யாண வீட்டு சாம்பார் மணக்க மணக்க தயார்
  • இதனை இட்லி தோசை வடை சாதம் என அனைத்திடனும் சேர்த்து பரிமாறினால் சுவை அருமையாக இருக்கும்

Nutrition

Serving: 500g | Calories: 38kcal | Carbohydrates: 4.5g | Protein: 18g | Fiber: 1.7g | Vitamin A: 45IU | Vitamin C: 40mg | Iron: 10mg

இதையும் படியுங்கள் : ருசியான குதிரைவாலி சாம்பார் சாதம் காலை டிபனுக்கு இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்கள்!