நாம் பொதுவாக சிக்கன், மட்டன் போன்ற கடினமான அசைவ உணவுகள் உட்கொள்ளும் போது கடைசியாக ரசம் சேர்த்து சாப்பிடுவது எதற்கு தெரியுமா ? சிக்கன் மட்டன் போன்ற உணவு பொருட்கள் செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். அதற்காக சிக்கன் மட்டன் போன்ற கடினமான உணவு பொருட்களை நாம் உட்கொள்ளும் போதும் நாம் சாப்பாட்டுடன் ரசம் சேர்த்து சாப்பிடுவதால் செரிமான பணிகள் வேகமாக நடக்கும்.
இதையும் படியுங்கள் : காரசாரமான சின்ன வெங்காய புளி குழம்பு செய்வது எப்படி ?
இந்த ரசத்தை வழக்கம் போல் செய்யாமல் புதியதாக ஒரு ரசம் ஒன்று செய்து பார்க்கலாம். ஆகையால் இன்று இந்த தக்காளி ரசத்தை ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்கள் உணவோடு மட்டும் சாப்பிடாமல் தனியாக சூப் போல குடிக்கவும் செய்வார்கள் அந்த அளவுக்கு மிகவும் ருசியான முறையில் அட்டகாசமாக இருக்கும். ஆகையால் இந்த தக்காளி ரசம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
தக்காளி ரசம் | Tomato Rasam Recipe in Tamil
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
- 1 குழம்பு பாத்திரம்
தேவையான பொருட்கள்
மிக்ஸியில் அரைக்க
- பெருங்காயம் சிறிய கட்டி
- 3 வர மிளகாய்
- 6 பல் பூண்டு
- 1 tbsp மிளகு
- 2 tbsp சீரகம்
- 4 தக்காளி நறுக்கியது
- 2 ½ கிளாஸ் தண்ணீர்
ரசம் வைக்க
- 1 tbsp எண்ணெய்
- 1 tbsp கடுகு
- 1 கொத்து கருவேப்பிலை
- 2 வர மிளகாய்
- 3 tbsp உப்பு
- 1 tbsp மஞ்சள் தூள்
- 1 கொத்து கொத்த மல்லி
செய்முறை
- முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொண்டு அதில் ஒரு சிறிய அளவு துண்டு பெருங்காய கட்டி, மூன்று வர மிளகாய், 6 பல் பூண்டு, ஒரு டீஸ்பூன் மிளகு, 2 டீஸ்பூன் அளவு சீரகம் சேர்த்து கொரகொரவென நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
- பின்பு ஒரு நான்கு தக்காளி பழங்களை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதையும் மிக்ஸி ஜாரில் ஏற்கெனவே அரைத்த பொருட்களுடன் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்த தக்காளியை சேர்த்து கொள்ளவும்.
- இதனுடன் அரைத்த தக்காளியுடன் இரண்டரை கிளாஸ் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளுங்கள். பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதனோடு ஒரு டீஸ்பூன் அளவு கடுகு சேர்த்துக் கொள்ளுங்கள்.
- பின் கடுகு நன்கு பொரித்து வந்ததும் ஒரு கொத்து கருவேப்பிலை மற்றும் இரண்டு வர மிளகாய்களை பாதியாக வெட்டி சேர்த்துக் கொள்ளவும் பின்பு ஒரு பத்து வினாடிகள் இதை தாளித்து பின் நம் அரைத்து வைத்திருக்கும் தக்காளி கரைசலை இதனுடன் சேர்த்து ஊற்றிக் கொள்ளவும்.
- பின் இதனுடன் ஒரு டீஸ்பூன் அளவு மஞ்சள் தூள் மற்றும் 3 டீஸ்பூன் அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட்டுக் கொள்ளுங்கள். பின்பு ரசம் நன்றாக கொதித்து நூரைத்து வரும் பொழுது அடுப்பை அணைத்து ஒரு கைப்பிடி கொத்தமல்லியை தூவி விடுங்கள் சுவையான தக்காளி ரசம் இனிதே தயாராகிவிட்டது.
Nutrition
English Overview: tomato rasam is one of the most important dishes in india. tomato rasam recipe or tomato rasam seivathu eppadi or tomato rasam in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.