- Prep
- 10 min
- Cook
- 20 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian, Kerala
- Course
- Breakfast, LUNCH
குழந்தைகள் அனைவருக்கும் தேங்காய் சாதம் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். காலை நேரத்தில் குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு வேகமாகவும், நல்ல சுவையுடனும் ஒரு அருமையான கலவை சாதம் இந்த தேங்காய் சாதம். தேங்காய் சாதத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஸ்டைலாக செய்வார்கள். நாம் கேரளா ஸ்டைலில் தேங்காய் சாதத்தில்
இதையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் சுவையான கேரளா மத்தி மீன் வறுவல் செய்வது எப்படி ?
வேர்க்கடலை, முந்திரி பருப்பு சேர்த்து செய்யும் போது அதன் டேஸ்ட் இன்னும் சூப்பராக இருக்கும். குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவர்கள். அதனால் இன்று இந்த கேரளா தேங்காய் சாதம் செய்வது எப்படி, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்.
Ingredients
Method
முதலில் அரிசியை நன்றாக 1/2 மணிநேரம் ஊற வைத்து சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
பிறகு அடுப்பில் ஒரு குக்கரை வைத்து, அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி, கழுவி வைத்துள்ள அரிசியைப் போட்டு, குக்கரை மூடி 2-3 விசில் விட்டு இறக்கி, சாதத்தை தட்டில் போட்டு சில நேரம் உலர வைக்கவும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி கடாய் நன்கு காய்ந்ததும், கடுகு, கடலைப் பருப்பு, முந்திரி, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
அடுத்து துருவி வைத்துள்ள தேங்காய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு பொன்னிறம் ஆகும் அளவிற்கு வதக்கி விட வேண்டும்.
கலவையானது ஓரளவு பொன்னிறமாக வந்ததும், சாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு நன்கு கிளறி விட்டு இறக்க வேண்டும். சூப்பரான தேங்காய் சாதம் ரெடியாகிவிட்டது.






