Advertisement
ஆன்மிகம்

நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்த பணம் வீண் செலவாகமல் இருக்க! இந்த ஒரு விளக்கு மட்டும் ஏற்றுங்கள் போதும்!

Advertisement

நாம் வாழ்க்கையில் பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு போராடி நாம் வேலை பார்க்கும் நிறுவனங்களிலோ அல்லது நாம் படாத பாடுபட்டு பெரிய அளவில் வந்த சொந்த தொழில் மூலமாக நம் வாழ்க்கையில் முன்னேறி வந்திருப்போம் அதற்காக எவ்வளவு உழைத்திருப்போம் எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்திருப்போம் என்று நமக்கு மட்டும்தான் தெரியும். ஆனால் நம் வளர்ச்சியையும் நம்முடைய வசதி வாய்ப்புகளையும் பொறாமை குணங்களுடன் பார்க்கும் சில நபர்களால் கண் திருஷ்டி ஏற்பட்டு நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்துக்களை இந்த கண் திருஷ்டி எளிதில் ஆழித்து விடும். ஆகையால் இந்த கண் திருஷ்டியில் இருந்து நம்மளை பாதுகாத்துக் கொள்ள வராஹி அம்மனை எப்படி வழிபட வேண்டும் அதற்காக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதனை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்

ஐத்து திரி அகல் விளக்கு

நாம் வீட்டில் இருந்த படியே வராகி அம்மனை வழிபடுவதற்கு வராகி அம்மனின் திருஉருவச் சிலையோ அல்லது திருவருவப்படமா வீட்டில் இல்லை என்றாலும் பரவாயில்லை 5 திரி போட் அகல் விளக்கை பூஜை அறையில் ஏற்றி வைக்கலாம். எதற்காக ஐந்து திரி போடுகிறோம் என்றால் வராகி அம்மனுக்கு பஞ்சமுகி தேவி, பஞ்சமி தேவி என பஞ்சபூதங்களுடன் ஒப்பிட்டு சில பெயர்களும் உண்டு என்பதால் அகல் விளக்கு ஐந்து திரி போடுவது கூடுதல் சிறப்பை தரும் மேலும் நாம் வராகி அம்மனை வழி விடுவதற்கு எலுமிச்சை பழமும் வெற்றிலையும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

Advertisement

வராகி அம்மன் பூஜை

வராகி அம்மனுக்கு பூஜை செய்ய வழக்கம்போல் தினசரி காலை எழுந்து சுத்தபத்தமாக குளித்து பூஜை அறையில் அகல் விளக்கை ஏற்றி விளக்கின் முன் ஒரு

Advertisement
தாம்பூல தட்டை வைத்து அதில் வெற்றிலை வைத்து அதன் மேல் எலுமிச்சம் பழத்தை வைத்து பின் பயபக்தியோடு முழு மனதாக வராகி அம்மனை மனதில் நினைத்துக் கொண்டு ‘ஓம் மோஹி மோஹின்யை நமஹ’ இந்த மந்திரத்தை 27 முறை உச்சரித்து, வராகி அம்மனே மனதார வேண்டிக் கொள்ளுங்கள் மேலும் வாராகி அம்மனுக்கு
Advertisement
நிவேதியமாக வைப்பதற்கு கல்கண்டு அல்லது ஏதேனும் ஒரு பழ வகைகளை எடுத்து விளக்கின் முன் வைத்துக் கொள்ளுங்கள்.

பிரசாதம்

இப்படி வராகி அம்மனை மனதார வேண்டி மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் வராகி அம்மனே மனம் குளிர்ந்து நாம் வைத்திருக்கும் எலுமிச்சம் பழத்தில் வந்து அமர்ந்து கொள்வாள். பின்பு பூஜை நிறைவு செய்து நாம் வைத்திருந்த எலுமிச்சம் பழத்தை வெட்டி அதன் சாறை பிழிந்து வீட்டில் உள்ளவர்களுக்கு பிரசாதமாக குடிக்க கொடுக்கலாம் அல்லது வீட்டில் சமையல்களில் எலுமிச்சை பழம் சேர்த்து சாப்பிடலாம்.

அதுவும் இல்லை என்றால் அந்த எலுமிச்சம் பழத்தை இரண்டு பாதியாக வெட்டி அதில் குங்குமத்தை தடவி வீட்டின் நிலை வாசலில் வைக்கலாம். பின்பு எலுமிச்சம் பழத்தை ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் போட்டு விடுங்கள். இப்படியாக வாராகி அம்மனுக்கு தினசரியும் பூஜை செய்யலாம் அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பூஜை செய்வதன் மூலம் கண் திருஷ்டியில் இருந்து நம்மளையும் நம் சேர்த்து வைத்த சொத்து சுகங்களையும் பாதுகாத்து வளமுடன் வாழ்வதற்கு வராகி அம்மன் உறுதுணையாக இருப்பாள்.

Advertisement
Prem Kumar

Recent Posts

சூரியனின் அருளைப் பெற அக்னி நட்சத்திரத்தில் என்ன செய்ய வேண்டும்?

கிரகங்களில் முதன்மையான கிரகமாக சூரிய பகவான் கருதப்படுகிறார். எனவே, அனைத்து வழிபாடுகளிலும் சூரிய பகவானை வழிபடும் முறையை பின்பற்றுகிறோம். அதுமட்டுமின்றி…

26 நிமிடங்கள் ago

கோதுமை ரவை வெண்பொங்கல் ஒருமுறை இப்படி செய்து பாருங்க! காலை டிபனுக்கு பக்காவாக இருக்கும்!

தென்னிந்திய சமையலில் காலை உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இட்லி, தோசை, பூரி, கிச்சடி, பொங்கல், வடை, சாம்பார் போன்ற…

2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 04 மே 2024!

மேஷம் இன்று அதிகம் சாப்பிடாதீர்கள். பொருளாதாரப் பக்கம் வலுப்பெற வாய்ப்புள்ளது. இன்று வீடு பராமரிப்பு அல்லது மாற்றம் தொடர்பான திட்டங்களை…

4 மணி நேரங்கள் ago

கிவி தர்பூசணி வாங்கி சூப்பரான கிவி தர்பூசணி மாக்டெயில் இப்படி செய்து கொடுத்து அசத்துங்கள்!

கோடைக்காலத்தில் அதிகமாக கிடைக்கும் பழங்களில் ஒன்று தர்பூசணி. ஆனால், நம்மில் பலர் தர்பூசணியை வெட்டியோ அல்லது ஜூஸ் செய்தோ குடிப்போம்.…

14 மணி நேரங்கள் ago

குருபகவான் மற்றும் சூரிய பகவானின் சேர்க்கை நடைபெறும் மே மாதத்திற்கான ராசி பலன்கள்

மே மாதத்தில் குரு பெயர்ச்சி பலன்கள் ஏற்கனவே பல ராசிகளுக்கு தாக்கம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது அந்த வகையில் மே மாதத்தில்…

16 மணி நேரங்கள் ago

ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு இந்த சூப்பரான இட்லி மாவு போண்டா செஞ்சு சாப்பிடுங்க!

மாலை நேரத்தில் எப்பவுமே டீ காபியோட ஏதாவது ஒரு ஸ்னாக்ஸ் சாப்பிட்டால் நல்லா இருக்கும் அப்படின்னு தோணும் ஆனா கடைகள்ல…

16 மணி நேரங்கள் ago