- Advertisement -
பொதுவாக நம் வீட்டில் மட்டன் பயன்படுத்தி உணவு தயாரிப்பது என்றால் மட்டன் குழம்பு மற்றும் மட்டன் கிரேவி என அதிகபட்சமாக இந்த இரு வகையிலான மட்டனை தான் அதிகபட்சமாக தயார் செய்து சாப்பிட பரிமாறுவோம். இது நமக்கே சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருககும். இனி இந்த கவலை உங்களக்கு வேணடாம். ஆம், இன்று இந்த பதிவில் கேரளா மட்டன் குருமா எப்படி செய்வது என்று பார்க்க இருக்கிறோம். அதுவும் சாப்பாட்டுக்கு பெயர் போன கேரளாவின் மட்டன் குருமா பிரபலமானது என்று சொல்லலாம். இன்று கேரளா ஸ்டைலில் மட்டன் குருமா செய்வது எப்படி, தேவையான பொருட்கள் மற்றும் செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
-விளம்பரம்-
சுவையான கேரளா மட்டன் குருமா

Yield: 4 PERSON
Calories: 294kcal
Equipment
- 1 குக்கர்
- 1 கடாய்
- 1 மிக்ஸி
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- ½ KG மட்டன்
- 2 பெரியவெங்காயம்
- 1 PIECE பட்டை
- 3 PIECE ஏலக்காய்
- 3 PIECE கிராம்பு
- 1 TBSP சோம்பு
- 1 TBSP கசகசா
- ½ கப் தேங்காய் பால்
- 2 TBSP இஞ்சி பூண்டு விழுது
- 1 TBSP மல்லித்தூள்
- 2 TBSP மஞ்சள் தூள்
- மிளகாய் தூள் சிறிது
- 1 TBSP மிளகு தூள்
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
- 1 TBSP முந்திரி பேஸ்ட்
- கொத்த மல்லி சிறிது
செய்முறை
- முதலில் வாங்கி வைத்திருக்கும் மட்டனை இரண்டு தண்ணீர் வைத்து நன்றாக அலசி எடுத்துக் கொள்ளுங்கள் பிறகு மட்டனை குக்கரில் வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு போட்டு முடிவ விடவும் 3 விசில் வரும் வரை வைக்கவும்.
- அதன்பின் இன்னொரு அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடு ஏறும் வரை காத்திருக்கவும் எண்ணெய் சூடேறியவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய், கசகசா, மற்றும் கடல் பாசி போன்றவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள்.
- பின்பு அதனுடன் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும், வெங்காயம் பொன்னிறமாக வரும் முறை வதக்கி கொள்ளுங்கள் வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் மஞ்சள் தூள், மல்லித்தூள், சிறிதளவு மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
- பின் கடாயை இறக்கி சூடு ஆறும் வரை காத்திருக்கவும் சூடு ஆறியுடன் மிக்ஸி ஜாரில் போட்டு மை போல அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் குக்கரில் வைத்த மட்டன் மூன்று விசில் வந்தவுடன் அதை இறக்கி விடுங்கள்.
- பின்பு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அரைத்து வைத்துள்ள விழுதை போட்டு அதனுடன் தேங்காய் பால், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- நன்றாக கொதித்து வரும் நிலையில் குக்கரில் வைத்த மட்டனை அந்த தண்ணீருடன் கடாயில் ஊற்றி நன்றாக கொதிக்க விடுங்கள் பின்பு முந்திரிப்பருப்பு பேஸ்ட் சிறிதளவு சேர்க்கவும்.
- பின் கடாயில் உள்ள தண்ணீர் வற்றி குருமா பதத்திற்கு வரும் வரை கொதிக்க விடுங்கள் பதத்திற்கு வந்தவுடன் இறக்கி விடுங்கள். பின்பு சிறிதளவு கொத்தமல்லியை தூவி விடுங்கள் இப்போது சுவையான மட்டன் குருமா இனிதே தயாராகிவிட்டது.
Nutrition
Serving: 4PERSON | Calories: 294kcal | Protein: 25g | Cholesterol: 97mg | Sodium: 72mg | Potassium: 310mg
- Advertisement -