வெயில் காலத்துக்கு ஏத்த கம்மங்கூழ்‌ இந்த மாதிரி செஞ்சு பாருங்க!

- Advertisement -

வெயில் காலத்துக்கு ஏத்த மாதிரி நம்ம என்னதான் நிறைய கூல் ட்ரிங்க்ஸ் ஜூஸ் அப்படின்னு குடிச்சாலும் உண்மையாவே நம்ம வெயில் காலத்துக்கு குடிக்க வேண்டிய ஒண்ணுன்னா அது கம்மங்கூழ் தான். கம்மங்கூழ் குடிக்கிறதால நமக்கு எக்கச்சக்கமான ஆரோக்கியங்கள் கிடைக்கும். கம்மங்கூழ் ல தயிர் ஊத்தி அது கூட வெங்காயம், பச்சை மிளகாய் தொட்டுக்க ஊறுகாய் இல்ல அப்பளம் ஏதாவது ஒன்னு வச்சு குடிச்சா இந்த வெயிலுக்கு நல்லா இதமா ஜில்லுனு குடிக்கிறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும்.

-விளம்பரம்-

அது மட்டும் இல்லாம இந்த கம்மங்கூழ் குடிக்கிறது மூலமா நம்ம உடம்புக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடல் சூடு அதிகமா இருக்குறவங்களுக்கு கம்மங்கூழ் கொடுக்கிறது ரொம்பவே நல்லது. மூல நோய் இருக்கிறவங்களுக்கும் கம்மங்கூழ் ரொம்ப நல்லது. இப்படி கம்மங்கூழ் இல்லாத நன்மைகளே கிடையாது என்று சொல்லலாம் அந்த அளவுக்கு நிறைய நன்மைகள் நமக்கு கிடைக்கும்.

- Advertisement -

பொதுவா எல்லாருமே கம்மங்கூழ் வெளியில தான் வாங்கி குடிப்பாங்க ஆனா வீட்லயே மிகவும் குறைவான விலை கடையில கிடைக்கிற விலைக்கு வீட்டில் நிறைய பேரு அதை குடிக்கலாம். செய்யிறதும் ரொம்ப ரொம்ப ஈஸி. ரொம்ப குறைவான பொருட்கள் வச்சு ஒரு தரமான நிறைவான கம்மங்கூழ் வீட்டிலேயே எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்

Print
4 from 2 votes

கம்மங்கூழ் | Kambu Koozh Recipe In Tamil

வெயில் காலத்துக்கு ஏத்த மாதிரி நம்ம என்னதான் நிறைய கூல் ட்ரிங்க்ஸ் ஜூஸ் அப்படின்னு குடிச்சாலும் உண்மையாவே நம்ம வெயில் காலத்துக்கு குடிக்க வேண்டிய ஒண்ணுன்னா அது கம்மங்கூழ் தான். கம்மங்கூழ் குடிக்கிறதால நமக்கு எக்கச்சக்கமான ஆரோக்கியங்கள் கிடைக்கும். கம்மங்கூழ் ல தயிர் ஊத்திஅது கூட வெங்காயம், பச்சை மிளகாய் தொட்டுக்க ஊறுகாய் இல்ல அப்பளம் ஏதாவது ஒன்னு வச்சு குடிச்சா இந்த வெயிலுக்கு நல்லா இதமா ஜில்லுனு குடிக்கிறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும். பொதுவா எல்லாருமே கம்மங்கூழ் வெளியில தான் வாங்கி குடிப்பாங்க ஆனா வீட்லயே மிகவும் குறைவான விலை கடையில கிடைக்கிற விலைக்கு வீட்டில் நிறைய பேரு அதை குடிக்கலாம்
Prep Time8 hours
Active Time20 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Kambu Koozh
Yield: 4
Calories: 91kcal

Equipment

  • 1 அடி கனமான பாத்திரம்

தேவையான பொருட்கள்

  • 1 கப் கம்பு
  • 2 கப் தயிர்
  • 3 பச்சை மிளகாய்
  • 10 சின்ன வெங்காயம்

செய்முறை

  • முதலில் கம்பை 8 மணி நேரம் நன்றாக ஊற வைத்து கொள்ளவும்
  • ஊற வைத்த கம்பை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்
  • அரைத்த கம்பை ஒரு அடிகனமான பாத்திரத்தில் சேர்த்து 1/2 மணி நேரம் கை விடாமல் கிளறவும்.
  • கெட்டியாகி ஆறிய பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கிளறாமல் மூடி வைக்கவும்.
  • பிறகு 8 மணி நேரம் கழித்து நன்றாக கரைக்கவும். அதில் தயிர் சேர்த்து நன்றாக கலந்து நறுக்கிய வெங்காயம் மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து பரிமாறினால் சுவையான கம்மங்கூழ் தயார்

Nutrition

Serving: 200g | Calories: 91kcal | Carbohydrates: 19g | Protein: 7.6g | Saturated Fat: 84g | Sodium: 84mg | Potassium: 198mg | Fiber: 4g | Iron: 0.1mg

இதையும் படியுங்கள் : இரவு டிபனுக்கு சூப்பரான சிறுதானிய பருப்பு அடை இப்படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!