Home ஸ்நாக்ஸ் காலை டிபனுடன் சாப்பிட சூப்பரான கம்பு மெது வடை இப்படி செய்து பாருங்க எவ்வளவு செய்தாலும்...

காலை டிபனுடன் சாப்பிட சூப்பரான கம்பு மெது வடை இப்படி செய்து பாருங்க எவ்வளவு செய்தாலும் காலியாகும்!

மாலை நேரத்தில் ஒரு கப் தேநீருக்கு ஏற்ற ஸ்நாக்ஸ் ஏதாவது சாப்பிட்டால் நல்லா இருக்கும். அதுவும் வீட்டிலேயே செய்து சாப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்கும். பொதுவாக ஸ்நாக்ஸ் என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது வடை தா‌ன். மாலையில் டீ – க்கு பொருத்தமான உணவாக வடைக்கு நிகர் எதுவும் இருக்க முடியாது. அப்படி வாழைப்பூ வடை, பருப்பு வடை என சாப்பிட்ட நீங்கள் கம்பு மெது வடை சாப்பிட்டிருக்கீங்களா..? ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். கம்பில்‌ பலவித சத்துக்கள் நிறையந்துள்ளன. நம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய தானிய வகைகளில் சிறு தானிய வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நம் உடலுக்குத் தேவையான அனைத்து வகையான உயிர் சத்துக்களும் நிறைந்ததாக தான் சிறுதானியங்கள் இருக்கின்றன. அவற்றில் மிகவும் முக்கியமான ஒரு தானியம் தான் கம்பு.

-விளம்பரம்-

மற்ற எந்த தானியங்களிலும் இல்லாத அளவிற்கு புரதச்சத்து அதிகம் இருக்கக்கூடிய தானியமாகவும் இந்த கம்பு திகழ்கிறது. இப்படி எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள இந்த அற்புத கம்பில் எப்படி சுவையான மற்றும் ஆரோக்கியமான வடை தயார் செய்யலாம் என்று பார்க்கலாம். அப்படிப்பட்ட இந்த கம்பை பயன்படுத்தி கம்பு வடை செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதை விரும்பி உண்பார்கள்.‌ இந்த வடை மிகவும் ருசியாக, அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இது சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதும் கூட. இந்த வடையை எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்ததும் சுடச்சுட சட்னியுடன் தொட்டு சாப்பிடும் போது அதன் சுவையே அலாதி தான்.

Print
No ratings yet

கம்பு மெது வடை | Kambu Medu Vadai Recipe In Tamil‌

மாலை நேரத்தில் ஒரு கப் தேநீருக்கு ஏற்ற ஸ்நாக்ஸ் ஏதாவது சாப்பிட்டால் நல்லா இருக்கும். அதுவும் வீட்டிலேயே செய்து சாப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்கும். பொதுவாக ஸ்நாக்ஸ் என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது வடை தா‌ன். மாலையில் டீ – க்கு பொருத்தமான உணவாக வடைக்கு நிகர் எதுவும் இருக்க முடியாது. அப்படி வாழைப்பூ வடை, பருப்பு வடை என சாப்பிட்ட நீங்கள் கம்பு மெது வடை சாப்பிட்டிருக்கீங்களா..? ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். கம்பில்‌ பலவித சத்துக்கள் நிறையந்துள்ளன. நம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய தானிய வகைகளில் சிறு தானிய வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த கம்பை பயன்படுத்தி கம்பு வடை செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதை விரும்பி உண்பார்கள்.‌ இந்த வடை மிகவும் ருசியாக, அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இது சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதும் கூட.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: evening, snacks
Cuisine: Indian
Keyword: Kambu Medu Vadai
Yield: 4 People
Calories: 361kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 வாணலி
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1/2 கப் கம்பு
  • 1/4 கப் உளுந்து
  • 4 பச்சை மிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 2 பெரிய வெங்காயம்
  • 1/4 கப் கறிவேப்பில்லை, கொத்தமல்லி
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கம்பு மற்றும் உளுந்தை தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற வைத்து கொள்ளவும். பின்‌ வெங்காயம், கறிவேப்பில்லை, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் கம்பு‌ மற்றும் உளுந்தை மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மிளகு, கம்பு மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் ஒரு கை அளவு மாவை எடுத்து நடுவில் துளை இட்டு எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  • அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான கம்பு வடை தயார். இந்த வடை தேங்காய் சட்னி அல்லது சாம்பாருடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 400g | Calories: 361kcal | Carbohydrates: 6.8g | Protein: 11.9g | Fat: 5.1g | Sodium: 54mg | Potassium: 238mg | Fiber: 8.7g | Vitamin A: 7IU | Vitamin C: 42mg | Calcium: 32.3mg | Iron: 9.3mg

இதனையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் கம்பு அல்வா ஒரு தடவை இப்படி செய்து பாருங்க! வாயில் வைத்தவுடன் கரையும்!