- Advertisement -
தினமும் மதியும் குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கறிவேப்பிலை சாதம் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம்
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : சுவையான தேங்காய் சாதம் கேரளா ஸ்டைலில் இப்படி செஞ்சி பாருங்க!
- Advertisement -
சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த கறிவேப்பிலை சாதம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
கறிவேப்பிலை சாதம் | karuveppilai Saatham Receipe in Tamil
தினமும் மதியும் குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கறிவேப்பிலை சாதம் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Yield: 4 people
Calories: 284kcal
Equipment
- 1 குக்கர்
- 1 கடாய்
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- 1 cup அரிசி
- 5 கொத்து கறிவேப்பிலை
- 2 tbcp எண்ணெய்
- ½ tsp பெருங்காயம்
- 5 மிளகாய் வற்றல்
- 1 tbsp நெய்
- 1 tbsp உளுத்தம்பருப்பு
- 1 tsp கடுகு
- 1 tbsp கடலைபருப்பு
- தேவையான அளவு உப்பு
செய்முறை
- முதலில் குக்கரில் அரிசி போட்டு தண்ணீர் ஊற்றி அதில் சிறிதளவு எண்ணெய் விட வேண்டும்.சாதம் உதிரியாக வரும் மாதிரி வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு நெய்யில் உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு,கருவேப்பிலை ஆகியவற்றை நன்றாக நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
- பின்னர் கலவை ஆறிய பிறகு அதனை பொடியாக அரைத்து வைத்து கொள்ள வேண்டும். பின்னர் வேறு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
- பின்னர் வடிகட்டிய சாதத்தில் அரைத்து வைத்துள்ள கருவேப்பிலை பொடியை தூவி சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
- அதில் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்போது சுவையான கறி வேப்பிலை சாதம் தயார்.
Nutrition
Serving: 400g | Calories: 284kcal | Carbohydrates: 89g | Sodium: 1.2mg | Potassium: 2mg | Sugar: 1.4g | Vitamin A: 8.4IU | Vitamin C: 6.7mg | Calcium: 34mg