Home சைவம் கன்னியாகுமரி ஸ்பெஷல் வெறும் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

கன்னியாகுமரி ஸ்பெஷல் வெறும் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நம்ம வீட்ல காய்கறிகள் இல்ல அப்படின்னா ஏதாவது கலவை சாதம் செய்வோம். இல்ல நான் வெறும் குஸ்கா மாதிரி செஞ்சு ஏதாவது முட்டை மசாலா மாதிரி செஞ்சு சாப்பிடுவோம் ஆனா குஸ்கா செய்வதற்கும் கூட வீட்ல எந்த பொருட்களும் இல்லை அப்படின்னா கவலையே படாதீங்க கன்னியாகுமரி நாகர்கோவில் ஸ்பெஷல் வெறும் குழம்பு செஞ்சு சாப்பிடுங்க.

-விளம்பரம்-

இந்த வெறும் குழம்பு செய்வதற்கு பத்து நிமிஷம் போதும் சூப்பரா செஞ்சு முடிச்சிடலாம் டேஸ்ட் ரொம்ப வெரி சூப்பரா இருக்கும் சுட சுட சாதத்துக்கு இந்த வெறும் குழம்பு ஊத்தி ஏதாவது அப்பளம் பொரிச்சு சாப்பிட்டா கூட சூப்பரான டேஸ்ட்ல இருக்கும். சுடு சாதத்துக்கு மட்டுமில்லாமல் இட்லி, தோசை இரண்டுக்கும் கூட ஊத்தி சாப்பிடலாம். டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும். இந்த வெறும் குழம்பு செய்வதற்கு நிறைய பொருட்கள் எல்லாம் தேவைப்படாது ரொம்ப குறைவான பொருட்கள் மட்டுமே நமக்கு போதும்.

அவசரத்துல நீங்க என்னைக்காவது சமையல் செஞ்சா கூட டக்குனு செய்ற மாதிரி இந்த வெறும் குழம்பு செஞ்சுடலாம். ஈஸியா செஞ்சு முடிச்சிடலாம். சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் இந்த குழந்தை விரும்பி சாப்பிடுவாங்க யாராவது டக்குனு விருந்தளிகள் வந்துட்டா கூட அவங்களுக்கு வீட்டில் சாப்பிட எதுவும் இல்லை நான் பத்து நிமிஷத்துல இந்த வெறும் குழம்பு செஞ்சுடலாம் இப்ப வாங்க இந்த வெறும் குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

கன்னியாகுமரி வெறும் குழம்பு | Kanniyakumari Kulambu

வெறும் குழம்பு செய்வதற்கு பத்து நிமிஷம் போதும் சூப்பரா செஞ்சு முடிச்சிடலாம் டேஸ்ட் ரொம்ப வெரி சூப்பரா இருக்கும் சுட சுட சாதத்துக்கு இந்த வெறும் குழம்பு ஊத்தி ஏதாவது அப்பளம் பொரிச்சு சாப்பிட்டா கூட சூப்பரான டேஸ்ட்ல இருக்கும். சுடு சாதத்துக்கு மட்டுமில்லாமல் இட்லி, தோசை இரண்டுக்கும் கூட ஊத்தி சாப்பிடலாம். டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும். இந்த வெறும் குழம்பு செய்வதற்கு நிறைய பொருட்கள் எல்லாம் தேவைப்படாது ரொம்ப குறைவான பொருட்கள் மட்டுமே நமக்கு போதும்.
Prep Time10 minutes
Active Time20 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Kanniyakumari Verum Kulambu
Yield: 4
Calories: 328kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 6 சின்ன வெங்காயம்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 1 புளி நெல்லிக்காய் அளவு
  • 1 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 2 காய்ந்த மிளகாய்
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் புளியை ஊற வைத்துக் கொள்ளவும்
  • ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் சின்ன வெங்காயம் ஊற வைத்த புளிசீரகம் பச்சை மிளகாய், மஞ்சள் தூள் மிளகாய் தூள் அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
  • அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்
  • பச்சை வாசனை போன பிறகு ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை காய்ந்து மிளகாய் சேர்த்து தாளித்து கொட்டினால் சுவையான வெறும் குழம்பு தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 328kcal | Carbohydrates: 79g | Protein: 23g | Sodium: 6.9mg | Potassium: 1.7mg | Vitamin C: 7.9mg | Calcium: 7mg

இதையும் படியுங்க : ருசியான இந்த கோவைக்காய் சாம்பார் வச்சு பாருங்க. சாம்பார்ன்னா இப்படித்தான் இருக்கணும்னு எல்லோரும் உங்கள பாராட்டுவாங்க!!!