தற்போதைய நாட்களில் பலரும் சமையலில் அடித்து தூள் கிளப்புகின்றனர் ஏன் வீட்டில் இருக்கும் ஆண்களும் கூட இப்போது சமையலில் பட்டைய கிளப்புகின்றனர். மட்டன், சிக்கன், காய்கறி போன்றவற்றை பயன்படுத்தி கிரேவி, குழம்பு, குருமா, கூட்டு, பொறியல் என விதவிதமாய் சமைக்க தெரிந்தவர்களும் சொதப்பும் ஒரே விஷயம் ரசம் தான். இங்கு இருக்கும் பலருக்கு ரசம் எப்படி பக்குவமான முறையில் வைப்பது என்று தெரியாது. மேலும் நாம் ரசத்திற்கு அரைக்கும் ரசப்பொடி எப்படி அரைப்பது என்றும் பலருக்கு தெரியாது.
இதையும் படியுங்கள் : சுவையான தக்காளி ரசம் செய்வது எப்படி ?
கடைகளில் வைக்கும் ரெடிமேட் ரசப்பொடியை வாங்கி ரசம் வைக்கிறார்கள். இது போன்ற நீங்கள் ரெடிமேட் ரசப்பொடி வாங்கி ரசம் செய்தால் அதன் சுவையும், மணமும் உங்களுக்கு பிடித்தார் போல் எப்போதும் வராது. அதற்கு நீங்களே வீட்டிலேயே ரசப்பொடி அரைத்து அதை வைத்து ரசம் செய்து பாருங்கள் ரசத்தின் சுவையும் மணமும் அட்டாசமாக இருக்கும். அதனால் இன்று கல்யாண ரசப்பொடி எப்படி அரைப்பது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்
50 கிராம் மல்லி
30 கிராம் சீரகம்
30 கிராம் மிளகு
30 கிராம் துவரம் பருப்பு
10 கிராம் பெருங்காயம்
2 கொத்து கருவேப்பிலை
8 வர மிளகாய்
1 tbsp மஞ்சள் தூள்
செய்முறை விளக்கம்
முதலில் கடாயை அடுப்பில் வைத்து அதில் 50 கிராம் மல்லி சேர்த்து வறுத்து கொள்ளுங்கள், மல்லியில் இருந்து நன்றாக மணம் வர தொடங்கியதும் அதனை ஒரு பெரிய தட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பின் கடாயில் 30 கிராம் அளவு சீரகம் சேர்த்து நன்றாக வறுத்து எடுங்கள், சீரகம் நன்கு வறுப்பட்டதும் அதையும் தட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்பு கடாயில் 30 கிராம் அளவிற்கு துவரம் பருப்பு சேர்த்து வறுக்கவும்.
துவரம் பருப்பை கருகாமல் வறுத்துக் கொள்ளுங்கள். துவரம் பருப்பு பொன்னிறமாக வறுப்பட்டதும் அதையும் பெரிய தட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். ரசப்பொடியுடன் துவரம்பருப்பு சேர்த்து அரைத்தால் ரசம் கெட்டியாக கிடைக்கும்.
பின்பு 10 கிராம் பெருங்காய கட்டிகளை கடாயில் சேர்த்து வறுக்கவும். பின் பெருங்காய கட்டிகள் நன்கு வறுப்பட்டு பொரிந்து வந்தவுடன் அதனையும் தட்டில் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்.
பின்பு இரண்டு கொத்து கருவேப்பிலையை கடாயில் சேர்த்து கருவேப்பிலை ஈரப்பதம் போகி மொறு மொறுவன வரும் சமயத்தில் அதையும் எடுத்து தட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்பு கடாயில் எட்டு வரமிளகாய் சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
பின்பு வறுத்த வரமிளகாயும் ஏற்கனவே வறுத்த பொருட்களுடன் சேர்த்து நன்கு குளிர வைத்துக் கொள்ளுங்கள். பின் அனைத்து பொருட்களும் நன்கு குளிர்ந்த உடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் ஒரு டீஸ்பூன் அளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக பொடியாக்கிக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் மணமணக்கும் கல்யாண வீட்டு ரசப்பொடி தயார்.