ரொட்டி, சப்பாத்தி , இட்லி ,தோசைக்கு ஏற்ற கர்நாடக ஸ்பெஷல் சவஜி சேர்வா இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

இட்லி, பரோட்டா, சப்பாத்தி, பூரி இதுக்கு எல்லாம் நம்ம ரொம்ப அதிகமா விரும்பி சாப்பிடுறது சேர்வாக்கள் தான். விரும்பி சாப்பிடாமல் யாருமே இருக்க மாட்டாங்க. அப்படி கர்நாடகாவில் ஸ்பெஷலான சவஜி சேர்வாய் எப்படி செய்யறது அப்படிங்கறது இந்த பதிவில் தெரிந்துகொள்ள இருக்கிறோம். இந்த சவஜி சேர்வா முட்டைய யூஸ் பண்ணி பண்றதால எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும்.

-விளம்பரம்-

நீங்க வீட்ல இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி இந்த மாதிரி எது பண்ணாலும் அது கூட நீங்க இந்த சேர்வா செஞ்சு கொடுத்தீங்கன்னா எல்லாரும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. ரொம்பவே ருசியான இந்த சேர்வா செய்யறதுக்கு ரொம்பவே சுலபமாக இருக்கும். ரொம்பவே ஈசியா இதுக்கு ஒரு மசாலாவை அரைச்சு ரொம்ப சுலபமா இந்த சவஜி சேர்வாவ நாம செய்து முடிச்சிடலாம். ரொம்பவே போர் அடிக்குது ரொம்ப சுலபமா ஏதாவது செஞ்சு கொடுக்கணும்.

- Advertisement -

அப்படின்னா வீட்ல முட்டை மட்டும்தான் இருக்கு அப்படிங்கற பட்சத்துல கூட நீங்க இந்த சவஜி சேர்வாவ ரொம்பவே ஈஸியா செய்து எல்லாருக்கும் பரிமாறி அவங்களோட பாராட்டுகளையும் பெற்று விடலாம். வித்தியாசமான உணவுகளை ருசி பாக்குறது எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும் அப்படி நீங்க இந்த மாதிரி வித்தியாசமா செய்து கொடுக்கும்போது அவங்க ரொம்பவே விருப்பப்பட்டு சாப்பிடுவாங்க. சரி வாங்க எப்படி இந்த சர்ஜரி சேரவா செய்யறது அப்படிங்கிறது தெரிஞ்சுக்கலாம்.

Print
No ratings yet

கர்நாடக சவஜி சேர்வா | Karnataka Savaji Serva In Tamil

கர்நாடகாவில் ஸ்பெஷலான சவஜி சேர்வாய் எப்படி செய்யறது அப்படிங்கறது இந்த பதிவில் தெரிந்துகொள்ள இருக்கிறோம். முட்டை மட்டும்தான் இருக்கு அப்படிங்கற பட்சத்துல கூட நீங்க இந்த சவஜி சேர்வாவ ரொம்பவே ஈஸியா செய்து எல்லாருக்கும் பரிமாறி அவங்களோட பாராட்டுகளையும் பெற்று விடலாம். வித்தியாசமான உணவுகளை ருசி பாக்குறது எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும் அப்படி நீங்க இந்த மாதிரி வித்தியாசமா செய்து கொடுக்கும்போது அவங்க ரொம்பவே விருப்பப்பட்டு சாப்பிடுவாங்க. சரி வாங்க எப்படி இந்த சர்ஜரி சேரவா செய்யறது அப்படிங்கிறது தெரிஞ்சுக்கலாம்.
Prep Time5 minutes
Active Time5 minutes
Course: Breakfast, Side Dish
Cuisine: karnataka
Keyword: Karnataka Savaji Serva
Yield: 4
Calories: 84kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 4 முட்டை
  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • 2 துண்டு இஞ்சி
  • 5 பல் பூண்டு
  • 2 பச்சைமிளகாய்
  • 1 தக்காளி
  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • 1 ஏலக்காய்
  • 1/4 கப் தேங்காய்
  • 10 முந்திரிபருப்பு
  • 1 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1 ஸ்பூன் மிளகுதூள்
  • 1 வெங்காயம்
  • 1 ஸ்பூன் குழம்பு மிளகாய்தூள்
  • 1/2 ஸ்பூன் பிரியாணி மசாலா
  • 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 2 ஸ்பூன் தயிர்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் முட்டையை வேகவைத்து ஓடை உரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில் மிளகாய் தூள் ,மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி வேகவைத்து
  • உரித்தெடுத்து வைத்துள்ள முட்டைகளை லேசாக மேலே கீறி எண்ணெயில் சேர்த்து வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி, பச்சை மிளகாய் , இஞ்சி, பூண்டு சேர்த்துக் கொள்ளவும்.
  •  பின்பு அதில் தக்காளி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், முந்திரி, தேங்காய் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் சேர்த்து அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் அளவிற்கு வதக்கிக் கொள்ளவும்
  • மசாலா வாசனை போன பிற குழம்பு மிளகாய் தூள், பிரியாணி மசாலா தூள்,மஞ்சள் தூள் தேவையான அளவு  உப்பு சேர்த்து கலந்து விட்டு சேர்வாவிற்கு தேவையான அளவு நீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
  • சேர்வா நன்றாக கெட்டி பதத்திற்கு வந்த பிறகு வறுத்து எடுத்து வைத்துள்ள முட்டைகளை அதில் சேர்த்து நன்றாக கலந்து சூடாக பரிமாறினால் கர்நாடகா ஸ்பெஷல் சவஜி சேர்வா தயார்.
  •  இது தோசை, பூரி ,சப்பாத்தி பரோட்டாவுடன் சேர்த்து சாப்பிட ரொம்பவே அருமையாக இருக்கும்.

Nutrition

Serving: 200g | Calories: 84kcal | Saturated Fat: 5.8g | Monounsaturated Fat: 6.6g | Calcium: 2.6mg | Iron: 21mg

இதையும் படியுங்கள் : நண்டு குழம்பு தோற்று போய்விடும் அளவுக்கு ருசியான இந்த மிளகு சால்னா செய்து பாருங்க!